அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

சனி, 1 செப்டம்பர், 2018

அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞர் தொடர்பில் மேலும் பல தகவல்கள்

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாக தெரிவித்து சிட்னியில் கைதான இலங்கையர், அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் மெல்கம் டர்ன்புல் மற்றும் முன்னாள் வெளிவிவார அமைச்சர் ஜூலி பிசப் ஆகியோர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



அவுஸ்திரேலிய காவல்துறை தகவல்களை மேற்கோள்காட்டி அந்நாட்டு ஊடகம் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

மாணவர் வீசாவில் அவுஸ்திரேலியா சென்று சிட்னி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவரும் 25 வயதான மொஹமட் நிசாம்தீன் என்ற இலங்கையரே நேற்றைய தினம் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டார்.

அவுஸ்திரேலியா கென்சிங்டனில் உள்ள நியூ சௌத் வேள்ஸ் பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், அவுஸ்திரேலிய பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அவர் கைதுசெய்யப்பட்டார்.

பல்கலைக்கழக ஊழியர் ஒருவரினால் வழங்கப்பட்ட தகவலை அடுத்து அவரின் இருப்பிடம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த இலங்கையர் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் மெல்க்கம் டர்ன்புல் மற்றும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப் உட்பட பலர் மீது தாக்குதல் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தமை, அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

அத்துடன், அவரிடமிருந்து பல திட்டங்கள் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளதாகவும் விசாரணையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவருவதாகவும், அவர் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக