அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 28 ஜூலை, 2013

அவுஸ்­தி­ரே­லியா நோக்­கிய ஆபத்து மிக்க படகுப் பயணம்

அவுஸ்­தி­ரே­லியா நோக்கி சட்­ட­வி­ரோ­த­மாகப் பய­ணிப்­போரின் எண்­ணிக்கை நாளாந்தம் அதி­க­ரித்து வரு­கின்­றது. பட­கு­களின் மூலம் சட்­ட­வி­ரோ­த­மாகப் பய­ணிப்­பது ஆபத்து நிறைந்­தது என அறிந்­தி­ருந்தும் கூட உயி­ரையும் துச்­ச­மென மதித்து சிலர் பய­ணித்து வரு­கின்­றனர்.

அவுஸ்­தி­ரே­லி­யாவை நோக்கி சட்­ட­வி­ரோ­த­மாகப் பய­ணித்த வேளையில் இந்­தோ­னே­ஷி­யா­வுக்கு அருகில் கடந்த செவ்­வாய்க்­கிழமை மாலை படகு ஒன்று மூழ்­கி­யதில் இலங்­கையர் மூவர் உட்­பட 11 பேர் பலி­யா­கி­யுள்­ளனர். மூழ்­கிய படகில் பய­ணித்­த­வர்­களில் அநே­க­மா­ன­வர்கள் இலங்­கை­யர்கள் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

விபத்­துக்­குள்­ளான குறித்த படகில் பலி­யா­ன­வர்­களில் 18மாத குழந்தை உட்­பட ஆறு சிறு­வர்­களும் கர்ப்­பிணிப் பெண் ஒரு­வரும் அடங்­கு­கி­றார்கள். கடந்த வியா­ழக்­கி­ழமை காலை இந்­தோ­னே­ஷி­யாவின் ஜாவா தீவுக் கடற்­க­ரைக்குத் தென்­கி­ழக்கே அந்தப் படகு மூழ்கி இரு நாட்கள் கழிந்த நிலை­யி­லேயே இலங்­கையைச் சேர்ந்த 5 வயது சிறு­வ­னி­னதும் ஈரானைச் சேர்ந்த 30 வயது நப­ரொ­ரு­வ­ரதும் சட­லங்கள் மீட்­கப்­பட்­டுள்­ளன.

விபத்­துக்­குள்­ளான குறித்த படகில் 189 பேர் மீட்­கப்­பட்­டுள்­ள னர். எனினும் எத்­தனை பேர் துல்­லி­ய­மாக பய­ணித்­தார்கள் என்­பது தெரி­யாமல் உள்­ளது.

படகு விபத்­தின்­போது பெண்கள் சிறு­வர்கள் உட்­பட அதி­க­மா­னோர்கள் தங்கள் உயிரைக் காப்­பாற்றிக் கொள்­ளும்­மு­க­மாக கடும் இரு­ளுக்கு மத்­தியில் 4 மணித்­தி­யா­லங்­க­ளுக்கு அதி­க­மான நேரம் நீந்திய­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அதி­க­ளவு பய­ணி­களை ஏற்றிச் சென்­ற­மையே படகு கடலில் மூழ்­கி­ய­தற்குக் காரணம் என கூறப்­படும் அதே­வேளை, கடலில் குதித்து தத்­த­ளித்த அதி­க­மா­ன­வர்­களை இந்­தோ­னே­ஷியப் பாது­காப்புத் துறை­யி­னரும் மீன­வர்­களும் காப்­பாற்­றி­ய­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை, சுமார் 4 பேர் வரையில் காணாமல் போயி­ருக்­கலாம் எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இந்த விபத்துச் சம்­ப­வத்தில் பலி­யா­ன­வர்­களில் அநே­க­மான சிறு­வர்கள் இலங்­கையைச் சேர்ந்­த­வர் கள் எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இலங்கை, ஆப்­கா­னிஸ்தான், ஈரான் ஆகிய நாடு­களைச் சேர்ந்த பெரும் எண்­ணிக்­கை­யா­ன­வர்கள் சட்ட விரோ­த­மாக அவுஸ்­தி­ரே­லியா நோக்கிப் பய­ணிக்­கின்­றனர்.

இவ்­வாறு இவர்கள் பய­ணிக்கும் பட­குகள் அடிக்­கடி விபத்­துக்­களை சந்­திக்கும் போதி லும் அது குறித்து எவரும் கவலை கொள்­வ­தாகத் தெரி­ய­வில்லை.

யார் இவர்­களை அனுப்­பு­கி­றார்கள்? எவ்­வாறு இவர்கள் அழைத்துச் செல்­லப்­ப­டு­கி­ றார்கள்? என்­பவை அனைத்தும் மிக மர்­ம­மா ­கவே இருக்­கின்­றது. தமக்கு அக­திகள் அந்­தஸ்து கிடைக்கும். அவுஸ்­தி­ரே­லி­யாவில் நிம் ­ம­தி­யாக வாழலாம் என்ற ஒரே குறிக்­கோ­ளி­லேயே இவர்கள் பய­ணிக்­கின்­றனர்.

இவ்­வாறு அக­திகள் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக் குள் ஊடு­று­வு­வதை தடுக்கும் வகையில் அவுஸ்­தி­ரே­லிய அர­சாங்கம் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கின்ற போதிலும் அவை கட்­டுக்­க­டங்­கு­வ­தாகத் தெரி­ய­வில்லை.

இத­னி­டையே அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு சட்­ட­வி­ரோ­த­மாக செல்­ப­வர்கள் ஒரு­போதும் அவுஸ்­தி­ரே­லி­யாவில் குடி­ய­மர்த்­தப்­பட மாட்­டார்கள். அவர்கள் வறிய நாடான பப்­புவா நியூ­கி­னி­யா­வி­லேயே குடி­ய­மர்த்­தப்­ப­டு­வார்கள் என அவுஸ்­தி­ரே­லியப் பிர­தமர் கெவின் ரூட் அண்­மையில் அறி­வித்­தி­ருந்தார்.

இந்த நிலை­யி­லேயே இக்­கோரப் படகு விபத்து இடம்­பெற்­றுள்­ளது. இத­னி­டையே அவுஸ்­தி­ரே­லியப் பிர­த­மரின் இந்த அறி­விப் பைத் தொடர்ந்து நவ்று தீவில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த அக­திகள் கடந்த வெள்­ளிக்­கி­ழமை பெரும் கல­வ­ரத் தில் ஈடு­பட்­டனர்.

நவ்று தீவு பகுதி முகாமில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த நூற்றுக் கணக்­கான அக­திகள் அங்கு தாங்கள் தங்­கி­யி­ருந்த கட்­டி­டங்­களை தகர்த்­து­விட்டு தப்­பிக்க முயன்­றதை அடுத்தே கல­வரம் மூண்­டுள்­ளது. இத­னை­ய­டுத்து இலங்­கையர் உட்­பட 150 பேர் வரையில் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

அது­மாத்­தி­ர­மன்றி அவுஸ்­தி­ரே­லிய டொலரின் படி 60 மில்­லியன் டொல­ருக்கும் அதி­க­மான சேதம் விளை­விக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இத­னி­டையே விசா இன்றி பட­குகள் மூலம் சட்­ட­வி­ரோ­த­மாக அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு வரு­வோ­ருக்கு குடி­ய­மரும் சந்­தர்ப்பம் கிடைக்க மாட்­டாது என கொழும்­பி­லுள்ள அவுஸ்­தி­ரே­லிய உயர்ஸ்­தா­னி­க­ரா­லயம் திட்­ட­வட்­ட­வட்­ட­மாக அறிவித்­துள்­ளது. இவ்­வா­றா­ன­வர்கள் உட­ன­டி­யாக கொழும்­புக்குத் திருப்பி அனுப்­பப்­ப­டா­விடின் அவர்கள் பப்­புவா நியூ­கி­னி­யா­வுக்கு கொண்டு செல்­லப்­பட்டு அங்கே அவர்­களின் கோரிக்கை பரீ­சி­லிக்­கப்­படும். அதற்­க­மைய 19ஆம் திகதி ஜூலை மாதத்­தி­லி­ருந்து பப்­புவா நியூ­கி­னிக்கு அனுப்பி வைக்­கப்­படும் நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்கும் என தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இவர்கள் உண்­மை­யான அக­திகள் என தீர்­மா­னிக்­கப்­படும் பட்­சத்தில் அவர்கள் பப்­புவா நியூ­கி­னி­யா­வி­லேயே குடி­ய­மர்த்­தப்­ப­டு­வார்கள். இத­னை­யொட்டி பப்­புவா நியூ­கி­னியில் பொருத்­த­மான இட­வ­ச­திகள் மற்றும் சேவைகள் குறித்து அவுஸ்­தி­ரே­லிய அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்து வரு­வ­தா­கவும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

அவுஸ்திரேலியாவில் நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும் என எண்ணி இனிமேல் எவரும் படையெடுப்பதை தளர்த்திக் கொள்ள வேண்டும். சட்ட விரோத குடியேற்ற வாசிகள் எந்தக் கட்டத்திலும் அவுஸ்திரேலியாவில் குடியமர்த்தப்பட மாட்டார்கள் என்பதை அந் நாடு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் போலியான முகவர்களின் பசப்பு வார்த்தைகளை நம்பி எவரும் அவுஸ்திரேலியாவுக்கு சட்ட விரோதமாக செல்ல முயற்சிக்க கூடாது. இது பணம் விரயமாகும் பயணம் மாத்திரமல்ல மிகவும் உயிராபத்துமிக்கது என்பதையும் வினையை விலை கொடுத்து வாங்குவதற்கு சமன் என்பதையும் மனதிற் கொள்வது அவசியம்.

வீரகேசரி
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக