அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

அழ­கான உத­டு­க­ளுக்கு......

முகத்­திற்கு அழ­கூட்­டு­வது உத­டுகள் தான். பரு­வ­நிலை மாறு­பா­டான கோடை, குளிர், காற்று போன்ற கார­ணங்­களால் வறட்சி,வெடிப்பு போன்­றவை உதட்டில் ஏற்­பட்டு முக அழ­கையே அவை கெடுத்­து­விடும். ஏனெனில் உதட்டால், அள­வுக்கு அதி­க­மாக எதையும் தாங்க முடி­யாது. அது­மட்டும் இல்­லாமல், உடலின் மற்ற பகு­தி­களில் இருக்கும் சருமம் 28 நாட்­க­ளுக்கு ஒரு முறை இறந்த செல்­களை இழந்து புதிய செல்­களை உரு­வாக்கிக் கொள்ளும்.

ஆனால் உதட்டுப் பகு­தியில், புதிய செல்­களை உரு­வாக்­கு­வ­தற்கு மாத கணக்கில் ஆகும். மேலும் சில வெடிப்­புகள் உடலில் நீர் வறட்சி மற்றும் சோப்­பு­களை பயன்­ப­டுத்­து­வ­தி­னாலும் ஏற்­ப­டு­கின்­றன. அதிலும் வெடிப்­புகள் வந்தால், இரத்தம் வடிதல்,தோல் உரிதல், தொட்டால் வலிப்­பது மட்­டு­மின்றி, உதட்டின் நிறம் மங்கி கரு­மை­யா­கி­விடும். ஆகவே இத்­த­கைய பிரச்சி­னைகள் ஏற்­ப­டாமல் இருப்­ப­தற்கு, உதட்டை இயற்கை முறையில் சரி­யாக பரா­ம­ரிக்க வேண்டும். காலத்­திற்கு ஏற்­ற­வாறு உதட்­டிற்கு சாயம் பூசு­வ­தனால் மட்டும், உதட்­டிற்கு நிறத்தை கொடுத்து விட முடி­யாது.

இயற்­கை­யா­கவே உதடு பள­ப­ளப்­பா­கவும், இளஞ்­சி­வப்­பா­கவும் இருத்­தலே கொள்ளை அழகு. அவ்­வாறு உதடு இருக்க வேண்டும் என்று ஆசைப்­ப­டுவோர், உடலின் மற்ற பாகங்­களை கவ­னிப்­பது போல உதட்டை கவ­னிப்­ப­தில்லை. எனவே உதடு விரை­விலே கவ­னிப்பு இல்­லாமல், இயற்­கை­யான நிறத்தை இழந்­து­விடும். பொது­வாக உத­டு­களைப் பரா­ம­ரிக்க நீண்ட நேரம் பிடிக்க போவ­தில்லை, ஒரு நாளில் மூன்று முதல் நான்கு நிமி­டங்­களே ஆகும். எனவே உத­டு­களை சரி­யா­கவும், எளிய முறை­யிலும் பரா­ம­ரித்து, அதை இளஞ்­சி­வப்­பா­கவும் ஆரோக்­கி­ய­மா­கவும் வைத்­தி­ருக்க சில வழிகள் கீழே கொடுக்­கப்­பட்­டுள்­ளன. அதைப் படித்து பின்­பற்றி, அழ­கான உத­டு­களைப் பெறுங்கள்.

உத­டு­களைத் தேய்த்தல்: தினமும் பல் தேய்க்கும் பிரஷ் கொண்டு உதட்­டையும் தேய்க்க வேண்டும். இவ்­வாறு செய்­வதால், உதட்டில் தங்­கி­யுள்ள தூசிகள், காய்ந்து போன எச்சில் மற்றும் அழுக்­கா­னது நீங்கி, உதடு சுத்­த­மா­கவும் மென்­மை­யா­கவும் இருக்கும்.

மசாஜ் : உடலின் எந்த பகு­தி­யிலும் செய்­யக்­கூ­டிய ப.ைழ­மை­யான முறை மசாஜ் ஆகும். ஆகவே பாதாம் எண்ணெய் மற்றும் எலு­மிச்சை சாற்றை கலந்து, அவ்­வப்­போது உதட்­டிற்கு மசாஜ் செய்­யலாம். அதிலும் இந்த மசாஜை, தினம் இரவு தூங்கும் முன்பு உதட்­டிற்கு செய்­யலாம்.

சர்க்­கரை உரிதல் : சர்க்­கரை படி­கங்கள் ஒரு சிறந்த தேய்ப்பான். எனவே ஒலிவ் எண்ணெய் அல்­லது பாலா­டை­யுடன் சிறிது சர்க்­கரை கலந்து உதட்டில் மென்­மை­யாகத் தேய்த்து, சிறிது நேரம் விட்டு பின்பு அதை மெது­வாக தேய்த்து நீக்­கலாம். இவ்­வாறு செய்­வதால், உதட்டை ஈரப்­ப­சை­யுடன் வைத்­தி­ருக்­கலாம்.

மாதுளை செய்யும் மாயம் : உதட்டின் மேல் மாதுளை செய்­யக்­கூ­டிய மாயத்தை, அதன் நிறத்தை கொண்டே தெரிந்து கொள்­ளலாம். அதற்கு ஒரு கிண்­ணத்தில் மாதுளை விதை­களை எடுத்து கொண்டு, அதை அரைத்து, அத­னுடன் சீஸ் சேர்த்து கலந்து, ஒரு பசை போல் செய்து, உதட்டில் தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து கழு­வினால், இதன் பலனை கண்­கூ­டாகக் காணலாம். இவ்­வாறு தின­சரி செய்­வதன் மூலம் உத­டுகள் இளஞ்­சி­வப்­பா­கவும், பள­ப­ளப்­பா­கவும் மாறும்.

சீஸ் : சீஸ் அல்­லது சூரிய காந்தி எண்­ணெயில் எலு­மிச்சை சாற்றை கலந்து சிறிது உதட்டில் தட­வினால், உட­னடி பலனைக் காணலாம். இம்­முறையானது பல­கா­ல­மாக இருந்து வரும் ஒரு முறை­யாகும். அதிலும் ஒரு இரவில் இவ்­வாறு செய்தல் மூலமே நல்ல பலனை காண முடியும்.

ரோஜா இதழ் :சில ரோஜா இதழ்­களை எடுத்து பாலில் சிறிது நேரம் ஊற வைத்து, அரைத்துக் கொள்ள வேண்டும். வேண்­டு­மெனில் அத்­துடன் தேன் மற்றும் கிளி­சரீன் சேர்த்து கொள்­ளலாம். இக்­க­ல­வையை உதட்டில் தடவி, பின் பாலைக் கொண்டு கழுவ வேண்டும். இதனால் நாள­டைவில் உதடு இளஞ்­சி­வப்பு நிறம் பெற்று மின்னும்.

ஓரஞ்சு தோல்: ஓரஞ்சு தோல் உதட்டை நன்­றாக சுத்­தப்­ப­டுத்தி ஈரப்­ப­த­மாக வைக்கும்.

வெள்­ளரி மற்றும் கெரட்: வீட்­டிலே இருக்கும் பொருட்­க­ளான வெள்­ளரிச் சாறு, கெரட் சாறு ஆகி­ய­வற்றை ஒன்­றாகக் கலந்து, பஞ்சு கொண்டு நனைத்து, உதட்டை துடைத்து எடுத்தால், சில நாட்­க­ளிலே உதடு மினு­மி­னுக்கும்.

பீட்ரூட்: இயற்­கை­யான இளஞ்­சி­வப்பு நிறம் பெற உதட்டில் பீட்ரூட் சாற்றை தூங்கும் முன்பு தடவ வேண்டும். இளஞ்­சி­வப்பு உத­டுகள் பெற உதவும் சிறந்த இயற்கை வழி­களில் இதுவும் ஒன்­றாகும்.

எலு­மிச்சை: தினமும் இரவு எலு­மிச்சை சாற்­றுடன் கிளி­சரீன் கலந்து, உதட்டில் தடவி வர கருமை நீங்கும். அதிலும் இதை இரவில் உதட்டில் தடவி, இரவு முழு­வதும் வைத்­தி­ருந்து காலையில் கழுவ வேண்டும்.

தவிர்க்க வேண்­டி­யவை: புகைப்­பி­டித்­தலை தவிர்க்க வேண்டும். இது நுரை­யீ­ரலை மட்டுமின்றி, உதட்டையும் கருப்பாக்கிவிடும். டீ, கோப்பி மற்றும் மது போன்ற பானங்கள் உட்கொள்வதையும் குறைக்க வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறைந்தால், அது உதட்டில் உடனே காட்டி கொடுத்து விடும். ஆகவே அடிக்கடி நீர் அருந்தி, உடலில் தேவையான நீர்ச்சத்தை தக்க வைத்து கொள்ள வேண்டும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக