அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 26 ஏப்ரல், 2017

காஷ்மீர் கல்வீச்சு வன்முறையில் மண்டை உடைந்த மாணவியின் உயிரை காப்பாற்றிய புகைப்படக்காரர்: சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டுகள்

கல்வீச்சில் காயமடைந்த மாணவியை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்ற பத்திரிகை புகைப்படக்காரர் யாசின் தர்.


காஷ்மீரில் நடந்த வன்முறை சம்பவத்தைப் படம்பிடிக்கச் சென் றார் செய்தி நிறுவன புகைப்படக் காரர் யாசின் தர் (43). அப்போது கல்வீச்சில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த 12-ம் வகுப்பு மாணவியைக் கண்டதும் யாசின் துடித்துப் போனார்.



சற்றும் தாமதிக்காமல், மயங்கிக் கிடந்த மாணவியை இரு கைகளிலும் அள்ளி எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார். சரியான நேரத்தில் அந்த மாணவிக்கு சிகிச்சை அளிக்கப் பட்டதால் ரத்தம் வீணாவது தடுக் கப்பட்டு உயிரும் பிழைத்துள்ளார். பள்ளி மாணவியை அவர் தூக்கிக் கொண்டு ஓடிய புகைப்படத்தை வேறொரு பத்திரிகை புகைப் படக்காரர் படம்பிடித்தார்.

சமூக வலைதளங்களில் அந்த புகைப்படத்தைப் பார்த்த பலர் யாசின் தர்ரின் மனிதாபிமானத்தை போற்றிப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தர் கூறியதாவது:

ஏப்ரல் 20-ம் தேதி ஸ்ரீநகரில் மாணவிகளின் போராட்டத்தைப் படம்பிடிப்பதற்காக பத்திரிகை யாளர்கள் அனைவரும் குவிந் திருந்தோம். அப்போது யாரோ ஒருவர் கல்வீசியதில் போராட்டத் தில் ஈடுபட்டிருந்த குஷ்பூ என்ற மாணவியின் முன்னந்தலையில் அடிபட்டு ரத்தம் பீறிட்டு வழிந்தது. அந்த காட்சியை நான் படம்பிடித்துக் கொண்டிருந்தபோது தான், அவரைக் காப்பாற்ற யாரும் அருகில் இல்லை என்ற ஆபத்தை உணர்ந்தேன். உடனடியாக மாணவியை தூக்கிச் சென்று மருத்துவமனை நோக்கி ஓடத் தொடங்கினேன். எனது மகளாகவே அவரைப் பார்க்கிறேன்.

நான் இரு பெண் குழந்தை களுக்கு தந்தையாக இருக்கும் பட்சத்தில், காயம் அடைந்த எந்த பெண்ணைப் பார்த்தாலும் அவரை அப்படியே விட்டுவிட்டுச் செல்ல தோன்றாது. அந்த மாணவியின் உயிரைக் காப்பாற்றியது எனக்கு மன நிறைவு அளிக்கிறது.

இவ்வாறு தர் கூறினார்.

thehindu
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக