அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 27 நவம்பர், 2013

ஜிமெயிலில் படங்கள் அட்டாச்மென்ட்

ஜிமெயிலில் படங்களை அட்டாச் செய்திட முடிகிறது. ஆனால், மெயில் செய்தியிலேயே ஒட்டி அனுப்ப முடியவில்லை. இதற்கு என்ன காரணம்?

படங்களை செய்தியுடன் ஒட்டி அனுப்ப, சில செட்டிங்ஸ் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். உங்கள் கம்ப்யூட்டரில் அதனைக் கீழ்க்கண்டவாறு மேற்கொள்ளவும்.
ஜிமெயில் தளத்தைத் திறந்து, ஜிமெயில் அக்கவுண்ட் செட்டிங்ஸ் சென்று, அங்கு Labs என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும்.

இங்கு செட் செய்திட டூல்ஸ்கள் நீளக் கட்டங்களில் தரப்பட்டிருக்கும்.

இதில் "Inserting Images” என்ற டூல் கட்டத்திற்குச் செல்லவும்.

அருகில் உள்ள இரண்டு ஆப்ஷன்களில் "Enable” என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
பின்னர், அப்படியே கீழாகச் சென்று, "Save Settings” என்பதில் கிளிக் செய்திடவும்.

இனி உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டைத் திறந்தால், அதில் போட்டோ மற்றும் படங்களை இணைக்க ஒரு பட்டன் காட்டப்படும்.

இதனைக் கிளிக் செய்து, பட பைல்களை மெயிலின் டெக்ஸ்ட்டுடன் இணைக்கலாம்.
நீங்கள் தர விரும்பும் குறிப்புகளைக் கீழாக எழுதலாம்.

நீங்கள் படம் ஒன்றைத் தேர்ந்தெடுது, உங்கள் ஜிமெயில் செய்திக் கட்டத்தில், Insert Image என்பதில் கிளிக் செய்தவுடன், உங்கள் ஜிமெயில் செய்தியில், கர்சரை எங்கு வைத்திருக்கிறீர்களோ, அங்கு ஒட்டப்படும்.

இந்த படத்தின் அளவை நீங்கள் விரும்பும் வகையில் சுருக்கலாம்.

அதற்கான ஹேண்டில் ஜிமெயிலில் தரப்பட்டுள்ளது.

அல்லது அந்த படம் எப்படி இருக்கலாம் என்பதற்கு ஜிமெயில் தளத்திலேயே Small, Medium, Large, and Original Size என நான்கு ஆப்ஷன் கிடைக்கும். அதில் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

சரி, நீங்கள் அனுப்பிய படத்தை உங்கள் நண்பரால் பார்க்க முடியும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அவர் இதனைக் காண முடியுமா?

பழைய இமெயில் கிளையண்ட் பயன்படுத்தினால், நிச்சயம் படங்களைக் காண இயலாது.

படத்திற்குப் பதில் ஒரு எக்ஸ் மார்க் அடையாளம் மட்டுமே கிடைக்கும். அவர் பயன்படுத்தும் இமெயில் கிளையண்ட் புரோகிராமில் எச்.டி.எம்.எல். பார்க்கும் வகை இயக்கப்பட்டிருக்க வேண்டும்.

இதனை அவருக்கு நீங்கள் தெரிவிக்க வேண்டும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக