பிரேசில் Sao Paulo பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளது. இங்கு உள்ள குறித்த வீட்டில் 20 வயது இளம் பெண் ஒருவர், மற்றொரு ஆணுடன் நெருக்கமாக இருந்துள்ளார். திடீரென்று வீட்டினுள் நுழைந்த மற்றொரு பெண் அப்பெண்ணை தாக்கி தலைமுடியை வெட்டி வீசியுள்ளார்.
அதைத் தொடர்ந்து அப்பெண் அணிந்திருந்த உடையையும் கிழித்து, நிர்வாணமாக அங்குள்ள வீதியில் அவரது தலையை பிடித்து சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இதனால் பலரும் அப்பெண் மீது குற்றம் சாட்டி பொலிசில் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து பொலிசார் விசாரணை நடத்துகையில், தாக்குதல் நடத்தியவர் அந்த ஆணின், மனைவி என்றும் இவருடன் கள்ளத் தொடர்பு வைத்ததன் காரணமாகவே அவர் இது போன்று செய்ததாக கூறியுள்ளார்.
மேலும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு துரோகியை எப்படி சமாளிப்பது என்பதை உங்களுக்கு காட்டுகிறேன் என்று கூறி இதை பதிவேற்றம் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இவர்கள் தொடர்ந்து ஐந்து மாதங்கள் ஒன்றாக இருந்துள்ளதாகவும், இதனால் ஆத்திரம் தாங்காமல் அவர் இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் அவர் ஒரு பெண்ணின் ஆடைகளை கிழித்து நிர்வாணமாக வீதிகளில் நடக்க வைத்துள்ளார், முடிகளையும் வெட்டியுள்ளார், அதுமட்டுமின்றி அவரை தாக்கியதால் அவருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது.
அச்சுறுத்தும் வகையிலும் செயல்பட்டுள்ளார், இதனால் இவருக்கு பத்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக