அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வெள்ளி, 12 செப்டம்பர், 2014

வாயை தைத்து கைகளை சிலுவையில் அறைந்து விநோத உண்ணாவிரத போராட்டம்

பரா­கு­வேயை சேர்ந்த 3 பஸ் சார­திகள் தாம் நீதி­யற்ற முறையில் தமது வேலை­யி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­ட­மைக்கு எதிர்ப்புத் தெரி­வித்து தமது வாயை தைத்தும் தமது கைகளை சிலு­வையில் ஆணி­களால் அறைந்தும் விநோத உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ளனர்.



அஸன்­சியன் நகரின் புற­ந­கரப் பகு­தி­யான சான் லொரென்­ஸோவைச் சேர்ந்த எல்­வியோ கிறிஸ்­டல்டோ (39 வயது), எலி­ஜியோ மார்­ரினெஸ், கிளென்­மென்ட் ­லொ­வெரா ஆகி­யோரே குறைந்த மணித்­தி­யால நேரத்­துக்கு பணி­யாற்ற மறுத்­த­மைக்­காக தாம் பணி­நீக்கம் செய்­யப்­பட்­ட­மைக்கு எதிர்ப்புத் தெரி­வித்து இவ்­வாறு போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ளனர்.

எல்­வி­யோவும் எலி­ஜி­யோவும் தமது கைகளை சிலு­வை­களில் அறைந்த அதே­ச­மயம் கிளென்மென்ட் தனது வாயை தைத்­துக்­கொண்­டுள்ளார்.

அவர்­க­ளுக்கு வலியை உணராமல் இருக்க வலிநீக்கி மருந்துகள் வழங்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக