அவுஸ்திரேலியா நோக்கி சட்டவிரோதமாகப் பயணிப்போரின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகின்றது. படகுகளின் மூலம் சட்டவிரோதமாகப் பயணிப்பது ஆபத்து நிறைந்தது என அறிந்திருந்தும் கூட உயிரையும் துச்சமென மதித்து சிலர் பயணித்து வருகின்றனர்.
அவுஸ்திரேலியாவை நோக்கி சட்டவிரோதமாகப் பயணித்த வேளையில் இந்தோனேஷியாவுக்கு அருகில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை படகு ஒன்று மூழ்கியதில் இலங்கையர் மூவர் உட்பட 11 பேர் பலியாகியுள்ளனர். மூழ்கிய படகில் பயணித்தவர்களில் அநேகமானவர்கள் இலங்கையர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்துக்குள்ளான குறித்த படகில் பலியானவர்களில் 18மாத குழந்தை உட்பட ஆறு சிறுவர்களும் கர்ப்பிணிப் பெண் ஒருவரும் அடங்குகிறார்கள். கடந்த வியாழக்கிழமை காலை இந்தோனேஷியாவின் ஜாவா தீவுக் கடற்கரைக்குத் தென்கிழக்கே அந்தப் படகு மூழ்கி இரு நாட்கள் கழிந்த நிலையிலேயே இலங்கையைச் சேர்ந்த 5 வயது சிறுவனினதும் ஈரானைச் சேர்ந்த 30 வயது நபரொருவரதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
விபத்துக்குள்ளான குறித்த படகில் 189 பேர் மீட்கப்பட்டுள்ள னர். எனினும் எத்தனை பேர் துல்லியமாக பயணித்தார்கள் என்பது தெரியாமல் உள்ளது.
படகு விபத்தின்போது பெண்கள் சிறுவர்கள் உட்பட அதிகமானோர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும்முகமாக கடும் இருளுக்கு மத்தியில் 4 மணித்தியாலங்களுக்கு அதிகமான நேரம் நீந்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிகளவு பயணிகளை ஏற்றிச் சென்றமையே படகு கடலில் மூழ்கியதற்குக் காரணம் என கூறப்படும் அதேவேளை, கடலில் குதித்து தத்தளித்த அதிகமானவர்களை இந்தோனேஷியப் பாதுகாப்புத் துறையினரும் மீனவர்களும் காப்பாற்றியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சுமார் 4 பேர் வரையில் காணாமல் போயிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்துச் சம்பவத்தில் பலியானவர்களில் அநேகமான சிறுவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர் கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை, ஆப்கானிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையானவர்கள் சட்ட விரோதமாக அவுஸ்திரேலியா நோக்கிப் பயணிக்கின்றனர்.
இவ்வாறு இவர்கள் பயணிக்கும் படகுகள் அடிக்கடி விபத்துக்களை சந்திக்கும் போதி லும் அது குறித்து எவரும் கவலை கொள்வதாகத் தெரியவில்லை.
யார் இவர்களை அனுப்புகிறார்கள்? எவ்வாறு இவர்கள் அழைத்துச் செல்லப்படுகி றார்கள்? என்பவை அனைத்தும் மிக மர்மமா கவே இருக்கின்றது. தமக்கு அகதிகள் அந்தஸ்து கிடைக்கும். அவுஸ்திரேலியாவில் நிம் மதியாக வாழலாம் என்ற ஒரே குறிக்கோளிலேயே இவர்கள் பயணிக்கின்றனர்.
இவ்வாறு அகதிகள் அவுஸ்திரேலியாவுக் குள் ஊடுறுவுவதை தடுக்கும் வகையில் அவுஸ்திரேலிய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்ற போதிலும் அவை கட்டுக்கடங்குவதாகத் தெரியவில்லை.
இதனிடையே அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்பவர்கள் ஒருபோதும் அவுஸ்திரேலியாவில் குடியமர்த்தப்பட மாட்டார்கள். அவர்கள் வறிய நாடான பப்புவா நியூகினியாவிலேயே குடியமர்த்தப்படுவார்கள் என அவுஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரூட் அண்மையில் அறிவித்திருந்தார்.
இந்த நிலையிலேயே இக்கோரப் படகு விபத்து இடம்பெற்றுள்ளது. இதனிடையே அவுஸ்திரேலியப் பிரதமரின் இந்த அறிவிப் பைத் தொடர்ந்து நவ்று தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அகதிகள் கடந்த வெள்ளிக்கிழமை பெரும் கலவரத் தில் ஈடுபட்டனர்.
நவ்று தீவு பகுதி முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நூற்றுக் கணக்கான அகதிகள் அங்கு தாங்கள் தங்கியிருந்த கட்டிடங்களை தகர்த்துவிட்டு தப்பிக்க முயன்றதை அடுத்தே கலவரம் மூண்டுள்ளது. இதனையடுத்து இலங்கையர் உட்பட 150 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதுமாத்திரமன்றி அவுஸ்திரேலிய டொலரின் படி 60 மில்லியன் டொலருக்கும் அதிகமான சேதம் விளைவிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே விசா இன்றி படகுகள் மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு வருவோருக்கு குடியமரும் சந்தர்ப்பம் கிடைக்க மாட்டாது என கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் திட்டவட்டவட்டமாக அறிவித்துள்ளது. இவ்வாறானவர்கள் உடனடியாக கொழும்புக்குத் திருப்பி அனுப்பப்படாவிடின் அவர்கள் பப்புவா நியூகினியாவுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கே அவர்களின் கோரிக்கை பரீசிலிக்கப்படும். அதற்கமைய 19ஆம் திகதி ஜூலை மாதத்திலிருந்து பப்புவா நியூகினிக்கு அனுப்பி வைக்கப்படும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் உண்மையான அகதிகள் என தீர்மானிக்கப்படும் பட்சத்தில் அவர்கள் பப்புவா நியூகினியாவிலேயே குடியமர்த்தப்படுவார்கள். இதனையொட்டி பப்புவா நியூகினியில் பொருத்தமான இடவசதிகள் மற்றும் சேவைகள் குறித்து அவுஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
அவுஸ்திரேலியாவில் நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும் என எண்ணி இனிமேல் எவரும் படையெடுப்பதை தளர்த்திக் கொள்ள வேண்டும். சட்ட விரோத குடியேற்ற வாசிகள் எந்தக் கட்டத்திலும் அவுஸ்திரேலியாவில் குடியமர்த்தப்பட மாட்டார்கள் என்பதை அந் நாடு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் போலியான முகவர்களின் பசப்பு வார்த்தைகளை நம்பி எவரும் அவுஸ்திரேலியாவுக்கு சட்ட விரோதமாக செல்ல முயற்சிக்க கூடாது. இது பணம் விரயமாகும் பயணம் மாத்திரமல்ல மிகவும் உயிராபத்துமிக்கது என்பதையும் வினையை விலை கொடுத்து வாங்குவதற்கு சமன் என்பதையும் மனதிற் கொள்வது அவசியம்.
வீரகேசரி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக