பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ் அப் புரோகிராமில் தற்போது ஒரு புதிய வசதி தரப்பட்டுள்ளது. பல கோடிப் பேர் தங்கள் மெசேஜ் அனுப்பப் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களுக்கான வாட்ஸ் அப் புரோகிராம், சென்ற மே 10 முதல் டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களுக்கும் வெளியிடப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் மேக் கம்ப்யூட்டர் மற்றும் விண்டோஸ் சிஸ்டம் பயன்படுத்தப்படும் பெர்சனல் கம்ப்யூட்டர்களிலும் பயன்படுத்தப்படும் வகையில், வாட்ஸ் அப் வெளியிடப்பட்டுள்ளது.
நாம் நம் ஸ்மார்ட் போனில் எப்படி வாட்ஸ் அப் புரோகிராமினைப் பயன்படுத்துகிறோமோ, அதே போல, பெர்சனல் கம்ப்யூட்டரிலும், இதனைப் பயன்படுத்தலாம். டெக்ஸ்ட், போட்டோ, விடியோ மற்றும் பைல் என அனைத்தையும் அனுப்பலாம். இதன் மூலம், அனைத்து வகை ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் இயங்கும் புரோகிராமாக வாட்ஸ் அப் உயர்ந்துள்ளது. ஒரு கோடி பயனாளர்களுக்கு மேல் வாட்ஸ் அப் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது ஆப்பிள் தரும் iMessage மற்றும் மைக்ரோசாப்ட் தரும் ஸ்கைப் போன்றவற்றிற்குப் போட்டியாக, வாட்ஸ் அப் உயரும்.
30 கோடிப் பயனாளர்களுக்கு மேல் பயன்படுத்தும் ஸ்கைப், ஸ்மார்ட் போனிலும், பெர்சனல் கம்ப்யூட்டரிலும் மிக எளிதாகப் பயன்படுத்தப்படும் மெசேஜிங் அப்ளிகேஷனாக இயங்கி வருகிறது. வாட்ஸ் அப் இதன் விடியோ பயன்பாட்டினை இன்னும் எட்டவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, விண்டோஸ் இயக்கத்திற்கான புதிய வாட்ஸ் அப் செயலி ஒன்றை வாட்ஸ் அப் வெளியிட்டுள்ளது.
இதன் மூலம், வாட்ஸ் அப் வாடிக்கையாளர்கள், டாகுமெண்ட்களைத் தங்களுக்கிடையே பகிர்ந்து கொள்ளலாம். பி.டி.எப். பைல்களையும் இதன் வழியே அனுப்பலாம். வாட்ஸ் அப் தளத்திற்கு, விண்டோஸ் இயக்கம் ஒரு சிறந்த வழியாகும். ஏற்கனவே, விண்டோஸ் போன் இயக்கத்தில் இந்த வசதி தரப்பட்டிருந்தது. தற்போது, விண்டோஸ் சிஸ்டம் மட்டுமின்றி, மேக் கம்ப்யூட்டர்களிலும் இந்த வசதி தரப்பட்டுள்ளது.
இவற்றை https://www.whatsapp.com/download என்கிற இணைய தளத்தில் பெற்றுக் கொள்ளலாம். பெர்சனல் கம்ப்யூட்டர், லேப்டாப் கம்ப்யூட்டரில் இதனை இயக்குவது எப்படி எனப் பார்க்கலாம். இதற்கு, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் 32 அல்லது 64 பிட் இயக்கத்தில் இயங்குவதாக இருக்க வேண்டும். உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரின் செயல் திறனுக்கேற்ப, 32 பிட் அல்லது 64 பிட் இயக்கத்திற்கான செயல் கோப்பினைத் தேர்ந்தெடுத்து, அதனைத் தரவிறக்கம் செய்திடவும்.
இதற்கான செயலியைத் தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் இயக்கிக் கொள்ள வேண்டும். அப்போது உங்கள் மொபைல் போனில் உள்ள வாட்ஸ் அப் செயலியினை இணைத்துக் காட்ட ஒரு குறியீட்டுக் கட்டம் தரப்படும்.
உங்கள் மொபைல் போனில் வாட்ஸ் அப் செயலியை இயக்கி, மெனுவினைப் பெறவும். மெனுவில், Whats App for Web என்பதனைத் தேர்ந்தெடுத்தால், குறியீட்டினை ஸ்கேன் செய்திடும் வசதி காட்டப்படும். இது கம்ப்யூட்டர் திரையில் காட்டப்படுவதனை ஸ்கேன் செய்து, மொபைல் போனில் உள்ள வாட்ஸ் அப் செயல்பாட்டினைத் தரும். அதே தொடர்புகள், அழைப்புகள் போன்ற செயல்பாடுகளை இதிலும் மேற்கொள்ளலாம். மொபைல் போன் இணைய இணைப்பில், வாட்ஸ் அப் இணைப்பில் இருக்க வேண்டியது அவசியம். இது ஒன்றும் பெரிய பிரச்னையாகப் பல வாடிக்கையாளர்களுக்குத் தெரியாது. ஏனென்றால், பெரும்பாலானவர்கள், இப்போது, தங்கள் மொபைலில், இணைய இணைப்பினை எப்போதும் கொண்டிருக்கின்றனர்.
பெர்சனல் கம்ப்யூட்டரில் இது சிறப்பாகவே செயல்படுகிறது. ஏறத்தாழ மொபைல் போனில் இயங்குவது போலவே, டெஸ்க்டாப் கம்ப்யூட்டரிலும் இதன் செயல்பாடு தெரிகிறது. ஒரு வேறுபாடு கூற வேண்டும் என்றால், டெஸ்க்டாப் வாட்ஸ் அப் செயலியில், பெரிய அளவிலான நம் மெசேஜை வேகமாக அமைக்கலாம். பைல்கள் மற்றும் இமேஜ்களை எளிதாகத் தேர்ந்தெடுத்து அனுப்பலாம். ஏனென்றால், டெஸ்க்டாப் கம்ப்யூட்டருடன் இணைந்த பெரிய அளவிலான கீ போர்ட் கிடைக்கிறது. அத்துடன், பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டரில் மாறா நிலையில் கிடைக்கும் அனைத்து வசதிகளையும் பயன்படுத்தலாம்.
போனில் செயல்படுத்துவது போலவே, நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்பலாம். ஆல்ட் + டேப் அழுத்தி தகவலை டைப் செய்திடலாம். பெர்சனல் கம்ப்யூட்டரில் தொடங்கியவுடன், மொபைல் போனை பாக்கெட்டில் வைத்துவிடலாம். வெளியே எடுக்க வேண்டியதில்லை. போனில் செயல்பட்டது போலவே, டெஸ்க்டாப் நோட்டிபிகேஷன் மற்றும் கீ போர்ட் ஷார்ட்கட் கீ தொகுப்புகள் இதிலும் செயல்படுகின்றன.
பெர்சனல் கம்ப்யூட்டரிலும் அதே வகை தகவல் சுருக்கு முறையினை, வாட்ஸ் அப் பயன்படுத்தப்படுகிறது.
நூறு கோடிக்கு மேல் பயனாளர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் அப் செயலி, தான் வழங்கிவரும் சேவைகளைத் தற்போது நீட்டித்துள்ளது.
இதனை வாட்ஸ் அப் நேயர்கள் அனைவரும் பயன்படுத்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக