அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

நல்ல வேளை பிளைட்டை பறக்க விட்டுட்டு கிகி பண்ணலை! (video)

ஓடும் விமானத்துடன் இரு பெண் பைலட்கள் கீகீ சேலஞ்ஜ் செய்த வீடியோ வைரலாகியுள்ளது. பிரபல பாப் பாடகர் டார்க்கியின் இன் மை ஃபீலிங்க்ஸ் என்னும் பாடல் தொடர்பான சவால்கள் இணையதளத்தில் வலம் வருகின்றன. இந்த பாடல் டார்க்கியின் ஸ்கார்பியன் ஆல்பத்தில் இருந்து வெளியானது.



இந்த பாடலை வாகனத்தில் ஒலிக்க வைத்துவிட்டு வாகனத்தை விட்டு வெளியே வந்து நடனமாடிக் கொண்டு வானத்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்க வேண்டும். இதை பிரபலங்கள் பலர் முன்னெடுத்து செய்து வருகின்றனர்.

இணைய ரசிகர்கள் சில பழைய பாடல்களுக்கு இதுபோன்ற நடனத்தை ஆடுகின்றனர். இந்நிலையில் kiki challenge-ஐ ஏற்க விரும்பிய பெண் விமானி, விமானத்தை இயக்க செய்துவிட்டு நடனமாடிய காணொளியை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளனர். உடன் மற்றொரு பெண் பைலட்டும் சவாலை ஏற்று நடனமாடியுள்ளார்.


Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக