அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வியாழன், 5 டிசம்பர், 2013

72 ஐ திருமணம் செய்த 27

சீனாவைச் சேர்ந்த 27 வயது யுவ­தி­யொ­ருவர் கடும் எதிர்ப்புக்கு மத்­தியில் தனது மனம் கவர்ந்த காத­ல­ரான 72 வயது வயோ­தி­பரை திரு­மணம் செய்­துள்ளார்.

ஸாங் பெங் என்ற மேற்­படி யுவதி 15 வயது சிறு­மி­யா­க­வி­ருந்த போது, நோயுற்­றி­ருந்த தனது தந்­தைக்கு மருத்­துவம் செய்ய வந்த வென் சாங்­லிங்கை சந்­தித்து காதல் கொண்டார்.

இந்­நி­லையில் தந்தை இறந்­ததும் ஸாங் பெங், வென் சாங்­லிங்கை தான் காத­லிப்­பதை பகி­ரங்­க­மாக அறி­வித்து அவ­ரது வீட்டில் குடி­யே­றினார்.

இதனையடுத்து கடந்த டிசம்பர் மாதம் அவர் கரு­வுற்று அண்­மையில் ஆரோக்­கி­ய­மான ஆண் குழந்­தை­யொன்றைப் பிர­ச­வித்­துள்ளார்.

பிறந்த குழந்­தைக்கு 'சொர்க்கம்' என பொருள்­படும் வகையில் ரியன் என பெயர் சூட்­டப்­பட்­டது.

வென் சாங்­லிங்­கி­ற்கு ஏற்­க­னவே செய்த திரு­ம­ணத்தின் மூலம் 4 பிள்­ளைகள் உள்­ளனர்.

இந்­நி­லையில் அவர்­க­ளது உற­வுக்கு எதிர்ப்புத் தெரி­வித்து வந்த இரு தரப்பு குடும்­பத்­தி­னரும் அவர்­க­ளுக்கு திரு­மணம் செய்து வைக்க முடி­வெ­டுத்­தனர்.

இந்­நி­லையில் குழந்தை சகிதம் மேற்­படி ஜோடி திரு­மண பந்­தத்தில் இணைந்­துள்­ளது.

தனது மகளின் காத­லுக்கு ஆரம்­பத்தில் கடும் எதிர்ப்புத் தெரி­வித்து வந்த ஸாங் பெங்கின் தாயார் (66 வயது), தற்­போது தனது பேரனை பரா­ம­ரிப்­ப­தற்­காக மக­ளுடன் வசித்து வரு­கிறார்.

தனது திரு­மணம் தொடர்பில் ஸாங் பெங் விபரிக்கையில், தான் ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சிகரமாக வாழ்வதாக குறிப்பிட்டார்.

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக