அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

அப்படியென்ன வாட்ஸ்ஆப்பில் இல்லாதது 'இதில்' இருக்கிறது..?!

ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களை கொண்டுள்ள வாட்ஸ்ஆப், உலகின் மிக பயன்படுத்தப்படும் மெசேஜ் பயன்பாடு செயலி ஆகும், ஒருபக்கம் வாட்ஸ்ஆப் சில மிகவும் நவநாகரிகமான வசதிகளை வழங்கி கொண்டே மறுபக்கம் தனது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே போகிறது.



அப்படியான வாட்ஸ்ஆப்பில் கூட இல்லாத சில அம்சங்கள் கொண்ட செயலிகளை நீங்கள் கருத்தில் கொண்டதுண்டா..? அவைகள் வாட்ஸ்ஆப்பிற்கு சிறந்த போட்டியாளர்கள் என்று கூட கூறலாம். அப்படியாக நீங்கள் வாட்ஸ்ஆப்பிற்கு மாற்றாக முயற்சிக்க வேண்டிய 6 ஆப்ஸ்கள் இதோ..!

ஹைக் (Hike)
இந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஹைக் 100 மில்லியன் பயனர்களை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. இது ஆண்ராய்டு, ஐஓஎஸ் இயங்குதளங்களில் கிடைக்கிறது. இதன் ஆஃப்லைன் சாட் வசதி , சிறந்த ஸ்டிக்கர் சேகரிப்பு, மறைக்கப்பட்ட சாட் அம்சம் மற்றும் ஹைக் பயனாளிகள் இல்லாதவர்களுக்கு இலவச மெசேஜ் அனுப்பும் வசதி வாட்ஸ்ஆப் உடனான இதன் போட்டித்தன்மையை விளக்குகிறது.

காக்கோடால்க் (KakaoTalk)
இந்தியாவில் மிகவும் பரவலாக அறியப்படாத இந்த காக்கோடால்க் பயன்கள் வாட்ஸ்ஆப்பிற்கு மற்றொரு வலுவான போட்டியாக அமைந்துள்ளது. 15 மொழிகள், உடனடி செய்தி பயன்பாடு, வீடியோ காலிங் போன்ற பல அம்சங்கள் கொண்ட இது கூடுதலாக, அனிமேஷன் எமோட்ஐகான்ஸ்களும் கொண்டுள்ளது. இது ஆண்ராய்டு, ஐஓஎஸ், படா ஓஎஸ் மற்றும் விண்டோஸ் ஆகிய இயங்குதளங்களில் கிடைக்கப்பெறுகிறது.

பேஸ்புக் மெஸ்ஸெஞ்சர் :
வாட்ஸ்ஆப்பும் மற்றும் பேஸ்புக் மெஸ்ஸெஞ்சரும் ஒரே குடும்பம் என்றாலும் கூட, பேஸ்புக் மெஸ்ஸெஞ்சர் கடந்த சில ஆண்டுகளாக உடனடி செய்தி பிரிவில் விரைவான முன்னேற்றம் கண்டுள்ளது.

லைன் (Line)
வாட்ஸ்ஆப்பின் முக்கியமான போட்டியாளராக லைன் திகழ்கிறது. இதன் டைம்லைன், கூப்பன்கள் , வீடியோ ஸ்னாப்பிங் மற்றும் 1ஜிபி வரையிலான கோப்பு பகிர்வு போன்ற வசதிகள் வாட்ஸ்ஆப்பில் கிடையாது.

பிபிஎம் (BBM)
பிபிஎம், வாட்ஸ்ஆப் விரும்பாத சில அம்சங்களை கொண்டது, பிளாக்பெர்ரி இன்ஸ்டன்ட் மெஸ்ஸெஞ்சர் ஆனது க்ரூப் அட்மினுக்கு அதிக சக்தியை வழங்குகிறது, முக்கியமாக இது சுயமாக அழிந்துகொள்ளும் செய்தி நேரும் அம்சமும் கொண்டிருக்கிறது. இது ஆண்ராய்டு, ஐஓஎஸ், பிளாக்பெர்ரி இயங்குதளங்களில் கிடைக்கும்.

டெலிகிராம் (Telegram)
டெலிகிராமில் வாட்ஸ்ஆப்பில் தவறும் பல அம்சங்களை கொண்டுள்ளது, உடனடி செய்தி பயன்பாடு மூலம் நொடிகளில் ஒரு செய்தியை தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் வசதி கொண்ட அம்சம் மூலம் 1.5ஜிபி வரையிலான கோப்புதனை பாதுகாப்பாக பகிர்ந்து கொள்ள முடியும். அனைத்து முக்கிய ஆப்ஸ் ஸ்டோரிலும் கிடைக்கும் இதில் டெலிகிராம் பாட்ஸ், கிப் சப்போர்ட் உடன் 1000 பயனர்கள் வரையிலான க்ரூப்தனை உருவாக்க முடியும்.

Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக