ஒரு கோப்பினை எங்கிருந்து தரவிறக்கம் செய்வது? அப்போது நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கைகள் என்ன? கோப்பு ஒன்றின் தரவிறக்கம் முடிந்துவிட்டதா? என்று எப்படி அறிந்து கொள்வது? கோப்பு எங்கு பதியப்படுகிறது? என்பதனை எப்படி தெரிந்து கொள்வது? நாம் விரும்பும் போல்டரில் தரவிறக்கம் செய்திட முடியுமா? எனப் பலவகையான சந்தேகங்கள் கேள்விகளாக அமைகின்றன. இவற்றிற்கான பதில்களை இங்கு காணலாம்.
ஒரு தரவிறக்கம் என்பது எதுவாகவும் இருக்கலாம். மின் நூல் அல்லது செயலி ஒன்றிலிருந்து தகவல்களாகவோ, கோப்பாகவோ இருக்கலாம். இதனை ஒவ்வொரு பிரவுசரும் ஒரு வகையில் மேற்கொள்கிறது. பெரும்பாலான நேரங்களில், நீங்கள் இணையதளம் ஒன்றிலிருந்து ஏதேனும் ஒன்றைத் தரவிறக்கம் செய்கையில், லிங்க் ஒன்றில் அல்லது பட்டன் ஒன்றில் கிளிக் செய்திட வேண்டியதிருக்கும். எதனை நீங்கள் தரவிறக்கம் செய்கிறீர்கள் என்பதனைப் பொறுத்து இது மாறும். இதில் ஒரு முன்னெச்சரிக்கையை நீங்கள் எதிர்கொள்ள வேண்டும். முதலாவதாக, நீங்கள் தரவிறக்கம் செய்யப்படும் கோப்பு எங்கு உருவானதோ, எந்த நிறுவனத்தின் இணைய தளத்தில் கிடைக்கிறதோ, அங்கிருந்து அதனைத் தரவிறக்கம் செய்திட வேண்டும். அதற்குப் பதிலாக, download .com or softpedia .com போன்ற தளங்களிலிருந்து தரவிறக்கம் செய்திட முயன்றால், நீங்கள் விரும்பும் கோப்புடன், விரும்பாத சிலவும் உங்கள் கம்ப்யூட்டரை வந்தடையும். அது போன்றவை சில வேளைகளில், கம்ப்யூட்டரின் இயக்கத்திற்கு ஊறு விளைவிப்பதாகவும் இருக்கும். இது போன்ற தளங்களில், நீங்கள் விரும்பும் கோப்பிற்கான லிங்க்குகளுடன், மேலும் சில லிங்க்குகள் தரப்பட்டிருக்கும். எடுத்துக் காட்டாக, அருகிலுள்ள படத்தைப் பார்க்கவும். இங்கு அவாஸ்ட் இலவச ஆண்ட்டிவைரஸ் தொகுப்பிற்கான லிங்க் (Download Now) ஒன்றுதான். ஆனால், அதன் அருகே, தேவையற்ற கோப்புகளுக்கான லிங்க்குகள் தரப்பட்டுள்ளன. இதில் கிளிக் செய்தால், வேண்டாதவை கம்ப்யூட்டரை வந்தடையும்.
தரவிறக்கம் செய்வதற்கான லிங்க் கண்டறிந்த பின்னர், அதில் கிளிக் செய்தால், தரவிறக்க செயல்பாடு, நீங்கள் பயன்படுத்தும் பிரவுசருக்கேற்றபடி மாறுபடும். இன்டர்நெட் எக்ஸ்புளோரரில், ஒரு சிறிய பட்டை ஒன்று திரையின் கீழாக பாப் அப் ஆகி இருப்பதைக் காணலாம். இதைப் பார்த்தவுடன், நீங்கள் அதில் உள்ள Save என்ற பிரிவில் கிளிக் செய்திட விரும்புவீர்கள். இவ்வாறு, கிளிக் செய்தவுடன், நீங்கள் இலக்கு வைத்த கோப்பு Downloads என்ற போல்டரில் தரவிறக்கம் செய்யப்பட்டு சேவ் செய்யப்படும். இதற்குப் பதிலாக, வேறு ஒரு போல்டரில் சேவ் செய்திட வேண்டும் என நீங்கள் விரும்பினால், Save என்பதன் அருகே உள்ள கீழ் நோக்கிய அம்புக் குறியில் கிளிக் செய்திடவும். இங்கு நீங்கள் விரும்பும் போல்டரில், சேவ் செய்திடுவதற்கான விருப்ப மெனு கிடைக்கும்.
பைல் தரவிறக்கம் செய்யப்படுகையில், எந்த அளவிற்கு கோப்பு தரவிறக்கம் செய்யப்படுகிறது என்பதற்கான அளவு காட்டப்படும். எவ்வளவு நேரத்தில் இந்த தரவிறக்கம் முழுமையடையும் என்பதுவும், உத்தேசமாகக் காட்டப்படும். தரவிறக்கம் முடிந்த பின்னர், அந்த செய்தி கிடைக்கும். அங்கு அந்த கோப்பின் பெயர் இருக்கும். இதில் கிளிக் செய்தால், அந்த கோப்பினைத் திறக்கலாம். அல்லது இயக்கலாம்.
பயர்பாக்ஸ் பிரவுசரில், திரையின் நடுவே, ஒரு பெட்டி திறக்கப்படும். இங்கு Save என்பதில் கிளிக் செய்து, கோப்பினை Downloads போல்டரில் சேவ் செய்திடலாம். தரவிறக்கம் செய்யப்படுகையில், மேலாக வலது புறத்தில், கட்டம் ஒன்றில், எந்த அளவிற்கு கோப்பு தரவிறக்கம் செய்யப்படுகிறது என்று காட்டப்படும். இறக்கம் முடிந்த பின்னர், அது ஓர் அம்புக் குறியாக மாறும். அதில் கிளிக் செய்தால், தரவிறக்கம் செய்யப்பட்ட கோப்பு காட்டப்படும். அவற்றுடன், அண்மைக் காலத்தில், தரவிறக்கம் செய்யப்பட்ட கோப்புகளும் காட்டப்படும். ஏதேனும் அப்ளிகேஷன் பைல் இறக்கப்பட்டிருந்தால், அதனை அங்கிருந்தவாறே இயக்கி, அந்த புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடலாம்.
குரோம் பிரவுசரில், திரையின் இடது கீழாக ஒரு நீள் கட்டம் காட்டப்பட்டு தரவிறக்க செயல்பாடு காட்டப்படும். தரவிறக்கம் தொடங்கியவுடன், எவ்வளவு நேரத்தில் அது முடியும் எனவும் தகவல் தரப்படும். இந்த பைலையும், அந்த இடத்திலிருந்தவாறே இயக்கலாம். திரையின் வலது பக்கத்தில் Show all downloads என்பதில் கிளிக் செய்தும் பைல்களைப் பார்க்கலாம். தரவிறக்கம் செய்யப்படும் போல்டரை குரோம் பிரவுசரில் மாற்ற, செட்டிங்ஸ் மற்றும் டவுண்லோட் பிரிவு சென்று மாற்றலாம். ஒவ்வொரு முறை டவுண்லோட் செய்திடுகையிலும், உங்களின் அனுமதி பெற்று, நீங்கள் தேர்ந்தெடுக்கும் போல்டரில் தரவிறக்கம் செய்திடுமாறும் அமைக்கலாம்.
“தெரிந்து கொள்ளுங்கள்”
Bloatware: ப்ளோட் வேர் என நாம் அழைப்பவை, கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்களால், தாங்கள் வடிவமைக்கும் கம்ப்யூட்டர்களில் பதிந்து அனுப்பப்படும் புரோகிராம்களாகும். கம்ப்யூட்டர் மட்டுமின்றி, இப்போது, மொபைல் போன்கள், டேப்ளட் பி.சி.க்கள், குரோம் புக், ஐபேட் போன்ற சாதனங்களிலும், நாம் கேட்காத, விரும்பாத பல புரோகிராம்கள் பதியப்பட்டு தரப்படுகின்றன. இவற்றை நாம் கம்ப்யூட்டரை அல்லது மேலே குறிப்பிட்டுள்ள சாதனங்களைப் பெற்றவுடன், இவற்றை நீக்கிவிடலாம். இதனால், தேவையின்றி நம் ராம் மெமரி இடம் பயன்படுத்தப்படுவது தடுக்கப்படும்.
---------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக