ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

இழந்த கட்­பு­லனை மீள நிலை­நி­றுத்தும் முயற்­சியில் அறி­வியல்

அழ­கிய கண்­க­ளுக்கு மயங்­கா தோர் எவ­ரு­மிலர். ஐம்­பொ­றி­க ளில் ஒன்­றான இக்­கண்கள் வாயி­லாக, அவ­னியின் மேற்­ப­ரப்பில் உள்ள இயற்கைக் காட்­சி­க­ளையும் மனிதர் உரு­வாக்­கிய செயற்கைக் காட்­சி­க­ளையும் பார்த்து அநு­ப­விக்க முடி­கி­றது. எனினும் வயது அதி­க­ரிக்­கையில் பார்­வைத்­திறன் குறை­வ­டைந்து ஏனை­யோரில் தங்­கி­யி­ருக் கும் நிலை முதி­யோ­ருக்கு ஏற்­ப­டு­கி­றது. இக்­கா­ர­ணத்தால் முதுமைப் பரு­வத்­தினர் ஏனை­யோரின் வச­வு­க­ளையும் ஏள­னங்­க­ ளையும் எதிர்­கொள்ள நேரி­டு­கி­றது. முது­மை­ய­டைதல் மட்­டு­மன்றி நீரி­ழிவு கார­ண­மா­கவும் retinitis pigmentosa என்ற நோய் கார­ண­மா­கவும் பார்க்கும் திறன் இழக்­கப்­ப டும் சந்­தர்ப்­பங்கள் காணப்­ப­டு­கி­ன்றன. இவ்­வா­றாக பார்­வைத்­திறன் இழக்­கப்­பட் டால், அந்­நி­லைமை நிரந்­த­ர­மா­னது என்ற கருத்து, அறி­வியல் ஆய்­வொன்றின் மூலம் முறி­ய­டிக்­கப்­பட்­டுள்­ளது. மனித தண்டுக் கலத்தின் (Stem cell) உத­வி­யுடன் இழக்­கப்­பட்ட பார்­வைத்­திறன் மீளவும் நிலை­நாட்­டப்­பட முடியும் என பிரித்­தா­னியா நாட்­ டினைச் சேர்ந்த அறி­வி­ய­லா­ளர்கள் நிரூ­பித்­துள்­ளனர். இந்த ஆய்வு எலி­களில் பரி­சோ­திக்­கப்­பட்டு வெற்­றி­க­ர­மாக உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

எமக்கு முன்னே காணப்­படும் பொரு­ளொன்றில் இருந்து வரும் ஒளி கண்­களை அடைந்து, கண்­வில்­லையின் ஒளி­யியல் பண்பு கார­ண­மாக, அது விழித்­தி­ரையில் தலை­கீ­ழான மெய்­விம்­பத்­தினைத் தோற்­று­விக்­கி­றது. அந்த மெய்­விம்­பத்­தினை உண ரும் பார்­வைப்­புலன்; உணர்வு மேலணி, பெறப்­படும் ஒளியின் தன்­மைக்குத் தக்­க­வாறு நரம்புக் கணத்­தாக்­கு­களை தக­வல்­க­ளாகப் பிறப்­பிக்­கி­றது. அக்­க­ணத்­தாக்­குகள் நரம்­புகள் வழியே பய­ணித்து, மூளை­யினை அடை­கையில், அக்­கு­றிப்­பிட்ட பொருள் எமக்குத் தெரி­கி­றது. பார்­வைப்­புலன் உணர்வு மேல­ணியில் இரு­வ­கை­யான, ஒளிக்கு நரம்புக் கணத்­தாக்­கு­களைக் பிறப்­பிக்கக் கூடிய கலங்கள் காணப்­ப­டு­கின்­றன. அக்­க­லங்­களில் கூம்பு வடி­வி­லான கலங்கள் நிறத்­திற்கு உணர்ச்சி மிக்­கவை. ஆனால் உருளை வடிவக் கலங்கள் நிறத்­திற்கு அதிக உணர்ச்சி கொண்­ட­வை­யல்ல, எனினும் அவை குறைந்த ஒளி­யி லும் பார்ப்­ப­தற்கு வழி­வ­குக்கும் வகை யில் அதிக உணர்வு கொண்­டவை. இக்­க­லங்கள், மனிதன் முதுமை அடை­கையில், அல்­லா­விடின் நோய் கார­ண­மாக அழி­வ­டை­கையில் பார்­வைத்­திறன் குறை­வ­டைய ஆரம்­பிக்­கி­றது.

ஐக்­கிய இராச்­சிய மருத்­துவ ஆய்வுக் கழ­கத்தின் நிதி­யு­த­வியின் கீழ் இழக்­கப்­பட்ட பார்­வைத்­தி­றனை மீள வரு­விக்கும் ஆய்­வுகளை University College London's Institute of Ophthalmology மற்றும்; Moorfields கண் வைத்­தி­ய­சாலை ஆகிய நிறு­வ­னங்­களைச் சேர்ந்த ஆய்­வா­ளர்கள் மேற்­கொண்டு வந்­தனர். பேரா­சி­ரியர் Robin Ali தலை­மையில் மேற்­கொள்­ளப்­பட்ட இந்த ஆய்வின் விப­ரங்கள் அண்­மையில் பிர­சு­ர­மான அறி­வியற் சஞ்­சிகை Nature Biotechnology இல் வெளி­யா­கி­யுள்­ளன.

சமீ­பத்தில் ஜப்­பா­னிய அறி­வி­ய­லா­ளர்­க ளால் வடி­வ­மைக்­கப்­பட்ட முப்­ப­ரி­மாண கல­வ­ளர்ப்பு முறை­மை­யினை பிரித்­தா­னிய ஆய்­வா­ளர்கள் தமது ஆய்­விற்கு உப­யோ ­கித்­துள்­ளனர். இப்­பு­திய முறை­யினால் வளர்த்­தெ­டுக்­கப்­படும் கலங்கள், சுய­மாக வளரும் கலங்­க­ளுக்கு உயி­ரியல் ரீதியில் சம­னா­னவை. இவ்­வாறு வளர்த்­தெ­டுக்­கப்­பட்ட தண்­டுக்­க­லங்­களில் 200 000 எண்­ணிக்­கை­யான கலங்­களை, இரவில் பார்க்கும் திறனை இழந்த எலி­களின் விழித்­தி­ரைக்கு ஆய்­வா­ளர்கள் செலுத்­தினர்.

இந்தச் செயல்­மு­றையை நடை­மு­றைப்­ப­டுத்தி 3 வாரங்­களின் பின்னர் அவ­தா­னிக்­கையில், செலுத்­தப்­பட்ட கலங்கள் சாதா­ரண கலங்கள் போல தோற்­ற­ம­ளித்­த­துடன் ஒளிக்கு நரம்புக் கணத்­தாக்­கு­களைப் பிறப்­பிக்கும் கலங்­க­ளாக உரு­மாறி வளர்ச்சி பெற்­றன. ஆறு வாரங்­களின் பின்னர் நடை­பெற்ற மாற்­றங்­களை நோக்­கு­கையில், புதி­தாக உரு­வா­கிய ஒளிக்கு துலங்கல் தரும் அக்­க­லங்கள் ஏலவே இருந்த பார்வை நரம்­பு­க­ளுடன் இணைப்­புக்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தமை அவ­தா­னிக்­கப்­பட்­டது. இவ்­வா­றாக புதிய பார்­வை­யினைத் தரும் கலங்­களை உரு­வாக்கி, அவற்­றி­னூ­டாக பார்­வை­த்திறன் குன்­றி­யோ­ருக்கு பார்வை அளிக்கும் புதி­யதோர் பாதை அறி­வி­யலால் திறக்­கப்­பட்­டுள்­ளது என ஆய்­வா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.

மேற்­கு­றிப்­பிட்ட அணு­கு­மு­றையில் 200 000 எண்­ணிக்­கை­யி­லான கலங்கள் செலுத்­தப்­பட்­ட­போ­திலும் சுமார் 1000 வரை­யி­லான கலங்­களே எதிர்­பார்த்­த­வாறு இயை­ப­டைந்து நரம்புக் கலத்­துடன் தொடர்­பு­களை ஏற்­ப­டுத்­தி­யமை அவ­தா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த வினைத்­திறன் குறித்து அறி­வி­ய­லா­ளர்கள் திருப்தி அடை­யா­வி­டினும் தொடர்ந்து முயற்­சிக்க அவர்கள் உறுதி பூண்டுள்­ளனர்.

விலங்­கு­களில் மேற்­கு­றிப்­பிட்ட ஆய்­வினை துல்­லி­ய­மாக நிகழ்த்தி வினைத்­தி­ற­னையும் வெற்­றி­க­ர­மான முடி­வு­க­ளையும் உறு­தி­செய்த பின்னர், மனி­தரில் இந்த பார்­வைப்­பு­லனை மீள வரு­விக்கும் முயற்­சி­யினை மேற்­கொள்ள ஆய்­வா­ளர்கள் திட்­ட­மிட்­டுள்­ளனர். இந்தத் திட்­ட­மி­டல்கள் வெற்­றி­ய­ளிக்கும் பட்­சத்தில், முது­மை­யாலோ அல்­லா­விடின் ஏனைய நோய்­க­ளாலோ பார்வை இழந்­த­வர்கள் மீண்டும் அதனைப் பெற்­றுக்­கொள்ள வழி­பி­றக்கும் என நம்­பலாம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல