திருமண தோஷம் இருப்பவர்கள் என்ன பரிகாரம் செய்யலாம்?
ஜோதிடத்தில் திருமண தோஷத்தை இரண்டு வகையாகப் பார்க்க வேண்டும். அதாவது ஒரு சில ஜாதகங்களுக்கு திருமணமே தேவையில்லை என்ற அமைப்பு இருக்கும். அதற்கு காரணம் சூரியன், செவ்வாய், புதன், சனி ஆகிய கிரகங்கள், 10ஆம் வீட்டில் சேர்க்கை பெற்றிருந்தால் அவர் சந்நியாசம் செல்வார் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.
அதுபோன்ற அமைப்பு உடையவர்கள் சிறுவயது முதலே காதல், கல்யாணம் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் இருப்பார்கள்.
ஆனால், ஒரு சிலருக்கு திருமண தோஷம் இருந்தாலும், மனதில் திருமண ஆசை இருக்கும். ஆனால் பெண் அமையாமல் அல்லது கிடைக்காமல் அவதிப்பட நேரிடும். திருமண வயதிற்குப் பின்னரும் திருமணம் நடைபெறாமல் இருப்பதும் ஒரு வகையில் தோஷம்தான்.
இதுபோன்ற நிலையில் இருப்பவர்கள், ஏற்கனவே மணம் முடித்துப் பிரிந்தவர்கள், விதவைகளைத் திருமணம் செய்து கொள்ளலாம். அப்படிச் செய்யும் போது தோஷம் நிவர்த்தியாகி வாழ்க்கையும் சிறப்பானதாக அமையும் என சில ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு குடும்பத்தில் மூவரும் ஒரே ராசிக்காரர்களாக இருந்தால், பிரச்சினை ஏற்படுமா? அதனை தீர்க்க என்ன பரிகாரம்?
கணவன்-, மனைவி இருவரும் ஏக ராசியாக இருக்கக் கூடாது என்பதால்தான் திருமணத்திற்கு முன்னரே பொருத்தம் (ராசிப் பொருத்தம் உட்பட) பார்த்து மணமுடிக்க வேண்டும் எனக் கூறுகிறோம்.
ஆனால் பெற்றோர் கையை மீறி காதல் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளால் ஏக ராசிப் பொருத்தம் அமைந்து விடுகிறது. அதிலும், அந்த தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தையும் அதே ராசியில் பிறந்து விட்டால், ஒரே குடும்பத்தில் 3 பேர் ஏக ராசிக்காரர்களாக அமைந்து விடுகின்றனர்.
இதன் காரணமாக ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, மோசமான தசை நடக்கும் போது குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே நேரத்தில் பாதிக்கப்படுவர். அதனால் திடீர் விபத்துகள், இழப்புகள் ஏற்படும்.
ஒரே குடும்பத்தில் 3 பேரும் ஏகராசிக்காரர்களாக அமையும் பட்சத்தில் ஆண்டுதோறும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று வழிபடுவதே சிறந்த பரிகாரமாகும்.
ஒரே ராசியில் ஒருவருக்கு மேல் ஒரு குடும்பத்தில் இருந்தால் சம்ஹார ஸ்தலங்களுக்கு (கடலோரமாக உள்ள) சென்று வழிபாடு நடத்தலாம் என பழைய நூல்களில் கூறப்பட்டுள்ளது.
ஏக ராசிக்காரர்களாக இருக்கும் பட்சத்தில் ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடந்தால் குடும்பத்தில் இருந்து ஒருவர் தற்காலிகமாக பிரிந்து இருப்பது நல்லது. மகன், மகளை உறவினர்கள் வீட்டில் அல்லது நல்ல விடுதியில் சேர்க்கலாம். கணவன் அல்லது மனைவி பணியிட மாற்றம் செய்து கொள்ளலாம். இதனால் விவாதம் மூலம் வரும் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.
ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடக்கும் போது அனைவரும் ஒரே வண்டியில் பயணம் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.
ஜாதகத்தில் குரு மோசமாக இருப்பவர்களுக்கு என்ன பரிகாரம்?
மனிதர்கள் அனைவரும் 12 ராசிகளில் அடைபட்டாலும், அவரவர் ஜனன ஜாதகத்தில் குரு சிறப்பாக அல்லது மோசமாக இருக்கும்.
இதில் சிறப்பாக இருப்பவர்கள் நல்ல பலனைப் பெறுகின்றனர். ஆனால், ஜாதகத்தில் குரு மோசமாக அமைந்தவர்கள் அதனால் ஏற்படும் கெடுதல்களில் இருந்து தப்பிக்க பொதுவான பரிகாரம் ஏதாவது உள்ளதா என பார்க்கும் போது, குரு பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், அவர்கள் பிறக்கும் போது நல்ல தசை இருந்தால் குரு சாதகமான பலன்களையே தருவார்.
அதனால் எந்தப் பெயர்ச்சியாக இருந்தாலும், அவரவர் தசா புத்தியை முதலில் கருத்தில் கொள்ள வேண்டும். தசா புத்தி நன்றாக இருந்தால் தற்கால கிரக அமைப்புகளால் மொத்தமாக கெடுபலன்கள் ஏற்படாது.
பொதுவாக குரு கல்விக்கு உரிய கிரகமாகும். குருபெயர்ச்சியால் பாதிக்கப்படும் நபர்கள் அல்லது ராசிக்காரர்கள் பழைய பள்ளிகளை புதுப்பிக்க உதவலாம். ஏழை மாணவர்களின் கல்விச் செலவை ஏற்கலாம். அப்படி முடியாமல் போனால், பணம் வாங்காமல் டியூஷன் எடுக்கலாம். எழுதப், படிக்க சொல்லித் தந்த ஆசிரியர்களைச் சந்தித்து நலம் விசாரிக்கலாம். அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளைச் செய்யலாம்.
எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுப்பது, போன்ற உதவிகளும் குருவால் ஏற்படும் பாதிப்பில் இருந்து மீள உதவும். ஒருவர் கல்வி பெறுவதற்கு ஏதாவது ஒரு வகையில் உதவினால் அது குருவை மகிழ்ச்சியடையச் செய்யும்.
அகதிகளுக்கு உதவலாம். வேதங்கள், உபநிடதங்களைப் படிப்பது மட்டுமின்றி, அந்த நூல்களைப் புதுப்பிக்கவும், மதநல்லிணக்கம் தொடர்பான நூல்கள் வெளிவர உதவுவதும் நல்ல பரிகாரமாகும்.
மேற்கூறியவற்றை மனநிறைவுடன், உண்மையாகச் செய்யும் போது குரு பெயர்ச்சியால் பாதிக்கப்படும் நிலையில் உள்ளவர்கள், ஓரளவு பாதிப்பின்றித் தப்பலாம். நல்ல பலன்கள் பெறுபவர்கள் கூடுதலாக சில சலுகைகளை குருவிடம் இருந்து பெறலாம்.
வாழ்க்கை முழுவதும் கடன்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு என்ன பரிகாரம்?
பொதுவாக லக்னத்தையும், லக்னாதிபதியையும் பாவ கிரகங்கள் சூழ்ந்தால் அந்த ஜாதகர் வாழ்க்கை முழுவதும் யாருக்காவது கடன்பட்டிருப்பார். உதாரணமாக மகர லக்னத்தில் பிறந்த ஒருவருக்கு 12ஆம் வீட்டில் சனியும், 2ஆவது வீட்டில் செவ்வாயும் இருப்பின் அவர் வாழ்க்கை முழுவதும் கடன்பட்டவராகவே இருப்பர்.
இவ்விடயத்தில் லக்னத்தை மட்டுமல்லாது லக்னாதிபதி, 6ஆம் அதிபதி ஆகியோரின் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக மீன லக்னத்திற்கு அதிபதி குரு; 6ஆம் அதிபதி சூரியன். இதில் குரு நீச்சமாகி, 6ஆம் அதிபதி சூரியன் ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் அந்த ஜாதகர் தன் வாழ்வின் இறுதிநாள் வரை கடன்காரராக இருப்பர்.
எனவே, லக்னாதிபதி பலவீனமாக இருப்பவர்கள், சம்பந்தப்பட்ட லக்னாதிபதிக்கு உரிய கோயில்கள், பரிகாரங்களை மேற்கொள்ளலாம். நிதி நிலைக்கு சிக்கல் வராத வகையில் எளிய வகையிலான தானங்களையும் மேற்கொள்ளலாம்.
இதேபோல் பொருளாதாரத்தில் பின்தங் கிய நிலையில் உள்ள மாணவர் களுக்கு, மொழிப் பாடங்களை பயிற்றுவிப்பதும் பலனளிக்கும். குறிப்பாக தமிழ் சொல்லித் தருவதன் மூலம் சில தோஷங்கள் கழியும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. ஏனென்றால், தமிழுக்கு உரிய கிரகம் சந்திரன். உடல் மனதிற்கு உரியவரும் அவரே.
தமிழ் பயிற்றுவிக்கும் போது உடலும், மனதும் பலம் பெறுகிறது. இவை இரண்டும் பலமாக இருந்தால் எவ்வளவு கடனையும் அடைத்துவிட முடியும் என்ற தன்னம்பிக்கை பிறக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக