கடைசி பைலுடன் வேர்ட் திறக்க வேர்ட் அல்லது வேறு எந்த புரோகிராம் பயன்படுத்தினாலும், ஒருமுறை முடித்து மறுமுறை இயக்கத் தொடங்குகையில், இறுதியாகத் திறந்து பயன்படுத்திய பைலைத் திறந்து பயன்படுத்த எண்ணுவோம். பைல் மெனு சென்று, பட்டியலைத் திறந்தால், அதில் முதலாவதாகக் கிடைக்கும் பைல் அதுவாகத்தான் இருக்கும். அல்லது ரீசன்ட்லி யூஸ்டு பைல் பட்டியலைப் பெற்றால், அதில் கடைசியாகப் பயன்படுத்திய பைலைப் பெற்று கிளிக் செய்து, பின்னர் இயக்கலாம்.
இந்த கிளிக்குகளை மிச்சம் செய்திடும் வகையில், ஒரு செட்டிங்ஸ் அமைத்தால், வேர்ட் புரோகிராம் திறக்கும் போதே, இறுதியாக நாம் பயன்படுத்திய பைலுடன் வேர்ட் இயங்கத் தொடங்கும். கீழே குறிப்பிட்டுள்ளபடி செட் செய்திடவும்.
1. ஸ்டார்ட் பட்டன் அழுத்தவும்.
2. ரன் தேர்ந்தெடுக்கவும்.
3. இறுதியில் தரப்பட்டுள்ளதை அப்படியே டைப் செய்திடவும்: winword.exe /mFile1
4. ஓகே கிளிக் செய்திடவும்.
இதில் தரப்பட்டுள்ள /m ஸ்விட்ச் ஒரு மேக்ரோ அல்லது கட்டளையை இயக்கும். இந்த இடத்தில், File1 என்பது முன்னரே வரையறுக்கப்பட்ட ஒரு பெயர். ஒரு பைலின் பெயர் என்னவாக இருந்தாலும், இதுவே பெயராக மாறும். இதனை அடுத்து,
1. விண்டோஸ் எக்ஸ்புளோரரில், winword.exe என்ற பைலைக் கண்டறியவும். இது வழக்கமாக, C:\Program Files\Microsoft Office\Office\ folder என்ற இடத்தில் கிடைக்கும்.
2. இதில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Create Shortcut என்பதைத் தேர்ந்தெடுக்கவும். விண்டோஸ் ஷார்ட்கட் ஒன்றை உருவாக்கும். இது பட்டியலின் இறுதியாகக் காட்டப்படும்.
3. பின்னர், புதிய ஷார்ட்கட்டில் ரைட் கிளிக் Send To Desktop என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
4. இனி டெஸ்க்டாப்பில், புதிய ஷார்ட்கட் ஐகானைக் கண்டறியவும்.
5. இதில் ரைட் கிளிக் செய்து, Properties தேர்ந்தெடுக்கவும்.
6. ஷார்ட்கட் டேப்பில், /mFile1 என்ற ஸ்விட்சை ஸ்ட்ரிங்குடன் இணைக்கவும்.
7. ஓகே கிளிக் செய்திடவும்.
இந்த ஷார்ட்கட்டைப் பயன்படுத்தி, எப்போதெல்லாம், வேர்ட் திறக்கப்படுகிறதோ, இறுதியாகப் பயன்படுத்தப்பட்ட பைலுடனேயே, வேர்ட் திறக்கப்படும். ஓர் எச்சரிக்கை. நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வேர்ட் புரோகிராம் பயன்படுத்துபவராக இருந்தால், மேலே 1ல் காட்டப்பட்டுள்ள இடத்தில் சரியான போல்டரின் பெயரைத் தர வேண்டியதிருக்கும்.பாரா வடிவமைப்பை மற்றவற்றிற்கு அமைக்க வேர்ட் தொகுப்பில் கூடுதல் பயன்களைத் தரும் ஒரு சாதனம் பார்மட் பெயிண்டர் என்னும் வசதி ஆகும்.
இதன் மூலம் ஒரு பாரா பார்மட்டினை இன்னொரு பாராவிற்கு மாற்றலாம். முதலில் எந்த பாராவின் பார்மட்டினைக் காப்பி செய்து இன்னொரு பாராவிற்கு மாற்ற விரும்புகிறீர்களோ அதனை செலக்ட் செய்திடவும். பின் டூல் பாரில் பார்மட் பெயிண்டர் என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். பின் எந்த பாராவில் இந்த பார்மட்டினைச் செலுத்த வேண்டுமோ அதனை தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். இதே பார்மட்டைத் தொடர்ந்து காப்பி செய்திட பார்மட் பெயிண்டரில் டபுள் கிளிக் செய்திட வேண்டும். மீண்டும் பார்மட் பெயிண்டரை குளோஸ் செய்திடும் வரை இந்த பார்மட் தொடர்ந்து காப்பி ஆகும். குளோஸ் செய்திட பார்மட் பெயிண்டரில் இன்னொரு முறை கிளிக் செய்திட வேண்டும்.
அல்லது எஸ்கேப் கீயினை அழுத்த வேண்டும். வேர்ட் 2007 தொகுப்பில், பார்மட் பெயிண்டர் பெற, ஹோம் டேப்பில், கிளிப் போர்ட் பிரிவில், வலது மூலையில் இருக்கும் பார்மட் பெயிண்டர் சென்று, மேலே காட்டப்பட்டுள்ள மாற்றங்களைச் செயல்படுத்தலாம். இந்த ஐகான், பெயிண்ட் பிரஷ் ஐகானாகக் கிடைக்கும்.
-------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக