Great catch ... The fish that reportedly fell from the sky at Lajamanu in the Northern Territory. Picture: Christine Balmer
ஆஸ்திரேலியாவில் கடந்த இரு நாட்களாகப் பெய்த மழைநீருடன் ஏராளமான மீன்களும் வானத்திலிருந்து விழுந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் லஜாமானு (Lajamanu) நகரம் உள்ளது. இது அங்குள்ள ஆற்றில் இருந்து 326 மைல் தொலைவில் உள்ளது. இங்கு 2 நாட்களாகக் கடுமையான மழை பெய்தது. அப்போது வானத்தில் இருந்து மழைநீருடன் சேர்ந்து நூற்றுக்கணக்கான மீன்களும் விழுந்துள்ளன.
அந்த மீன்கள் வெள்ளை நிறத்தில் இருந்தன. அவை இன்னும் உயிருடன் இருக்கின்றன. மீன்மழை பெய்ததை பார்த்த மக்கள் மிகவும் ஆச்சரியமடைந்தனர்.
கடந்த 30 ஆண்டுகளில் இங்கு இதுவரை 3 தடவை மீன்மழை பெய்துள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 1974 மற்றும் 2004ஆம் ஆண்டுகளில் இதுபோன்று மழை பெய்ததாகக் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக