அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 19 ஏப்ரல், 2017

நிகழ்ச்சி தொகுப்பாளராவாரா கமல்?

இந்தி சேனல்களின் புகழ்பெற்ற நிகழ்ச்சி பிக் பாஸ். சோனி டி.வி. கலர்ஸ் டி.வி இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. அமிதாப்பச்சன், ஷில்பா ஷெட்டி, சல்மான்கான், சஞ்சய் தத் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்.



இதே போன்ற நிகழ்ச்சி ஒன்றை இங்குள்ள முன்னணி சேனல் ஒன்று நடத்த திட்டமிட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அந்த நிறுவனம் கமலுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்காக 100 கோடி ரூபாயை அந்த நிறுவனம் ஒதுக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. கமலுக்கு கணிசமான சம்பளமும் பேசப்பட்டு வருகிறது.

அன்றாட நிகழ்வுகள் குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்து வரும் கமல் இந்த நிகழ்ச்சியை தனது கருத்துக்களை பதிவு செய்யும் நிகழ்ச்சியாக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை.

தற்போது கமல் சபாஷ் நாயுடு படத்தின் பணியில் மும்முரமாக இருக்கிறார். சபாஷ் நாயுடு படத்தை முடித்துவிட்டு அடுத்து விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தையும் வெளியிட இருக்கிறார். அதன்பிறகு அவர் இந்த நிகழ்ச்சிக்கு வரலாம் என்று தெரிகிறது.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக