புதன், 3 மார்ச், 2010

பயர்பாக்ஸ் - சில ஆட் ஆன் தொகுப்புகள்

பயர்பாக்ஸ் பிரவுசர் வடிவமைக்கப்பட்டதற்கான புரோகிராம் குறியீடுகளை யாரும் பெற்றுப் பயன்படுத்தலாம் என்பதே அதன் முக்கிய சிறப்புக்குக் காரணம். இதனையே ஓப்பன் சோர்ஸ் என்று அழைக்கிறோம். இதனால் தான் பல இணைய ஆர்வலர்களாக உள்ள புரோகிராமர்கள் பல ஆட் ஆன் தொகுப்புகளை இந்த பிரவுசரில் இயக்குவதற்கென எழுதி, வடிவமைத்து வழங்கி வருகின்றனர். அண்மையில் பார்த்து, பயன்படுத்திய சில ஆட்–ஆன் புரோகிராம்களை இங்கு தரப்படுகிறது.

1. Foxy Tunes: உங்களுடைய பிரவுசர் விண்டோவிலேயே ஒரு மீடியா பிளேயர் வேண்டுமானால், இந்த ஆட் ஆன் தொகுப்பினைப் பதிந்து கொள்ளவும். அதாவது இணைய தளம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கையில், ஒரு பாடலுக்கான லிங்க் தரப்படுகிறது. அல்லது பாடல் அதிலேயே கிடைக்கிறது. இதற்கென இன்னொரு விண்டோவில் ஆடியோ பிளேயரை இயக்கிப் பார்க்க வேண்டியதில்லை. பிரவுசரிலேயே மீடியா பிளேயரை இந்த ஆட் ஆன் தொகுப்பு தருகிறது.இந்த புரோகிராம் அவ்வப்போது அப்டேட் செய்யவும் படுகிறது. இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: https://addons.mozilla.org/enUS/firefox/addon/219


2. Image Zoom: இணைய தளத்தில் உள்ள இமேஜ்களை நீங்கள் அடிக்கடி பயன்படுத்துவதாக இருந்தால், இந்த புரோகிராம் உங்களுக்கு மிக முக்கியம். படங்களைப் பெரிதுபடுத்திப் பார்க்கவும், பின் வழக்கமான நிலைக்குக் கொண்டு வந்து சிறியதாக்கிப் பார்க்கவும் உதவுகிறது. இந்த ஆட் ஆன் தொகுப்பு புரோகிராம் கிடைக்கும் இணைய தள முகவரி: https://addons.mozilla.org/enUS/firefox/%20addon/139 


3.Visual Bookmarks: நீங்கள் அமைத்திட்ட புக்மார்க்குகள், அளித்த பெயருடன் உங்களுக்குப் பட்டியல் இடப்படுகிறது. புக்மார்க்குகள் அதிகமாக, அதிகமாக இவை எதனைக் குறிக்கின்றன என்பதே மறந்து போகும். இதற்கு ஓரளவிற்கு உதவும் வகையில் இந்த ஆட் ஆன் செயல்படுகிறது. ஓரளவிற்கு என்ன, முழுமையான உதவியை அளிக்கிறது. வெப்சைட்டுகளில் நீங்கள் அடையாளம் கொள்ளக்கூடிய ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்தால், அந்த பகுதி புக் மார்க் பட்டியலாகக் காட்டப்படும். இந்தப் பட்டியல் தனியே இருக்கும். இதனைப் பெற நீங்கள் அணுக வேண்டிய முகவரி: https://addons.mozilla.org/enUS/firefox/addon/5396

4. FoxSaver: உங்களுடைய பயர்பாக்ஸ் பிரவுசரின் தோற்றம் உங்களுக்கு மிகவும் பிடித்துவிட்டதா? அல்லது அதில் கிடைக்கும் சில இணைய தளங்களின் தோற்றம் உங்களின் விருப்பமாக உள்ளதா? அதனை உங்கள் கம்ப்யூட்டரின் ஸ்கிரீன் சேவராக வைத்துக் கொள்ள ஆசையா? கவலையே பட வேண்டாம். உங்கள் விருப்பத்தை இந்த பாக்ஸ் சேவர் ஆட் ஆன் புரோகிராம் நிறைவேற்றி வைக்கிறது. https://addons.mozilla.org/enUS/firefox/addon/5276 என்ற முகவரியில் உள்ள இதனை இன்ஸ்டால் செய்துவிட்டால், பிரவுசரின் தோற்றம் மட்டுமல்ல, இணையத்தில் உங்களுக்கு விருப்பமான இமேஜஸ், ஆர்.எஸ்.எஸ். பீட்ஸ், ஏன் உங்களுடைய போட்டோ ஆகியவற்றை ஸ்கிரீன் சேவராக வைத்துக் கொள்ள இந்த தொகுப்பு உதவுகிறது.

5. Clipmarks: கிளிப் மார்க்ஸ் ஏறத்தாழ காப்பி செய்திடும் வேலையை மேற்கொள்கிறது. ஆனால் ஒரு கத்தரிக்கோல் கொண்டு இந்த வேலையைச் செய்கிறது. இதன் மூலம் ஓர் இணைய தளத்தில் நீங்கள் தனித்துப் பார்க்க விரும்பும் பகுதியை மட்டும் தேர்ந்தெடுக்கலாம். பின் அதனை வேறு ஒரு இடத்தில் காப்பி செய்திடலாம். சேவ் செய்து வைக்கலாம். நண்பர்களுக்கு அனுப்பலாம். உங்கள் பிளாக்குகளில் பதியலாம். இதனை https://addons.mozilla.org/enUS/firefox/addon/1407 என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெற்றுக் கொள்ளுங்கள்.

6.Videodownloader: இந்த பெயர் என்ன கூறுகிறதோ அதையே சிறப்பாக மேற்கொள்கிறது இதில் உள்ள ஆட் ஆன் தொகுப்பு. ஆம், நீங்கள் வீடியோ கிளிப்கள் உள்ள தளங்களுக்குச் செல்கையில் உங்களுக்கு ஒரு செய்தி கொடுக்கிறது. இங்கிருந்து நீங்கள் வீடியோ கிளிப்களை டவுண்லோட் செய்திடலாம் என்ற செய்தியே அது. யு–ட்யூப், கூகுள் வீடியோஸ், மெட்கேப் போன்ற தளங்களுக்குச் செல்கையில் இதில் இருந்தெல்லாம் வீடியோ டவுண்லோட் செய்திடலாம் என்ற செய்தி கிடைக்கும். அதற்கான மெனுவினைக் கிளிக் செய்து வீடியோவினை டவுண்லோட் செய்து வைத்துக் கொள்ளலாம். பின் இன்டர்நெட் இணைப்பு இல்லாதபோதும் பார்க்கலாம் இதனை http://www.download.com/ என்ற முகவரியிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

7. Gspace: இணைய வெளியில் உங்களுக்கென்று ஓர் இடத்தை இந்த ஆட் ஆன் தொகுப்பு தருகிறது. கூகுள் மெயில் அக்கவுண்ட் வைத்துள்ளவர்கள் தங்களுடைய பேஜ் பார்க்கையில் கீழாக இவ்வளவு இடம் உங்களுக்கு உள்ளது; அதில் இவ்வளவுதான் பயன்படுத்தி வருகிறீர்கள் என்ற செய்தி கிடைக்கும். இந்த இடமானது நீங்கள் கூகுள் அக்கவுண்ட் தளத்தைப் பயன்படுத்துகையில் உயர்ந்து கொண்டே போகும். அப்படியானால் கூகுள் உங்களுக்குக் கூடுதலான இடத்தையே கொடுக்கிறது. அந்த கூடுதல் இடத்தை என்ன செய்யலாம்? என்ற கேள்வி எழுகிறது அல்லவா! அதற்கான பயன்பாட்டினை இந்த ஆட் ஆன் தொகுப்பு தருகிறது. இந்த ஜிஸ்பேஸில், இடத்தில், நீங்கள் உங்கள் பைல்களைச் சேவ் செய்து வைக்கலாம். அவ்வாறு சேவ் செய்து வைத்த இடத்தில் உள்ள பைல்களை இன்டர்நெட் இணைப்பு உள்ள எந்த இடத்தில் இருந்தும் பெற்று பயன்படுத்தலாம். நீங்கள் மட்டுமின்றி நீங்கள் அனுமதி கொடுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் பயன்படுத்தலாம். இதனை https://addons/.%20mozilla.org/enUS/firefox/addon/1593 என்ற முகவரியிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

8. Downthemall: ஏற்கனவே இந்த ஆட் ஆன் தொகுப்பு பற்றி இந்த மலரில் தகவல்கள் தரப்பட்டன. இந்த வேளையில் இதனை மீண்டும் நினைவு படுத்தலாம் என்று நினைக்கிறேன். இதன் மூலம் ஓர் இணைய தளத்தில் உள்ள படம், வீடியோ மட்டுமின்றி அனைத்தையும், டெக்ஸ்ட் மற்றும் லிங்க் உட்பட அனைத்தையும், மொத்தமாக டவுண்லோட் செய்திட இந்த ஆட் ஆன் தொகுப்பு உதவுகிறது. இதனை https://addons.mozilla/.%20org/enUS/firefox/addon/201 என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல