அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 21 ஜூன், 2017

குளத்தில் தவறி விழுந்த குட்டி யானையை துடிதுடித்துக் காப்பாற்றும் தாய் (காணொளி)

குளத்தில் சிக்கிய குட்டி யானை குதித்துக்காப்பாற்றிய அம்மா யானை

யானைகள் தண்ணீரை சோதிக்க விரும்பினால் அவை தம் துதிக்கையை அதற்கு பயன்படுத்தும்.

அப்படி செய்யும்போது சில சமயம் அவை நிலைகுலையும்.

தென் கொரியாவின் சோல் கிராண்ட் பூங்காவின் குளத்தில் அப்படி தவறிவிழுந்து தத்தளித்த யானைக்குட்டியை நோக்கி, அதன் அம்மாவும் சித்தியும் பதற்றத்தோடு ஓடின.

தொலைவில் இருந்த மற்றொரு யானையும் அதேபோல் பதற்றமாக காணப்பட்டது.

யானைக்குட்டியை காப்பாற்ற அதன் அம்மாவும் சித்தியும் வேகமாக குளத்திற்குள் குதித்து ஓடின. குட்டியை பாதுகாப்பாக கரைக்கு கொண்டுவந்தன.

ஒருவழியாக நெருக்கடி தீர்ந்தது. யானைக்குட்டி நீரிலிருந்து மீண்டது.

BBC Tamil
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக