திங்கள், 19 ஆகஸ்ட், 2013

மாவீரன் நெப்­போ­லியன் விட்டுச் சென்ற வாழ்க்கைத் தத்­துவம்...

வர­லாற்றில் இடம்­பி­டித்த சாத­னை­யா­ளர்­களைப் பார்க்­கின்­ற­போது ஒவ்­வொரு தனி மனி­தனும் தனது ஆளு­மை­யாலும் விடா­மு­யற்­சி­யாலும் தன்­னம்­பிக்­கை­யு­ட­னுமே வாழ்க்கைப் பாதையில் தடம்­ப­தித்துச் சென்­றுள்ளனர். அந்­த­வ­கையில் ஐரோப்­பிய வர­லாற்றில் மட்­டு­மின்றி உலக வர­லாற்றில் தனக்­கென தனித்­து­வ­மான இடத்­தினை தக்­க­ வைத்து வாழ்க்கைச் செய்­தி­களை உல­கிற்கு விட்டுச் சென்ற மாவீரன் நெப்­போ­லி­யனின் வாழ்க்கைச் சரி­தை­யி­லி­ருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்­டி­யவை நிறை­யவே உள்­ளன.

கோர்சிக்கா தீவி­லுள்ள அஜா­சியா என்ற கிரா­மத்தில் தந்தை சார்லஸ் போனபாட் டிற்கும் தாயான லெட்­டீ­சி­யா­விற்கும் மக­னாக 1769 ஆகஸ்ட் 15ஆம் திகதி பிறந்தான். இன்று நெப்­போ­லியன் என்­ற­துமே நம் மன க்­கண் முன் ஓர் சிறந்த வீர­னா­கவும் வலி­மை­ யு­டை­ய­வ­னா­கவும் பிரான்ஸியச் சக்­க­ர­வர்த்­தி­யா­கவும் உத­ய­மா­கின்றான். ஆனால் இவ­னது இளமைப் பருவம் பல சோத­னை­க­ளும் வேத­னை­க­ளும் நிறைந்தது.

நெப்­போ­லி­யனின் குடும்பம் மிக வறு­மை­யா­னது. சிறு­வ­ய­தி­லி­ருந்தே இரா­ணுவக் கல்­ லூ­ரியில் பயில வேண்டும் என்ற பேரவா அவ­னுடன் குடி­கொண்­டிந்­தது. இதனால் அவ­னது விருப்­பத்­தினை அறிந்த பெற்றோர் பாரிஸ் நக­ரத்­தி­லுள்ள பீரையன் இரா­ணுவக் கல்­லூ­ரி­யிலே சேர்த்து விட்­டனர். பத்து வய­திலே தாயைப்­பி­ரிந்த அக்­கு­ழந்தை தாயின் பாசத்­திற்கு ஏங்­கி­யது. இருப்­பினும் பின்னர் தன்னைப் பழக்­கப்­ப­டுத்திக் கொண்­டது.

உண்­மையில் அந்த இரா­ணு­வக்­கல்­லூரி செல்­வந்த மாண­வர்கள் படிக்­கின்ற பாட­ சாலை என்­ப­தனால் நெப்­போ­லியன் வறு­மையின் கார­ண­மாக மாண­வர்­களால் ஒதுக்­கப்­பட்டான். எனவே நெப்­போ­லியன் தனி­மை­யின்­போது தனது நண்­ப­னாக நல்ல கதைப்­புத்­த­கங்­களைத் தேர்ந்­தெ­டுத்தான். ‘கற்­காத நாள் எல்லாம் பிற­வாத நாள்’ என்ற சிந்­த­னை­யோடு செயற்­பட்டான். ஓய்வு நேரங்­களில் நூல­கத்­திற்குச் சென்று மாம­னி­தர்­களின் சரி­தை­க­ளையும் அவர்கள் நாட்­டிற்கு செய்த சேவை­க­ளையும் வாசித்து அக­ம­கிழ்­வ­டைந்தான். ஒவ்­வொரு நாட்டின் முன்­னேற்­றத்­தையும் உயர்­வையும் தாழ்­வையும் குறித்துச் சிந்­தித்தான்.

இவன் பல­ த­டவை தனது அன்­னைக்கு கடி­தங்கள் எழு­து­கின்­ற­போது ‘ஹோமரின் காவி­யத்தின் தெளி­வாலும் கத்­தியின் துணை­ யாலும் நான் உல­கத்­தினை ஆட்­டி­வைக்கப் போகின்றேன்’ எனவும் ‘மனி­த­னு­டைய திற னைக் கவ­னி­யாமல் அற்­ப­மா­கிய பிறப்பின் கார­ண­மா­கவே பத­விகள் அளிக்­கப்­பட்டு வந்த வழக்­கத்­தினை மாற்­றி­ய­மைப்பேன்’ எனக் குறிப்­பிட்­டி­ருந்தான். ஒரு­ த­டவை கோர்­சிக்காத் தலை­வ­ருக்கு எழு­திய கடி­த­மொன்றில் ‘தேசம் அழிந்து கொண்­டி­ருந்­த­போது நான் பிறந்தேன். நமது கடற்­க­ரையில் இறக்­கப்­பட்ட முப்­ப­தி­னா­யிரம் பிரான்ஸி­யர் கள் தமது சுதந்­தி­ரத்தை குருதி அலை­க­ளுக் குள் அமிழ்­த்தினர். இந்த வெறுக்­கத்­தக்க காட்­சியே எனக்கு முதலில் புலப்­பட்­டது. இந்­நி­லையை நான் மாற்­றி­ய­மைப்பேன். எனக்­ கு­றிப்­பிட்­டி­ருந்தார். அன்று ‘இந்­தச்­சி­றிய தீவு என்றோ ஒருநாள் ஐரோப்­பாவை வியப்பில் ஆழ்த்­தப்­போ­கின்­றது என்­பதை நான் உண­ரு­கின்றேன்’ என ரூசோ குறிப்­பிட் டார். சம­கா­லத்தில் இதன்­பொருள் பல­ருக்கு விளங்­க­வில்லை. ஆனால் பிற்­கா­லத்தில் நெப்­போ­லி­யனின் செயற்­பா­டுகள் அதனை வெளிப்­ப­டுத்­தி­ய­போ­துதான் பல­ராலும் அதனை உண­ர­ மு­டிந்­தது.

ஒரு­முறை 1784இல் மழைக்­கா­லத்தில் அதி­க­மான பனிக்­கட்­டிகள் இரா­ணுவக் கல்­லூ­ரியைச் சுற்­றிலும் விழுந்து பாறை பாறை­யாக உறைந்து கிடந்­தன. இதனால் மாண­வ ர்­களால் விளை­யாட வெளியே செல்ல முடி­ய­வில்லை. இத­னைக்­கண்ட நெப்­போ­லியன் நண்­பர்­களை இரண்டு குழுக்­க­ளாகப் பிரித்து பனிக்­கட்­டி­களால் அரண்­மணை அமைத் தான். இரு­கு­ழுக்­களும் இணைந்து அக­ழி யும் கொத்­த­ளங்­களும் சூழ்ந்த பேர­ணை அமைத்­தனர். பின்னர் இரண்டு மாண­வக்­கு­ழுக்­களில் ஒரு­பி­ரி­வினர் அதனைத் தாக்­கு­ மாறும் மற்­றைய பிரி­வினர் அதனைத் பாது­காக்­கு­மாறும் கூறி புத்­திக்­கூர்­மையால் போர்­மு­றை­களைப் புகட்­டினான்.

16 வய­தா­ன­போது பிரான்ஸின் பீரங்­கிப்­ப­டையில் சிறிய பத­வியில் அமர்த்­தப்­பட் டான். ஆனால் அந்­த­வே­லையில் அதிக அக் ­கறை காட்­ட­வில்லை. சம­கா­லத்தில் பிரான் ஸில் புரட்­சிக்­கால கட்­ட­மாகக் காணப்­பட்­டது. பிரான்ஸின் டியூல்­லரி அரண்­மனை, மக் கள் கூட்­டத்தால் கைப்­பற்­றப்­பட்­டது. மன் னன் பதவி நீக்­கப்­பட்டான். துருப்­புக்­களைச் சரி­யாகப் பயன்­ப­டுத்தி மக்கள் கிளர்ச்­சியை அடக்­கு­வ­தோடு டியூல்­லரி அரண்­ம­னை யைக் கைப்­பற்றும் பொறுப்பு இவ­னுக்கு வழங்­கப்­பட்­டது. 1793ஆம் ஆண்டே படை­ யெ­டுத்துச் சென்று டியூல்­லரி அரண்­ம­னை யை மீட்டுக் கொடுத்தான். இதனால் இவ­னுக்குப் பத­வி­யு­யர்வு வழங்­கப்­பட்­டது.

சம­கா­லத்தில் தேசிய பேர­வையின் செயற்­பா­டு­க­ளினால் நம்­பிக்கை இழந்த மக்கள் அதனை சுற்றி வளைத்­தி­ருந்­தனர். தன்­னு­டைய நட­வ­டிக்­கையின் மூலம் தேசிய பேரவை உறுப்­பி­னர்­களை மீட்­டெ­டுத்தான். இதற்குப் பிரதி உப­கா­ர­மாக பிரான்ஸின் இரா­ணுவத் தள­ப­தி­யாக நிய­மிக்­கட்டான். இது இவனின் பிற்­பட்­ட­கால எழுச்­சியைப் புலப்­ப­டுத்தி நின்­றது.

மேலும் இத்­தா­லியின் மீதான படை­யெ­டுப்­பிற்குத் தலைமை தாங்கிச் சென்றான். இதில் இவன் பெற்ற வெற்­றியின் கார­ண­மாக புகழின் உச்­சிக்கே சென்றான். இருப்­பினும் எகிப்­திய படை­யெ­டுப்பில் தோல்­வியைத் தழுவிக் கொண்டு திரும்­பி­ய­போது டைரக்­டரி நிர்­வாகம் பிரச்­சி­னைக்­குள்­ளா­கி­யி­ருந்­தது. மக்கள் புரட்­சியில் ஈடு­பட்­டனர். 1799ஆம் ஆண்டு டைரக்­ட­ரி­யினுள் புகுந்து உணர்ச்சி பூர்­வ­மான உரையை ஆற்றி புரட்­சியின் குழந்­தை­யாக அவ­த­ரித்தான். இவன் மக்கள் மத்­தியில் தன்னை ஆட்­சி­யா­ள­னாகப் பிர­க­ட­னப்­ப­டுத்திக் கொண்டான். இந்த நட­வ­டிக்கை தொடர்பில் கருத்­துக்­கூ­று­கையில் ‘பிரான்ஸின் மணி­முடி நிலத்தில் வீழ்ந்து கிடந்­ததைக் கண்டேன். அதை வாளால் எடுத்து அணிந்து கொண்டேன்’. என தன்­னு­டைய உயர்­வுக்கு யுத்­தத்தைக் கரு­வி­யாக்கிக் கொண்டான். ஏழை ஒரு­வனின் மகன் மாபெரும் நாட்டின் சக்­க­ர­வர்த்தி ஆகின்ற அற்­புதம் அன்­றைக்கு நிகழ்ந்­தது.

பின்னர் அர­சாங்­கத்­துறை, நிதித்­துறை, நீதி த்­துறை, தொழில்­துறை ஊக்­கு­விப்­புக் கள், கல்­வித்­துறை மற்றும் சமூ­க­நலப் பணி கள் என அனைத்­திலும் பழை­மை­ மு­றையை ஒழித்து புதிய சீர்­தி­ருத்­தங்­களை ஏற்­ப­டுத் ­தினான். ஒரே நேரத்தில் போரிலும் ஈடு­பட்­டுக்­கொண்டு நாட்­டையும் வளப்­ப­டுத்­து­வ தில் ஈடு­பட்டான். இவன் 68 போர்க்­க­ளங்­க ளில் தனது திற­மையை வெளிப்­ப­டுத்தி வெற்­றி­வாகை சூடினான். இருப்­பினும் இறு­ தியில் இவன் நடை­மு­றைப்­ப­டுத்­திய கண்­ட­திட்டக் கொள்­கையும் ரஷ்யா மீதான படை­யெ­டுப்பும் இவ­னது தோல்­விக்குக் கார­ண­மாக அமைந்­தது.

நெப்­போ­லி­யனின் வாழ்க்கை வெறும் வர­லாற்றுத் தக­வல்­க­ளாக இல்­லாமல் நம் வாழ்க்­கைக்கு வழி­காட்டும் செய்­தி­க­ளையும் உள்­ள­டக்­கி­யது. இவ­னு­டைய வாழ்க்கை மிகவும் சிக்­க­ன­மா­கவே அமைந்­தி­ருந்­தது. குறிப்­பாக ஓரிரு சேட்­க­ளையே அணிந்து கொண்டான். தன் அறை­களில் பதி­னான்கு ஆண்­டு­கால சம்­ப­ளத்தில் வாங்­கிய மேசை, நாற்­கா­லி­க­ளையே வைத்­தி­ருந்தான். அத்­தோடு இரு­வேளை மட்­டுமே உணவு உட்­கொள்ளும் பழக்­கமும் அவ­னுக்­கி­ருந்­தது. அரைக்­கு­வளைத் தேனீரை இரண்டு அல்­லது மூன்று முறை அருந்தும் இவன் எந்­த­நே­ர மும் சுறு­சு­றுப்­பாக வேலையில் கண்ணும் கருத்­து­மாக இருந்து செயற்­ப­டு­வானாம்.

இவனால் இயற்­றப்­பட்ட சட்­டக்­கோவை ‘நெப்­போ­லியன் சட்­டக்­கோவை’ என அழைக்­கப்­ப­டு­கின்­றது. தற்­போது பல நாடு­ க­ளிலும் சட்டக் கல்­லூ­ரி­க­ளி லும் இது ஏற் றுக் கொள்­ளப்­பட்­டுள்­ளது.

இவன் சிறந்த ஒருங்­கி­ணைப்­பா­ள­ரா­கவும் நிர்­வா­கி­யா­கவும் தலை­மைப்­பண்பு மிக்­க­வ­னா­கவும் திகழ்ந்தான். தொடர்ந்து படித்துக் கொண்­டி­ருப்­பது அறிவை வளர்த்துக் கொள்­ வ­தற்கு வழி­வ­குக்கும் என சிறு­வ­ய­திலி­ருந்தே புத்­த­கங்­களைக் காத­லிக்கத் தொட ங்கி விட்டான். இப்­ப­ழக்கம் பிரான்­சியச் சக்­க­ர­வர்த்­தி­யாக இருந்த காலத்­தி­லும்­சரி ஹெலெ­னாவில் சிறைச்­சா­லையில் இருந்த காலத்­தி­லும்­சரி ஏன் தனது இறு­தி­நாள்­வ­ரை யிலும் புத்­த­கங்­க­ளு­டனே காலம் கழித்தான்.

ஒரு­த­டவை 1808ஆம் ஆண்டு போர்த்தரு­ணத்தில் படை­களை நடாத்திச் சென்­றி­ருக்க நெப்­போ­லியன் தன் நூலகப் பொறுப்­பா­ள­ருக்கு ஒரு கடிதம் எழு­தினான். அதில் நட­மா டும் நூலகம் ஒன்றை ஏற்­ப­டுத்த வேண்டும். 1000 புத்­த­கங்­களை மிகவும் சிறிய எழுத்­துக் ­களில் பிரின்ட் செய்து அனுப்­பவும் என் ­றெ­ழு­தி­யி­ருந்­தது. அதன்­படி அவர் எங்கு படைக­ளுடன் சென்­றாலும் அங்கு இந்த நூலகம் இருக்கும்.

இவன் நேரமேலாண்மையின் தளபதியாக இருந்தான். ‘இந்த நிமிடத்தில் வாழுங்கள்’ என்பதே இவனுடைய மிகமுக்கியமான வாழ்க்கைத் தத்துவமாகும்.

இவனுக்கு தன்னைவிட இரண்டாண்டுகள் மூத்தவளும் இரண்டு பிள்ளைகளின் தாயு மான ஜோசப்பின் மீது முதல் பார்வை யிலே காதல் கொண்டு அவளை மணம் செய்து கொண்டான். அவளுக்காக உலகம் முழுவதும் இருந்து ரோஜா மலர்ச் செடி களை பரிசாக அளித்தான். மனைவியை விவாகரத்து செய்த பின்னும் மாளிகையில் இருந்து அவளுக்காக கண்ணீர் வடித்தான்.

இவனது வம்சத்தினருக்கு இருந்த இரை ப்பை புற்றுநோயின் காரணமாகவே இவன் இறந்தான் என நம்பப்படுகின்றது. இவன் தனது புகைப்படங்கள் அனைத்திலுமே தன் வலக்கையை சட்டைக்குள் வைத்திருக்கக் காரணம் வயிற்று வலியால்தான் எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அஞ்சா நெஞ்சமும் கடின உழைப்பும் திட்டமிட்டு செயலாற்றிய தீரமும் எதிரிக ளையும் அரவணைத்துச் செல்லும் இனிய பண்பும்தான் நெப்போலியனை வரலா ற் றில் பேசவைத்தது. வீரம் நிறைந்த நெப் போலியனின் உடல் மண்ணுக்கு இரையாகி மறைந்தாலும் அந்த மாவீரனின் புகழ் உலக வரலாறு உள்ளவரை வரலாற்றில் பேசப்ப டும் என்பது திண்ணம்.

பொன்­னுத்­துரை நிலாந்­தினி,
கிழக்­குப்­பல்­க­லைக்­க­ழகம்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல