அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 15 நவம்பர், 2015

ஜோதிடம் கூறும் பரிகாரங்கள்

திருமண தோஷம் இருப்பவர்கள் என்ன பரிகாரம் செய்யலாம்?

ஜோதி­டத்தில் திரு­மண தோஷத்தை இரண்டு வகை­யாகப் பார்க்க வேண்டும். அதா­வது ஒரு சில ஜாத­கங்­க­ளுக்கு திரு­ம­ணமே தேவை­யில்லை என்ற அமைப்பு இருக்கும். அதற்கு காரணம் சூரியன், செவ்வாய், புதன், சனி ஆகிய கிர­கங்கள், 10ஆம் வீட்டில் சேர்க்கை பெற்­றி­ருந்தால் அவர் சந்நியாசம் செல்வார் என ஜோதி­டத்தில் கூறப்­பட்­டுள்­ளது.



அது­போன்ற அமைப்பு உடை­ய­வர்கள் சிறு­வ­யது முதலே காதல், கல்­யாணம் என்ற எண்ணம் சிறிதும் இல்­லாமல் இருப்­பார்கள்.

ஆனால், ஒரு சில­ருக்கு திரு­மண தோஷம் இருந்­தாலும், மனதில் திரு­மண ஆசை இருக்கும். ஆனால் பெண் அமை­யாமல் அல்­லது கிடைக்­காமல் அவ­திப்­பட நேரிடும். திரு­மண வய­திற்குப் பின்­னரும் திரு­மணம் நடை­பெ­றாமல் இருப்­பதும் ஒரு வகையில் தோஷம்தான்.

இது­போன்ற நிலையில் இருப்­ப­வர்கள், ஏற்­க­னவே மணம் முடித்துப் பிரிந்­த­வர்கள், வித­வை­களைத் திரு­மணம் செய்து கொள்­ளலாம். அப்­படிச் செய்யும் போது தோஷம் நிவர்த்­தி­யாகி வாழ்க்­கையும் சிறப்­பா­ன­தாக அமையும் என சில ஜோதிட நூல்­களில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

ஒரு குடும்­பத்தில் மூவரும் ஒரே ராசிக்­கா­ரர்­க­ளாக இருந்தால், பிரச்­சினை ஏற்­ப­டுமா? அதனை தீர்க்க என்ன பரி­காரம்?

கண­வன்-­, ம­னைவி இரு­வரும் ஏக ராசி­யாக இருக்கக் கூடாது என்­ப­தால்தான் திரு­ம­ணத்­திற்கு முன்­னரே பொருத்தம் (ராசிப் பொருத்தம் உட்­பட) பார்த்து மண­மு­டிக்க வேண்டும் எனக் கூறு­கிறோம்.

ஆனால் பெற்றோர் கையை மீறி காதல் திரு­மணம் உள்­ளிட்ட நிகழ்­வு­களால் ஏக ராசிப் பொருத்தம் அமைந்து விடு­கி­றது. அதிலும், அந்த தம்­ப­தி­க­ளுக்கு பிறக்கும் குழந்­தையும் அதே ராசியில் பிறந்து விட்டால், ஒரே குடும்­பத்தில் 3 பேர் ஏக ராசிக்­கா­ரர்­க­ளாக அமைந்து விடு­கின்­றனர்.

இதன் கார­ண­மாக ஏழரைச் சனி, அஷ்­டமச் சனி, மோச­மான தசை நடக்கும் போது குடும்­பத்தில் உள்ள அனை­வரும் ஒரே நேரத்தில் பாதிக்­கப்­ப­டுவர். அதனால் திடீர் விபத்­துகள், இழப்­புகள் ஏற்­படும்.

ஒரே குடும்­பத்தில் 3 பேரும் ஏக­ரா­சிக்­கா­ரர்­க­ளாக அமையும் பட்­சத்தில் ஆண்­டு­தோறும் திருச்­செந்தூர் முருகன் கோயி­லுக்கு சென்று வழி­ப­டு­வதே சிறந்த பரி­கா­ர­மாகும்.

ஒரே ராசியில் ஒரு­வ­ருக்கு மேல் ஒரு குடும்­பத்தில் இருந்தால் சம்­ஹார ஸ்தலங்­க­ளுக்கு (கட­லோ­ர­மாக உள்ள) சென்று வழி­பாடு நடத்­தலாம் என பழைய நூல்­களில் கூறப்­பட்­டுள்­ளது.

ஏக ராசிக்­கா­ரர்­க­ளாக இருக்­கும் ­பட்­சத்தில் ஏழரைச் சனி, அஷ்­டமச் சனி நடந்தால் குடும்­பத்தில் இருந்து ஒருவர் தற்­கா­லி­க­மாக பிரிந்து இருப்­பது நல்­லது. மகன், மகளை உற­வி­னர்கள் வீட்டில் அல்­லது நல்ல விடு­தியில் சேர்க்­கலாம். கணவன் அல்லது மனைவி பணி­யிட மாற்றம் செய்து கொள்­ளலாம். இதனால் விவாதம் மூலம் வரும் பிரச்­சி­னை­களைத் தவிர்க்­கலாம்.

ஏழரைச் சனி, அஷ்­டமச் சனி நடக்கும் போது அனை­வரும் ஒரே வண்­டியில் பயணம் செய்­வ­தையும் தவிர்க்க வேண்டும்.

ஜாத­கத்தில் குரு மோச­மாக இருப்­ப­வர்­க­ளுக்கு என்ன பரி­காரம்?

மனி­தர்கள் அனை­வரும் 12 ராசி­களில் அடை­பட்­டாலும், அவ­ரவர் ஜனன ஜாத­கத்தில் குரு சிறப்­பாக அல்­லது மோச­மாக இருக்கும்.

இதில் சிறப்­பாக இருப்­ப­வர்கள் நல்ல பலனைப் பெறு­கின்­றனர். ஆனால், ஜாத­கத்தில் குரு மோச­மாக அமைந்­த­வர்கள் அதனால் ஏற்­படும் கெடு­தல்­களில் இருந்து தப்­பிக்க பொது­வான பரி­காரம் ஏதா­வது உள்­ளதா என பார்க்கும் போது, குரு பெயர்ச்­சியால் சில ராசிக்­கா­ரர்­க­ளுக்கு பாதிப்பு ஏற்­பட்­டாலும், அவர்கள் பிறக்கும் போது நல்ல தசை இருந்தால் குரு சாத­க­மான பலன்­க­ளையே தருவார்.

அதனால் எந்தப் பெயர்ச்­சி­யாக இருந்­தாலும், அவ­ரவர் தசா புத்­தியை முதலில் கருத்தில் கொள்ள வேண்டும். தசா புத்தி நன்­றாக இருந்தால் தற்­கால கிரக அமைப்­பு­களால் மொத்­த­மாக கெடு­ப­லன்கள் ஏற்­ப­டாது.

பொது­வாக குரு கல்­விக்கு உரிய கிர­க­மாகும். குரு­பெ­யர்ச்­சியால் பாதிக்­கப்­படும் நபர்கள் அல்­லது ராசிக்­கா­ரர்கள் பழைய பள்­ளி­களை புதுப்­பிக்க உத­வலாம். ஏழை மாண­வர்­களின் கல்விச் செலவை ஏற்­கலாம். அப்­படி முடி­யாமல் போனால், பணம் வாங்­காமல் டியூஷன் எடுக்­கலாம். எழுதப், படிக்க சொல்லித் தந்த ஆசி­ரி­யர்­களைச் சந்­தித்து நலம் விசா­ரிக்­கலாம். அவர்­க­ளுக்குத் தேவை­யான அத்­தி­யா­வ­சிய உத­வி­களைச் செய்­யலாம்.

எழுதப் படிக்கத் தெரி­யா­த­வர்­க­ளுக்கு விண்­ணப்பம் பூர்த்தி செய்து கொடுப்­பது, போன்ற உத­வி­களும் குருவால் ஏற்­படும் பாதிப்பில் இருந்து மீள உதவும். ஒருவர் கல்வி பெறு­வ­தற்கு ஏதா­வது ஒரு வகையில் உத­வினால் அது குருவை மகிழ்ச்­சி­ய­டையச் செய்யும்.

அக­தி­க­ளுக்கு உத­வலாம். வேதங்கள், உப­நி­ட­தங்­களைப் படிப்­பது மட்­டு­மின்றி, அந்த நூல்­களைப் புதுப்­பிக்­கவும், மத­நல்­லி­ணக்கம் தொடர்­பான நூல்கள் வெளி­வர உத­வு­வதும் நல்ல பரி­கா­ர­மாகும்.

மேற்­கூ­றி­ய­வற்றை மன­நி­றை­வுடன், உண்­மை­யாகச் செய்யும் போது குரு பெயர்ச்­சியால் பாதிக்­கப்­படும் நிலையில் உள்­ள­வர்கள், ஓர­ளவு பாதிப்­பின்றித் தப்­பலாம். நல்ல பலன்கள் பெறு­ப­வர்கள் கூடு­த­லாக சில சலு­கை­களை குரு­விடம் இருந்து பெறலாம்.

வாழ்க்கை முழு­வதும் கடன்­பட்ட நிலையில் இருப்­ப­வர்­க­ளுக்கு என்ன பரி­காரம்?

பொது­வாக லக்­னத்­தையும், லக்­னா­தி­ப­தி­யையும் பாவ கிர­கங்கள் சூழ்ந்தால் அந்த ஜாதகர் வாழ்க்கை முழு­வதும் யாருக்­கா­வது கடன்­பட்­டி­ருப்பார். உதா­ர­ண­மாக மகர லக்­னத்தில் பிறந்த ஒரு­வ­ருக்கு 12ஆம் வீட்டில் சனியும், 2ஆவது வீட்டில் செவ்­வாயும் இருப்பின் அவர் வாழ்க்கை முழு­வதும் கடன்­பட்­ட­வ­ரா­கவே இருப்பர்.

இவ்­வி­ட­யத்தில் லக்­னத்தை மட்­டு­மல்­லாது லக்­னா­தி­பதி, 6ஆம் அதி­பதி ஆகி­யோரின் நிலை­யையும் கருத்தில் கொள்ள வேண்டும். உதா­ர­ண­மாக மீன லக்­னத்­திற்கு அதி­பதி குரு; 6ஆம் அதி­பதி சூரியன். இதில் குரு நீச்­ச­மாகி, 6ஆம் அதி­பதி சூரியன் ஆட்சி உச்சம் பெற்­றி­ருந்தால் அந்த ஜாதகர் தன் வாழ்வின் இறு­திநாள் வரை கடன்­கா­ர­ராக இருப்பர்.

எனவே, லக்­னா­தி­பதி பல­வீ­ன­மாக இருப்­ப­வர்கள், சம்­பந்­தப்­பட்ட லக்­னா­தி­ப­திக்கு உரிய கோயில்கள், பரி­கா­ரங்­களை மேற்­கொள்­ளலாம். நிதி நிலைக்கு சிக்கல் வராத வகையில் எளிய வகை­யி­லான தானங்களையும் மேற்கொள்ளலாம்.

இதேபோல் பொருளாதாரத்தில் பின்தங் கிய நிலையில் உள்ள மாணவர் களுக்கு, மொழிப் பாடங்களை பயிற்றுவிப்பதும் பலனளிக்கும். குறிப்பாக தமிழ் சொல்லித் தருவதன் மூலம் சில தோஷங்கள் கழியும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. ஏனென்றால், தமிழுக்கு உரிய கிரகம் சந்திரன். உடல் மனதிற்கு உரியவரும் அவரே.

தமிழ் பயிற்றுவிக்கும் போது உடலும், மனதும் பலம் பெறுகிறது. இவை இரண்டும் பலமாக இருந்தால் எவ்வளவு கடனையும் அடைத்துவிட முடியும் என்ற தன்னம்பிக்கை பிறக்கும்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக