அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 20 ஜூன், 2017

ஃபேஸ்புக்கில் அதிக லைக்குகள் பெற விரும்பி குழந்தையை அந்தரத்தில் தொங்கவிட்ட தந்தை கைது

 image source: Al Arabia
சமூகவலைத்தளமான ஃபேஸ்புக்கில் அதிக எண்ணிக்கையில் `லைக்`பெற வேண்டும் என்பதற்காக, வீட்டு ஜன்னலில் இருந்து தனது குழந்தையை தொங்கவிட்ட ஒருவருக்கு அல்ஜீரியாவில் உள்ள ஒரு நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.



மிகவும் உயரமான கட்டடத்தில் ஒரு ஜன்னலுக்கு வெளியே தனது குழந்தையைப் பிடித்துக் கொண்டு அந்தரத்தில் தொங்க விடுவது போன்ற புகைப்படத்தை தாங்கிய பதிவை ''1000 லைக்குகள் வேண்டும், இல்லையெனில் குழந்தையை வெளியே விட்டுவிடுவேன்'' என்ற வாசகத்துடன் குழந்தையின் தந்தை வெளியிட்டார்.

இந்த பதிவால் தூண்டப்பட்ட மற்ற சமூகவலைதள பயன்பாட்டாளர்கள் குழந்தையிடம் துஷ்பிரயோகம் செய்வது போல நடந்து கொண்டவரை கைது செய்யவேண்டும் என்று கோரினர்.

ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட இந்நபர் மீது குழந்தையின் பாதுகாப்புக்கு பாதிப்பு உண்டாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

அல்ஜீரியாவின் தலைநகரான அல்ஜியர்ஸில் உள்ள ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பின் 15-ஆவது மாடியில் இருந்து, தனது குழந்தையை பெயர் குறிப்பிடப்படாத இந்நபர் தொங்கவிட்டதாக அல் அராபியா செய்திவலைத்தளம் தெரிவித்துள்ளது.

BBC Tamil
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக