ஞாயிறு, 15 டிசம்பர், 2013

குழந்தைகளுக்கு பணத்தின் அருமையை உணர்த்துவது நல்லதா?

ஒவ்­வொரு மனி­த­னுக்கும் தனது அடிப்­படை தேவை­களை பூர்த்தி செய்­து ­கொள்ளப் பணம் தேவை. அதுவும் இன்­றைய வாழ்­வியல் முறையில் பணத்தின் தேவை பன்­ம­டங்கு உயர்ந்­துள்­ளது.அத­னா­லேயே பணம் ஒரு இன்­றி­ய­மை­யாத படைப்­பாக திகழ்­கி­றது.



ஒரு பெற்றோர் அல்­லது காப்­பாளர் குழந்­தை­க­ளுக்கு தரும் பரிசு வாழ்நாள் முழு­வதும் பயன்­த­ரக்­கூ­டிய, ஒரு சிறந்த அன்­ப­ளிப்பு எது­வென்றால் அது அவர்­க­ளுக்கு பணம் குறித்த அறிவைப் புகட்­டு­வது தான். இன்­றைய குழந்­தை­க­ளுக்கு பணத்தின் முக்­கி­யத்­துவம் தெரிந்த அள­விற்கு அதனை பாது­காக்க தெரி­வ­தில்லை. அதை உணர்த்­து­வது பெற்­றோர்­களின் தலை­யாய கட­மை­யாகும்.

அவர்கள் வய­தி­னையும் புரிந்­து­கொள்ளும் திற­னையும் பொறுத்து பணம் பற்­றிய உங்கள் அறி­வாற்­றலை அவர்கள் அறிந்­து­கொள்ளச் செய்­யலாம். இது அவர்­கள் வாழ்வின் பல கட்­டங்­களில் உதவும்.

பணத்தின் தேவை!! பணம் பற்­றிய அறிவை அவர்­க­ளுக்கு புகட்­டு­வதில் முதற்­கட்­ட­மாக பணம் ஏன் தேவைப்­ப­டு­கி­றது? என்று விளக்­கினால் அதை அவர்கள் காலப்­போக்கில் புரிந்­து­கொள்­வார்கள்.

ஆடம்­பர செல­வுகள்

பணத்தின் முக்­கி­யத்­து­வத்­தையும் ஆடம்­ப­ரங்­களை முற்­றிலும் ஒதுக்­கு­வ­தையும் தகுந்த உதா­ர­ணங்­க­ளோடு குழந்­தைகள் மனதில் பதி­ய­வைத்தால் அது அவர்கள் மனதில் நன்கு பதியும் என்­பதில் சந்­தேகம் வேண்டாம்.

சன்­மானம்!!..

பணத்தின் அரு­மையை புரி­ய­வைக்க உதா­ர­ண­மாக ஒரு நூறு ருபாய் தற்­போது இருப்­பதை விட கடந்­த­கா­லங்­களில் எவ்­வ­ளவு மதிப்­புடன் இருந்­தது என்­பதை விளக்­கலாம். இதே வேளையில், அவர்கள் செல­வுக்­காக, சிறு வீட்­டு­வே­லை­களை செய்ய வைத்து அதற்கு சன்­மா­ன­மாக பணத்தை கொடுத்து ஊக்­கப்­ப­டுத்­தலாம். இதன் மூலம் பணம் நன்கு உழைத்தால் மட்­டுமே கிடைக்கும் என்ற உண்­மையை உண­ரத்­தொ­டங்­கு­வார்கள்.

முக்­கி­ய­மான நிதி நிறு­வனம்

அடுத்­த­தாக அவர்கள் வங்கி ஒரு முக்­கி­ய­மான நிதி நிறு­வனம் என்­பதை மெது­வாக அறி­யச்­செய்­யுங்கள். இவ்­வி­ப­ரத்தை மேலும் ஈடு­பாடு உடை­ய­தாகச் செய்ய, நீங்கள் வங்­கிக்கு செல்­லு­கையில், உங்கள் குழந்­தையை அழைத்­துச்­சென்று அங்கு காணப்­படும் சூழ்­நி­லை­யையும் வழங்­கப்­படும் சேவை­க­ளையும் அறி­யச்­செய்­யுங்கள்.

வங்கிப் பரி­வர்த்­தனை

அடுத்­த­தாக வங்­கிகள் பற்­றிய உங்கள் குழந்­தையின் அனு­ப­வத்தை மேலும் வளர்க்க அவர்­க­ளுக்கு, உங்­க­ளு­டைய பணத்தை எடுக்­கவோ அல்­லது செலுத்­தவோ வேண்­டிய சிறு சிறு வங்கிப் பரி­வர்த்­த­னை­களை கொடுத்துச் செய்­யச்­சொல்­லுங்கள்.

சேமிப்பின் முக்­கி­யத்­துவம்

அவர்­க­ளுக்கு அவ்­வப்­போது சிறு பணத்­தினைக் கொடுத்து சேமிக்கச் சொல்­வதும் சேமிப்பின் பலன்­க­ளையும் முக்­கி­யத்­து­வத்­தையும் அவர்­களுள் பதிய வைக்கும். அவர்­க­ளுக்கு சிறிய சேமிப்பு உண்­டியல் பொம்­மை­க­ளையும் பணத்­தையும் கொடுத்து சேமிக்­கச்­செய்­வது அவர்­களை ஈர்ப்­ப­தாக அமையும்.

வங்கிக் சேமிப்பு கணக்கை...

ஒரு சேமிப்பு வங்கிக் கணக்கை குழந்தை பெயரில் திறந்து அதன் மூலம், என்ன பலன்­களை பெற­மு­டியும் என்­பதை நீங்கள் உணர்த்­தலாம்.

முக்­கிய நிதி ஆலோ­சனை

மேலும், குழந்­தைகள் வளர்­கையில் நீங்கள் பல்­வேறு நிதி தொடர்­பான ஆலோ­ச­னை­களில் அவர்­களை ஈடு­ப­டச்­செய்­யலாம். இது அவர்­களை பல்­வேறு முடி­வு­களை தேர்வு செய்­வதில் கூர்­மை­ய­டையச் செய்து நாளடைவில் அவர்களுக்கு பண மற்றும் நிதி விவகாரங்களில் ஆர்வம் கொள்ளச்செய்யும்.

எனவே பண விஷயங்களில் உங்கள் குழந்தையிடம் நீங்கள் பகிர்ந்துகொள்ளும் உங்களுடைய அனைத்து அனுபவங்களும் திறமைகளும் அவர்களிடையே ஒரு நீடித்த நிதி மேலாண்மை திறமைகளை கட்டமைக்க உதவும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல