அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வெள்ளி, 26 டிசம்பர், 2014

வீடுகளை விட்டு வெளியேறாவிட்டால் எயிட்ஸ் நோயை பரப்புவோம் சீன சொத்து அபிவிருத்தி நிறுவனம் அச்சுறுத்தல்

வீடு­களை விட்டு வெளி­யே­றா­விட்டால் எயிட்ஸ் வைரஸை ஊசி மூலம் ஏற்­றப்­போ­வ­தாக வீட்டு உரி­மை­யா­ளர்­களை அச்­சு­றுத்­தி­ய­தாக கூறப்­படும் சீன சொத்து அபி­வி­ருத்தி நிறு­வ­ன­மொன்று தொடர்பில் அந்­நாட்டு அதி­கா­ரிகள் விசா­ர­ணையை முன்­னெ­டுத்­துள்­ளனர்.



ஹெனான் மாகா­ணத்­தி­லுள்ள நன்யாங் நக­ரி­லுள்ள அதி­கா­ரி­களே மேற்­படி விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர்.

குறிப்­பிட்ட நிறு­வனம் தன்­னிடம் எயிட்ஸ் நோய் தொற்­றுக்­குள்­ளான 6 பேரைக் உள்ளடக்கிய குழுவைக் கொண்­டுள்­ள­தா­கவும் அவர்­க­ளி­ட­மி­ருந்து பெறப்­பட்ட எயிட்ஸ் கிரு­மி­க­ளையே வீட்டு உரி­மை­யா­ளர்­க­ளுக்கு ஊசி மூலம் ஏற்­று­வ­தாக அச்­சு­றுத்­தி­யி­ருந்­த­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது.

1990 களில் மருத்­துவ நோக்­கங்­க­ளுக்­காக ஹெனான் மாகா­ணத்­தி­லுள்ள உள்ளூர் வாசிகள் தமது குரு­தியை விற்­ற­மையால் ஹெனான் மாகாணத்திலுள்ள மக்கள் மத்தியில் எயிட்ஸ் நோய் கட்டுப்பாடின்றி பரவியிருந்தது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக