வெகு காலமாக பிகாஸோ பயன்படுத்தியவர்களுக்குச் சற்று ஏமாற்றமாகத்தான் இருக்கும். இலவசமாக இது கிடைத்ததனால், அதே நோக்கில் கீழே சில செயலிகளை, அதன் இடத்தில் பயன்படுத்தத் தருகிறேன்.
முதலாவதாக, Google Photos. கூகுள் பிகாஸாவை மூடுவதற்குக் காரணம், தன் வாடிக்கையாளர்கள், Google Photos பக்கம் வர வேண்டும் என்பதற்காகத்தான். கூகுள் போட்டோஸ் நல்ல தளம்; ஆனால், அது மிகச் சிறப்பான எடிட்டிங் சாப்ட்வேர் அல்ல.
ஆனால், பிகாஸா பழகியவர்கள் இதற்கு மாறிக் கொள்வது எளிது. மேலும், இது மற்ற கூகுள் செயலிகளுடன் தொடர்புடையது.
கூகுள் சர்வீசஸ், கூகுள் ட்ரைவ் என அனைத்து கூகுள் சேவை செயலிகளுடன் இது இணைந்து செயல்படும். புதிய அக்கவுண்ட் திறக்க வேண்டியதில்லை. ஆனால், அடிப்படை வசதிகள் மட்டுமே இதில் கிடைக்கும்.
அடுத்ததாக Flickr. (https://www.flickr.com/) இது ஓர் இமேஜ் பகிர்ந்து கொள்வதற்கான தளம்.
இதில் அக்கவுண்ட் வைத்துக் கொள்பவர்களுக்கு ஒரு டெரா பைட் இடம் கிடைப்பது இதன் சிறப்பு. படங்களை எடிட் செய்திட, சில அடிப்படை டூல்களும் கிடைக்கின்றன.
இது யாஹூ நிறுவனத்திற்குச் சொந்தமானது. ஆனால், விரைவில் வேறு ஒரு நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்படும் எனத் தெரிகிறது.
அடுத்ததாக, ட்ராப் பாக்ஸ் (Drop Box). இது ஒரு சிறந்த க்ளவ்ட் ஸ்டோரேஜ் தளம். உங்களின் போட்டோக்களை நிர்வகிக்க பலவகையான வழிகளை இது தருகிறது.
அடுத்து நாம் கவனிக்க வேண்டியது FastStone Image Viewer. (http://www.faststone.org/) இதுவும் படங்களை நிர்வகித்து சேமித்து வைக்க பல வழிகளைத் தருகிறது.
--------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக