அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 4 ஜூன், 2018

பசுவுக்கு மரண தண்டனை விதிப்பு


ஐரோப்பிய எல்லைத் தாண்டிச் சென்று விதிமுறை மீறியதால், கர்ப்பிணி பசுவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.



 Farmer Ivan Haralampiev has been told the cow must die

பல்கேரிய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கோபிலோவ்ஸ்சி (Kopilovtsi) கிராமத்தைச் சேர்ந்தவர் இவான் ஹரலம்பியேவ் (Ivan Haralampiev). இவர் ஏராளமான மாடுகளை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் அவரது மந்தையில் இருந்த பென்கா (Penka) என்ற கர்ப்பிணி பசு பல்கேரிய எல்லைத் தாண்டி, செர்பியாவுக்குள் நுழைந்தது.

ஐரோப்பிய கண்டத்தில் சட்டங்கள் மிகவும் கடுமையானதாக இருக்கும். இந்நிலையில் ஐரோப்பிய சட்டத்தின் படி, உரிய ஆவணம் இல்லாமல் எல்லைத் தாண்டினால் மரண தண்டனை விதிக்கப்படும்.

மேலும் அங்கு விலங்குகளை கொண்டு செல்வதற்கு கால்நடை சுகாதார சான்றிதழ் கட்டாயம் இருக்க வேண்டும்.

ஆனால் இவையாவும் பின்பற்றப்படவில்லை என கூறி, ஐரோப்பிய அதிகாரிகள் அந்த கர்ப்பிணி பசுவுக்கு மரண தண்டனை விதித்துள்ளனர்.

இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கர்ப்பிணி பசுவான பென்கா இன்னும் 3 வாரங்களில் பிரசவிக்க உள்ளது. இந்நிலையில் பென்காவிற்கு விலக்கு அளிக்கக்கோரி, ஆன்லைனில் ஆதரவு திரட்டப்பட்டு வருகிறது.

இதன்மூலம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பென்காவிற்கு விதிவிலக்கு பெற திட்டமிடப்பட்டுள்ளது.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக