அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 18 மே, 2016

இமெயில் கையெழுத்து என்பது என்ன?

மின் அஞ்சல் கடிதங்களை எழுதி முடிக்கும் போது, நாம் கையெழுத்திட மாட்டோம். அதற்குப் பதிலாக, நம் பெயரை டைப் செய்திடுவோம். சிலர் தங்களின் முகவரிகளையும், தொலைபேசி எண்ணையும் அமைப்பார்கள்.


சிலர், சிறிய படங்களை இணைப்பார்கள். இவற்றை ஒவ்வொரு இமெயில் முடிவிலும் டைப் செய்து அமைப்பதற்குப் பதிலாக, இமெயில் கையெழுத்து (e-signature) என அமைத்துவிட்டால், அஞ்சல் எழுதி முடித்து, அதனை அனுப்புவதற்கான 'Send' பட்டனை அழுத்துகையில், இந்த கையெழுத்திற்கான டெக்ஸ்ட் தானாக இணைக்கப்பட்டு அனுப்பப்படும்.

இதனை யாஹூ மெயிலில் எப்படி அமைப்பது எனப் பார்க்கலாம்.

1. உங்கள் பிரவுசரைத் திறந்து, அதில் www.mail.yahoo.com எனச் செல்லவும். அல்லது www.mail.yahoo.com என டைப் செய்து மெயில் பக்கத்தினைத் திறக்கவும்.

அடுத்து, உங்கள் அக்கவுண்ட் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டினைத் தந்து Sign In பட்டனை அழுத்தவும்.

உங்களுக்கான இன் பாக்ஸ் (Inbox) பக்கம் கிடைக்கும். இதன் வலது மேல் மூலையில், செட்டிங்ஸ் வீல் ஐகான் இருக்கும்.

இதில் கிளிக் செய்திட்டால், கிடைக்கும் மெனுவில், “Settings” அழுத்தவும்.

இனி, செட்டிங்ஸ் மெனு விண்டோ திறக்கப்படும்.

இதில், இடதுபுறம் உள்ள Accounts என்பதில் கிளிக் செய்திடவும்.

பின்னர், உங்கள் இமெயில் முகவரியில் கிளிக் செய்திடவும்.

இங்கு “Append an email signature to the emails you send” என்று உள்ளதன் அருகே உள்ள கட்டத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.

இதன் மூலம், நீங்கள் அமைக்கும் அனைத்து மின் அஞ்சல் கடிதங்களிலும், நீங்கள் அமைக்க இருக்கும், மின் அஞ்சல் கையெழுத்தினை இணைக்க நீங்கள் சம்மதிக்கிறீர்கள்.

தொடர்ந்து, நீங்கள் உங்கள், கையெழுத்துப் பகுதியில் என்னவெல்லாம் அமைய வேண்டும் என்பதனை உருவாக்கலாம்.

அதற்கான பாக்ஸில் தேவையானவற்றை நிரப்பவும்.

இது கீழே உள்ள எடுத்துக் காட்டுதல் படி அமையலாம்.

இதனை நீங்கள் விரும்பும் வகையில் பார்மட் செய்து முடிக்கலாம்.

அனைத்தையும் சேவ் செய்துவிட்டு வெளியேறவும்.

இனி நீங்கள் அமைக்கும் மின் அஞ்சல் கடிதங்களில், நீங்கள் அமைத்த, அஞ்சல் கையெழுத்து இணைக்கப்பட்டு அனுப்பப்படும்.


--------------------------------------
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக