அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

ஆண்ட்ராய்டில் ஒட்டுமொத்த தரவுகளையும் மொத்தமாய் அழிக்க முடியும்.!

உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது டேப்ளெட் என எதுவாக இருப்பினும் இந்த டிஜிட்டல் உலகத்தில் எளிமையான அணுகல்களை பெற அதிகபட்ச சேமிப்புகளை அதனுள் நாம் நிகழ்த்த வேண்டியதுகட்டாயமாகிறது. அதே சமயம் எந்தவொரு தொழில்நுட்ப கருவியும் நம்முடனேயே நீடித்து வருவதும் கிடையாது.



பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் பொதுவாக புகைப்படங்கள், தொடர்புகள், மின்னஞ்சல்கள், முக்கிய தகவல்கள் போன்ற தரவுகளை சேமிக்கிறார்கள். எப்போது ஒரு புதிய சாதனம் பெற்று மேம்பட திட்டமிடுகிறோமோஅப்போது பழைய சாதனத்தை விற்க அல்லது யாரிடமாவது கொடுக்கவோ செய்கிறோம். அதை நிகழ்த்தும்முன் நீங்கள் பயன்படுத்திய சாதனத்தின் அனைத்து தரவுகளும் அழிக்கப்பட்டு விட்டதா என்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

சிறந்த வழி :
அதுபோன்ற ஒட்டுமொத்த தரவுகளின் அழிப்பிற்கு பெரும்பாலும் அனைவரும் பேக்டரி ரீசெட்டை தான் பயன்படுத்துவோம். ஆனால், அது ஒரு சிறந்த வழியல்ல, தரவுகளை முற்றிலும் துடைக்க சிறந்த வேறொரு வழி ஒன்று உள்ளது.

ஏன் பேக்டரி ரீசெட் செய்யக்கூடாது..?

ஒரு தரவு நீக்கப்படும் போது அது முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது என்று அர்த்தமில்லை. அந்த தரவு மறைக்கப்பட்ட அல்லது நீக்கப்பட்ட தரவு என்ற பெயரில் சாதனத்தின் மற்றொரு சேமிப்பு இடத்தில் சேமிக்கப்படுகிறது.

பேக்ட்ரி ரீசெட் என்பது உங்கள் சாதனம் வெறுமனே மாற்றியமைக்க மட்டுமே செய்கிறது. பெரும்பாலான தரவுகள் அழிக்கப் பெற்றாலும் மின்னஞ்சல், மல்டிமீடியா போன்ற சில தகவல்கள் இன்டர்னெல் மெமரியில் இருக்கும்.

கருவியை என்க்ரிப்ட் செய்ய மறவாதீர்..!

உங்கள் கருவியின் தரவுகளை சுத்தமாக துடைக்க திட்டமிடும் முன் உங்கள் சாதனத்தை என்க்ரிப்ட் செய்யவது அவசியம், ஒரு சிறந்த வழியும் கூட.

வைப் அவுட் :
பேக்டரி ரீசெட் செய்வதற்கு முன்பு செய்யப்படும் என்க்ரிப்ஷன் ஆனது வைப் அவுட் செய்யும் வேலையை வேகமாக நிகழ்ச் செய்யும்.

தனிப்பட்ட வழிமுறை :
பேக்ட்ரி ரீசெட் செய்தும் அழியாத தகவல்களை அழிக்க ஒரு தனிப்பட்ட வழிமுறை ஒன்றும் இருக்கிறது.

அது செட்டிங்ஸ் - செக்யூரிட்டி -என்க்ரிப்ட் போன், என்பதாகும்.

பேக்ட்ரி ரீசெட் செய்யலாம் :
என்க்ரிப்ட் செய்த பிறகு நீங்கள் பேக்ட்ரி ரீசெட் செய்யலாம். செட்டிங்ஸ் சென்று பேக் அப் அன்ட் ரீசெட் ஆப்ஷன் சென்று பேக்ட்ரி டேட்டா ரீசெட் கிளிக் செய்யவும்.

பேக் அப் :
என்கிரிப்ஷன் மற்றும் பேக்ட்ரி ரீசெட் செய்வதற்கு முன்பு உங்கள் சாதனத்தில் சேமிக்கப்பட்டிருந்த அனைத்தும் பேக் அப் பெறப்பட்டது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக