சீனாவைச் சேர்ந்த 27 வயது யுவதியொருவர் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் தனது மனம் கவர்ந்த காதலரான 72 வயது வயோதிபரை திருமணம் செய்துள்ளார்.
ஸாங் பெங் என்ற மேற்படி யுவதி 15 வயது சிறுமியாகவிருந்த போது, நோயுற்றிருந்த தனது தந்தைக்கு மருத்துவம் செய்ய வந்த வென் சாங்லிங்கை சந்தித்து காதல் கொண்டார்.
இந்நிலையில் தந்தை இறந்ததும் ஸாங் பெங், வென் சாங்லிங்கை தான் காதலிப்பதை பகிரங்கமாக அறிவித்து அவரது வீட்டில் குடியேறினார்.
இதனையடுத்து கடந்த டிசம்பர் மாதம் அவர் கருவுற்று அண்மையில் ஆரோக்கியமான ஆண் குழந்தையொன்றைப் பிரசவித்துள்ளார்.
பிறந்த குழந்தைக்கு 'சொர்க்கம்' என பொருள்படும் வகையில் ரியன் என பெயர் சூட்டப்பட்டது.
வென் சாங்லிங்கிற்கு ஏற்கனவே செய்த திருமணத்தின் மூலம் 4 பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் அவர்களது உறவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்த இரு தரப்பு குடும்பத்தினரும் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தனர்.
இந்நிலையில் குழந்தை சகிதம் மேற்படி ஜோடி திருமண பந்தத்தில் இணைந்துள்ளது.
தனது மகளின் காதலுக்கு ஆரம்பத்தில் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்த ஸாங் பெங்கின் தாயார் (66 வயது), தற்போது தனது பேரனை பராமரிப்பதற்காக மகளுடன் வசித்து வருகிறார்.
தனது திருமணம் தொடர்பில் ஸாங் பெங் விபரிக்கையில், தான் ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சிகரமாக வாழ்வதாக குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக