அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 1 ஜூன், 2016

இமேஜ் வியூவர் போட்டோ வியூவர்

விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் வரும் இமேஜ் வியூவரைக் காட்டிலும் சிறப்பாக இயங்கும் வேறு ஒரு இமேஜ் புரோகிராம் அல்லது பழைய விண்டோஸ் போட்டோ வியூவரை திரும்பப் பெற்று, இன்ஸ்டால் செய்ய...



விண்டோஸ் 10 ல் இயங்கும் Photos app for Windows 10 புதிய வசதிகளுடன் மிக அருமையாகச் செயல்படும் செயலி. இது தானாகவே, போட்டோக்களை பகுத்து, ஆல்பங்களாகக் காட்டும். உங்களுடைய போட்டோக்களில் நகாசு வேலைகளை மேற்கொள்ள எளிமையான டூல்களையும் கொண்டுள்ளது.

ஆனால், நீங்கள் பழைய விண்டோஸ் போட்டோ வியூவர் புரோகிராமினை (Windows Photo Viewer program) விரும்பினால், அதனைப் பெறலாம்.

நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரை, விண்டோஸ் 7 அல்லது8.1 லிருந்து, இலவசமாக விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு உயர்த்தி இருந்தால், அந்த புரோகிராம் கம்ப்யூட்டரில் தான் இருக்கும். தேடிப் பார்த்து பயன்படுத்தவும்.

இதனை உறுதி செய்திட ஒரு வழி சொல்கிறேன்.

ஏதேனும் போட்டோ பைல் ஒன்றின் பெயர் மீது, ரைட் கிளிக் செய்திடவும்.

கிடைக்கும் காண்டெக்ஸ்ட் மெனுவில் Open with என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

அதில் காட்டப்படும் புரோகிராம்களில் ஒன்றாக Windows Photo Viewer உள்ளதா எனப் பார்க்கவும்.
இருந்தால், அதிலேயே கிளிக் செய்து புரோகிராமினைப் பயன்படுத்தலாம்.

Windows 10 Settings சென்று, அதில் கிடைக்கும் சிஸ்டம் ஏரியாவில் இதனைக் காணலாம். மேலே குறிப்பிட்டது போல புரோகிராம் உள்ளதா எனச் சோதனை செய்திடுகையில், விண்டோஸ் போட்டோ வியூவர் புரோகிராமினை, மாறா நிலையில் போட்டோக்களைக் காணப் பயன்படுத்தும் புரோகிராமாக மாற்றிக் கொள்ளுங்கள்.

நீங்கள் கட்டணம் செலுத்தி, விண்டோஸ் 10 வாங்கி இன்ஸ்டால் செய்திருந்தால், பழைய புரோகிராமினைப் பெறுவது சற்று சிரமமான செயல்.

TenForums.com என்ற தளத்தில் இதற்கான வழிமுறைகள் தரப்பட்டுள்ளன.

ஆனால், விண்டோஸ் ரெஜிஸ்ட்ரியில் சில மாற்றங்களைக் கவனமாக மேற்கொள்ள வேண்டியதிருக்கும் என்பதால், இதனை நான் பரிந்துரைக்கத் தயங்குகிறேன்.

விண்டோஸ் அப்ளிகேஷன் ஸ்டோர் (Windows app store) சென்றால், இமேஜ் எடிட்டிங் புரோகிராம்களை, மைக்ரோசாப்ட் வைத்துள்ளதைக் காணலாம். Fhotoroom மற்றும் Adobe Photoshop Express ஆகியவை இலவசமாகக் கிடைக்கின்றன. பெற்று பயன்படுத்தலாம். போட்டோக்களைப் பார்த்து ரசிக்க, சில எளிய வேலைகளை மட்டும் மேற்கொள்ள XnView, Imagine Picture Viewer, IrfanView மற்றும் FastStone Image Viewer ஆகிய புரோகிராம்களைப் பயன்படுத்தலாம்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக