எக்ஸெல் புரோகிராமில், உங்களுடைய ஸ்ப்ரெட் ஷீட் ஒன்று அல்லது இரண்டுக்கு மேற்பட்ட பக்கங்களைக் கொண்டதாக அமைந்தால், அச்சிடுகையில், நீங்கள் அந்த ஒர்க் ஷீட் பக்கங்களைச் சரியாக அமைத்திட, அதில் பக்க எண்களை அமைத்தால் நல்லது என்று எண்ணுவீர்கள்.
உங்கள் ஸ்ப்ரெட் ஷீட்டில், எக்ஸெல் தானாகவே பக்க எண்களை அமைக்கும் வசதியைத் தருகிறது. அது மட்டுமின்றி, பக்க எண்கள் எப்படி அமைய வேண்டும் என்பதையும், தொடக்க எண் எதுவாக இருக்க வேண்டும் என்பதையும் நீங்கள் விரும்பியவகையில், கட்டுப்படுத்தும் வகையில் அமைக்கலாம்.
பக்க எண்களை இணைக்கக் கீழ்க்காணும் செயல்முறைகளை மேற்கொள்ளவும்.
1. பக்க எண்கள், ஹெடர் அல்லது புட்டரில் அமைக்கப்படுவதால், Page Layout பிரிவில் இருந்து Page Setup தேர்ந்தெடுக்கவும். இப்போது, எக்ஸெல், Page Setup டயலாக் பாக்ஸைக் காட்டும்.
2. இதில் Header/Footer டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை உறுதி செய்திடவும்.
3. நீங்கள், பக்க எண் எங்கு அமைய வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் Custom Header அல்லது Custom Footer ஐத் தேர்ந்தெடுக்கவும். இப்போது ஹெடர் அல்லது புட்டர் டயலாக் பாக்ஸ் காட்டப்படும்.
4. கர்சரை, இடது, வலது மையமாக உள்ள பெட்டியில் கொண்டு வைக்கவும். இது நீங்கள் பக்க எண் எங்கு அமைக்கப்பட வேண்டும் என்பதனைப் பொறுத்தது.
5. இங்கு page number tool ஒன்று இருப்பதைக் காணலாம். இது ஒரு சிறிய தாளில், அதன் மையத்தில் எண் கொண்டதாக இருக்கும். கர்சர் இருக்கும் இடத்தில் &[Page] என அமைக்கப்படும். இங்கு தான் பக்க எண் அமைக்கப்படும்.
6. அடுத்து ஹெடர் அல்லது புட்டர் டயலாக் பாக்ஸை, ஓகே கிளிக் செய்து மூடவும்.
7. தொடர்ந்து பேஜ் செட் அப் டயலாக் பாக்ஸை மூடவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக