அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 18 மே, 2020

ஓம வோட்டர் குழந்தைக்கு எப்போது? எவ்வளவு? கொடுக்கலாம்

குழந்தை அழுவதற்கு காரணங்களே அறிய முடியாத நிலையில் குழந்தையின் அழுகையை நிறுத்த உதவியது ஓமம் நீர்தான். பிள்ளைவளர்த்தி போன்று ஓமத்துக்கும் குழந்தைகளின் மருத்துவத்தில் மிக முக்கிய இடம் இருந்தது. நவீன மருத்துவம் பெருகிவரும் நிலையில் ஓமநீரை கொடுக்கலாமா என்பது குறித்தும் தெரிந்துகொள்வோம்.



ஓமம்
ஓமம். வெப்பத்தன்மையும், கார்ப்புச்சுவையும் கொண்டிருக்கக்கூடியது. ஓமச்செடிகளிடமிருந்து இதன் விதைகளை பெறுகிறோம். உணவில் சுவையைக் கூட்ட பயன்படுத்து ஓமம் ஜீரணக்-கோளாறுகளையும் நீக்குகிறது.

வயிறு தொடர்பான அனைத்து பிரச்சினை-களையும் நீக்குவதில் முதன்மையாக செயல்படும் ஓமத்தை கைக்குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவரும் எடுத்துக்கொள்ளலாம்.

ஓமநீரை கடைகளில் வாங்கி பயன்படுத்துவதுண்டு. ஆனால், கைக்குழந்தைகளுக்கு கொடுப்பதாக இருந்தால் வீட்டிலேயே தயாரித்து கொடுக்கலாம்.

நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் ஓமவிதையை வாங்கி தயாரிக்கலாம்.

தயாரிக்கும் முறை
வெறும் வாணலியில் 50 கிராம் அளவு ஓம விதைகளை வறுத்துக் கொள்ளுங்கள். அதிகமாக வறுக்க வேண்டாம். இலேசாக வாசம் போகும் வரை அடுப்பை மிதமான தீயில் வைத்து வறுக்கவும். பிறகு அதை ஆறவிட்டு 1 லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடுங்கள். இவை சுண்டி கால் லீட்டராக வரும் போது இறக்கி வையுங்கள்.

குழந்தைகளுக்கான பக்குவம் இது என்பதால் 50 கிராம் அளவுக்கு 1 லீட்டர் அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். பெரியவர்களுக்கு என்னும் போது விதைகள் 100 கிராம் அளவுக்கு இருக்கலாம். கூடவே ஓமப்பொடியையும் சேர்க்கலாம்.

எப்போது
பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலிலேயே உடலில் எதிர்ப்புச் சக்தி பெறக்கூடிய அளவுக்கு சத்து இருக்கும். தாய்ப்பால் குடிக்கும் குழந்தை மலச்சிக்கல், வயிறு கோளாறு, வயிறு உபாதை போன்ற பிரச்சினைகளையும் அடிக்கடி சந்திக்காது. அதனால் தாய்ப்பால் குடிக்கும் வரை குறைந்தது ஐந்து மாதங்கள் வரை குழந்தைகளுக்கு கைவைத்தியம் தேவைப்-படாது.

ஆறாம் மாதத்திலிருந்து திரவ ஆகாரம் சேர்க்கும் போது குழந்தைக்கு வயிறு கோளாறு, மாந்தம், வயிறுவலி, மலம் கழிக்கும் போது அவஸ்தை, செரிமானப்பிரச்சினை போன்றவை உண்டாகும். இதனால் குழந்தை அவ்வப்போது அழச் செய்யும். இந்த நேரத்தில் குழந்தைக்கு ஓமநீருடன் சம அளவு தண்ணீர் கலந்து இனிப்புக்கு தேன் சேர்த்து குழந்தைக்கு கொடுக்கவேண்டும். ஓமநீரில் தேன் கலக்க வேண்டாம். எப்போது குழந்தைக்கு தருகிறோமோ அப்போது தேன் சேர்த்து கொடுக்க வேண்டும்.

எவ்வளவு
குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டிருந்தால் வேறு மாற்றங்கள் என்ன என்பதையும் கவனி-யுங்கள். மலம் கழிப்பதற்கு முன்பு அழுதால், மலம் இறுக்கி கழிந்தால், வயிறு பகுதி கல் போன்று இறுக்கமாக இருந்தால் வயிறு கோளாறு என்பதை அறிந்துகொள்ளலாம். அந்த மாதிரி நேரங்களில் குழந்தைக்கு கால் டீஸ்பூன் அளவு ஓமநீருடன் வெந்நீர் மற்றும் தேன் கலந்துகொடுக்கலாம்.

அடிக்கடி கொடுக்கக் கூடாது. நாள் ஒன்றுக்கு ஒரு முறை மட்டுமே கொடுக்க வேண்டும். தொடர்ந்தும் கொடுக்கக் கூடாது. ஒரு முறை கொடுத்தாலே குழந்தையின் வயிறு கோளாறு சரியாகிவிடும். குழந்தை வலியை மறந்து சிரிக்கத் தொடங்கும். குழந்தைக்கு பாதிப்பை உண்டாக்காது ஓம நீர் என்றாலும் ஒவ்வாமையை உண்டாக்குகிறதா என்பதையும் தெரிந்துவைத்துகொள்ள வேண்டும். வயிறு இறுக்கமாக இருக்கிறது என்றோ அதிகப்படியாக குழந்தை அழுகிறது என்றோ அளவுக்கு மீறி கொடுக்கக் கூடாது.

உடலுக்கு பற்று
பெரும்பாலும் பலரும் இதை மறந்து-விட்டார்கள் என்று தான் சொல்லவேண்டும். குழந்தை அழும்போது வசம்பை சுட்டு தாய்ப்பாலில் குழைந்தைக்கு தொப்புளைச்சுற்றி பற்று போன்று போடுவார்கள். அதேபோன்று ஓமநீரில் வசம்பை குழைத்து பற்று போடலாம்.

குழந்தைக்கு சளி இருந்து மூக்கடைப்பு இருந்தால் ஒமநீரை வெள்ளை துணியை மிதமான வெந்நீரில் கொண்டு நனைத்து அதை குழந்தையின் மூக்கின் மீது வைத்து எடுக்கலாம். மூக்கடைப்பு பிரச்சினை நீங்கும். ஓமத்தை தேங்காயெண்ணெயில் காய்ச்சி மார்பு பகுதியில் தடவி வந்தால் குழந்தையின் சளி கரைந்து வெளியேறும்.

ஒவ்வொரு வாரமும் இதை தவறாமல் கொடுக்கலாம். அப்படி கொடுத்தால் வயிறு பிரசசினைகள் எதுவுமின்றி குழந்தை நன்றாக சாப்பிட தொடங்கும். செரிமானப் பிரச்சினைகள் இருக்காது. குழந்தைக்கு பசி எடுக்கவும் செய்யும். மந்தமாக இல்லாமல் எப்போதும் உற்சாகமாக வளைய வருவார்கள்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக