நோயாளிகளுக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளுகையில் ஏற்படும் குருதி இழப்பு ஈடுசெய்யப்பட வேண்டும். இயற்கையாக இக்குருதியினைப் பெற்றுக்கொள்வதற்கு, நோயாளியின் குறிப்பிட்ட குருதி வகை கொண்ட குருதி வழங்குநர்களை தேடி அலைய வேண்டிய நிலை இருந்து வந்தது.
குறிப்பாக, அரிய குருதி இனம் கொண்டோரின் அறுவைச் சிகிச்சைகள், அக்குருதி இனம் கொண்ட குருதி வழங்குநரைக் கண்டடையும் வரை பிற்போடப்படுவதும் உண்டு.
இதற்கு பிரித்தானியாவின் பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மாற்றுவழியொன்றினைக் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பான விபரங்கள் ‘நேச்சர் கொமினிகேஷசன்’ ஆய்விதழில் வெளியாகியுள்ளது.
இதன்பிரகாரம், மாற்றியமைக்கப்பட்ட தண்டுக்கலங்களை உருவாக்கி, அவற்றிலிருந்து குருதியினை உற்பத்தி செய்யும் புதிய முறையொன்றினை அந்த ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
இவ்வாறு உருவாக்கப்படும் தண்டுக்கலம் செயலிழந்து போவதற்கிடையில் சுமார் 50000 குருதிச் சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இக்கண்டுபிடிப்பு, அரிய குருதி இனம் கொண்டவர்களின் அறுவைச் சிகிச்சையின்போது எதிர்கொள்ளும் இடர்களுக்கு விமோசனமளிக்கும் என நம்பப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக