அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 1 ஜூன், 2016

எக்ஸெல் 2003 ல் தானாகவே பேக் அப் பைல்கள் உருவாகுவதை நிறுத்த

எக்ஸெல் 2003 ல் அனைத்து ஒர்க் புக்குகளுக்கும், தானாகவே பேக் அப் பைல்கள் உருவாகின்றன. நீங்கள் விரும்பும் ஒர்க்புக்கிற்கு மட்டும், பேக் அப் பைலை உருவாக்கி வைக்க வழி முறை:



எக்ஸெல் செயலியில் தானாக பேக் அப் பைல் உருவாகும் வகையில் செட் செய்திடும் வாய்ப்புகள் உள்ளன. இது உங்களுக்கு தேவை இல்லை எனில் நிறுத்தலாம். அல்லது நீங்கள் விரும்பும் வகையில், கட்டுப்படுத்த விரும்பினால், அந்த வழியையும் மேற்கொள்ளலாம். குறிப்பிட்ட ஓர் ஒர்க் புக்கிற்கு, பேக் அப் தேவை இல்லை என்றால், கீழ்க்குறிப்பிட்டுள்ள வழிமுறைகளைக் கையாளவும்.

1. Save As டயலாக் பாக்ஸைத் திறக்கவும். இதற்கு எளிதான வழி எப் 12 கீயை அழுத்துவதுதான்.

2. வலது கீழ் புற மூலையில் Tools என்பதில் கிளிக் செய்திடவும். இது சேவ் பட்டன் அருகே இருப்பதைக் காணலாம். இங்கு எக்ஸெல் செயலி, ஒரு கீழ்விரி மெனுவினைக் கொடுக்கும்.

3. இதில் General Options என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது General Options டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.

4. இங்கு Always Create Backup என்பதில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும்.

5. அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியே வரவும்.

இதனை அமைத்த பின்னர், பேக் அப் கிடைக்காது என்பதால், ஒர்க் புக் அமைக்கும்போது தொடர்ந்து, அவ்வப்போது அதனை சேவ் செய்திட வேண்டும்.

ஒன்றை நீங்கள் இங்கு புரிந்து கொள்ள வேண்டும். தானாக பேக் அப் உருவாவது நாம் உருவாக்கும் பைல்களுக்கு நல்லது. AutoRecover என்று ஒரு டூல் உண்டு. அதன் தன்மை வேறு. நீங்களாக ஒரு பைலை, கீ அழுத்தி சேவ் செய்திடும் முன் ("hard saves,"), கம்ப்யூட்டருக்கான மின் சக்தி நிறுத்தப்பட்டால், தற்காலிகமாக தகவல்கள் சேவ் செய்திடுவதற்கும், ஹார்ட் சேவ் செய்திடுவதற்குமான இடையே உள்ள டேட்டாவினை, ஆட்டோ ரெகவர் மூலம் மீளப் பெற்றுவிடலாம்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக