அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 18 மே, 2016

வேர்ட் டிப்ஸ்.... ஹைபன்: டேபிளில் நெட்டு வரிசை அகலம்: கண்ட்ரோல் கட்டளைகள்:

வேர்ட் : ஹைபன்: வேர்ட் டாகுமெண்ட்களில் கோட்டின் நீளத்தைக் கணக்கிடுகையிலும், சொற்களை அடுத்த வரிக்கு மடக்கிக் கொண்டு செல்கையிலும், ஹைபன் அல்லது டேஷ் இருந்தால் சில
வேளைகளில் பிரித்துவிடுகிறது. நாம், ஒரு வரி இது போல பிரிக்கப்படுவதனை விரும்புவதில்லை.



ஏனென்றால், சில தொலைபேசி எண்கள் இது போன்ற டேஷ்களைக் கொண்டு அமைத்திருப்போம். இவை பிரிக்கப்பட்டால் அவை சரியாக அமையாது. எனவே பிரிக்க முடியாத ஹைபன்கள் இந்த இடத்தில் அமைக்கப்பட வேண்டும்.

இதற்கு அந்த ஹைபன் அல்லது டேஷ் அமைக்கையில் கண்ட்ரோல் மற்றும் ஷிப்ட் கீகளை ஒரு சேர அழுத்திக் கொண்டு அமைக்க வேண்டும். பிரிக்க முடியாத ஹைபன்களை வேறு ஒரு வகையிலும் அமைக்கலாம்.

1. இன்ஸெர்ட் மெனு சென்று சிம்பல் என்றிருப்பதைத் தேர்ந்தெடுக்கவும். இது இன்ஸெர்ட் சிம்பல் டயலாக் பாக்ஸைக் கொடுக்கும்.

2. இந்த சிறிய விண்டோவில் ஸ்பெஷல் கேரக்டர்ஸ் டேப்பில் கிளிக் செய்திடவும்.

3. இதன் பின் நான் பிரேக்கிங் ஹைபன் கேரக்டரை ஹைலைட் செய்திடவும்.

4. பின்னர் இன்ஸெர்ட் என்பதில் கிளிக் செய்திடவும்.

5. அடுத்து கேன்சல் என்பதில் கிளிக் செய்வதன் மூலம் டயலாக் பாக்ஸை மூடவும்.

டேபிளில் நெட்டு வரிசை அகலம்: வேர்ட் டாகுமெண்ட்டில், டேபிள் ஒன்று தயாரிக்கும் போது, அதன் நெட்டு வரிசையின் அகலத்தினை மிகத் துல்லியமாக அமைக்க முடியும். அதற்குக் கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றவும்.

1. எந்த நெட்டு வரிசையின் அகலத்தை மாற்றி அமைக்க விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும்.

2. ரிப்பனில் Layout என்னும் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.

3. டேபிள் குரூப்பில், Properties என்னும் ஆப்ஷனை கிளிக் செய்திடவும். வேர்ட் டேபிள் ப்ராப்பர்ட்டீஸ் (Table Properties) என்னும் டயலாக் பாக்ஸைக் காட்டும்.

4. இங்கு Column என்னும் டேப் காட்டப்பட வேண்டும்.

5. அடுத்து Preferred Width என்பதைப் பயன்படுத்தி, நெட்டு வரிசையின் அகலத்தை, நீங்கள் எண்ணுகிறபடி அமைக்கவும்.

6. அடுத்த நெட்டு வரிசையினைத் தேர்ந்தெடுக்க, Previous Column அல்லது Next Column பட்டன்களில் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும்.

7. மாற்ற வேண்டிய அனைத்து நெட்டு வரிசைகளிலும் மேற்படி செயல்பாட்டினை மேற்கொள்ள மேலே 5 மற்றும் 6 நிலைகளில் கூறப்பட்டுள்ளவற்றை மேற்கொள்ளவும்.

8. முடித்த பின்னர், ஓகே கிளிக் செய்து ப்ராப்பர்ட்டீஸ் டயலாக் பாக்ஸை மூடவும்.

கண்ட்ரோல் கட்டளைகள்:
Ctrl+a: டாகுமெண்ட் முழுவதையும் தேர்ந்தெடுக்க.
Ctrl+b: அழுத்தமான (Bold) வடிவில் எழுத்தமைக்க.
Ctrl+c: தேர்ந்தெடுத்ததை, கோப்பினை நகலெடுக்க (Copyp).
Ctrl+d: ஓர் எழுத்தின் (Font) வடிவை மாற்றி அமைக்க.
Ctrl+e: நடுவே டெக்ஸ்ட் அமைக்க.
Ctrl+f: குறிப்பிட்ட சொல் அல்லது டெக்ஸ்ட் அமைந்துள்ள இடத்தைக் கண்டறிந்து, அதன் இடத்தில் வேறு ஒரு சொல் அமைக்க. மீண்டும் தேடலைத் தொடர Alt+Ctrl+y.
Ctrl+g: ஓரிடம் செல்ல.
Ctrl+h: (ஒன்றின் இடத்தில்) மற்றொன்றை அமைத்திட.
Ctrl+i: எழுத்து / சொல்லை சாய்வாக அமைக்க .
Ctrl+j: பத்தி ஒன்றை இருபக்கமும் சீராக, நேராக (Justify) அமைக்க.
Ctrl+k: ஹைப்பர் லிங்க் ஒன்றை ஏற்படுத்த.
Ctrl+l : பத்தி ஒன்றை இடது பக்கம் சீராக நேராக அமைக்க.
Ctrl+m: பத்தியினை இடதுபுறமாக சிறிய இடம் விட.
Ctrl+n: புதிய டாகுமெண்ட் உருவாக்க.
Ctrl+o: டாகுமெண்ட் ஒன்றைத் திறக்க.
Ctrl+p: டாகுமெண்ட் ஒன்றை அச்சடிக்க
Ctrl+q: பத்தி அமைப்பை நீக்க.

--------------------------------------------
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக