எக்ஸெல் சத்தம் கொடுக்கும்: நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் ஒரு மல்ட்டி மீடியா கம்ப்யூட்டர் என்றால், எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றினைப் பயன்படுத்துகையில், சில செயல்பாடுகளுக்கு ஒலிக்கச் செய்திடும் வகையில் அமைக்கலாம். ஏற்கனவே, நாம் தவறான கீயினை அழுத்துகையில் 'டிங்' என்று நாம் எதிர்பார்க்காத ஒலியை எக்ஸெல் ஒர்க் ஷீட் ஏற்படுத்தும். இதனைச் சற்று விரிவாக, நாம் விரும்பும் செயல்பாடுகளில், விரும்பும் ஒலி ஏற்படும் வகையில் அமைக்கலாம்.
இதற்குக் கீழே கொடுத்துள்ள செயல்பாடுகளை மேற்கொள்ளவும்.
1. முதலில் எக்ஸெல் செயலியை இயக்கவும். (எக்ஸெல் 2007 புரோகிராமில், Office பட்டன் அழுத்தி, கீழாகக் கிடைக்கும் Excel Options என்ற டேப்பில் அழுத்தவும். எக்ஸெல் 2010 மற்றும் எக்ஸெல் 2013 எனில், ரிப்பனில், File டேப் அழுத்தி Options என்பதனைக் கிளிக் செய்திடவும்.
2. இப்போது கிடைக்கும் டயலாக் பாக்ஸில், இடது பக்கம் உள்ள Advanced என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
3. இப்போது கிடைக்கும் பிரிவுகளில் Provide Feedback with Sound என்ற செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஒன்றை ஏற்படுத்தவும்.
4. அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி, எந்த ஒலி வேண்டும் என்பதனை கண்ட்ரோல் பேனல் சென்று, Sounds Applet மூலம் மாற்றிக் கொள்ளலாம். இந்த செயல்பாட்டினை, எக்ஸெல் உள்ளாக மேற்கொள்ள முடியாது.
ஒன்றுக்கு மேற்பட்ட ஒர்க் ஷீட் பயன்படுத்த: எக்ஸெல் ஒர்க் புக் தயாரிப்பில், ஒரே நேரத்தில் பல ஒர்க் ஷீட்களைத் திறந்து வைத்து நாம் பயன்படுத்த விருப்பப்படுவோம். இதற்கென விண்டோவில் ஒவ்வொரு ஒர்க் ஷீட்டிற்கும் மாறுவதற்கு, கீழாக உள்ள டேப்பிற்கு மவுஸ் கர்சரைக் கொண்டு சென்று செயல்படுத்த வேண்டும். கீ போர்டினையே பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு இது சற்று சிரமத்தைத் தரும். இதற்கான சுருக்கு வழி ஒன்று எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் தரப்பட்டுள்ளது. ஒர்க் ஷீட் மாற விருப்பப்படுகையில், Ctrl+F6 கீகளை அழுத்தவும். இந்த கீகளை அழுத்துகையில், ஒர்க் புக்குகளின் டேப்கள் வரிசையாகத் தேர்ந்தெடுக்கப்படுவதனைப் பார்க்கலாம். ஐந்து ஒர்க்புக்குகள் திறந்திருந்தால், ஐந்தாவது ஒர்க் ஷீட் செல்ல, ஐந்து முறை Ctrl+F6 கீகளை அழுத்த வேண்டும்.
ஆல்ட்+ஷிப்ட் கட்டளைகள்: எக்ஸெல் தொகுப்பில் ஆல்ட்+ஷிப்ட் கீகளுடன் பங்சன் கீகளை அழுத்தினால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளை இங்கே பார்க்கலாம்
F1 +ALT+SHIFT : புதிய ஒர்க் ஷீட் ஒன்று திறக்கப்படும்.
F2 +ALT+SHIFT : அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒர்க்புக் சேவ் செய்யப்படும்.
F3 +ALT+SHIFT: நெட்டு மற்றும் படுக்கை வரிசை லேபிள்கள் பயன்படுத்தி பெயர்களை உருவாக்கலாம்.
F9 +ALT+SHIFT திறந்திருக்கும் அனைத்து ஒர்க் ஷீட்களிலும் அனைத்து ஒர்க் புக்குகளிலும் அனைத்து கால்குலேஷன்களும் செயல்படுத்தப்படும்.
F10 +ALT+SHIFT ஸ்மார்ட் டேக்கிற்கான மெனு மற்றும் மெசேஜ் திறக்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்மார்ட் டேக் திறக்கப்பட்டிருந்தால் அடுத்த டேக் சென்று அதற்கான மெனு மற்றும் மெசேஜ் திறக்கப்படும்.
F11+ALT+SHIFT: மைக்ரோசாப்ட் ஸ்கிரிப் எடிட்டர் திறக்கப்படும்.
--------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக