உலகம் அழிவடைவது தொடர்பில் சாத்தானை திருப்திபடுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட மதச்சடங்கொன்றின் போது, தனது 5 வயது மகனின் கண்களை கரண்டியொன்றால் தோண்டியெடுத்த தாயொருவருக்கும் அவரது 5 உறவினர்களுக்கும் மெக்ஸிக்கோ நீதிமன்றமொன்று தலா 30 வருட சிறைத்தண்டை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
நெஸஹுவல்கொயொடல் நகரைச் சேர்ந்த பெர்னாண்டோ கலெப் அல்வரடோ றியொஸ் என்ற சிறுவனே தனது சொந்த தாயாரான மரியோடல் கார்மென் கார்சியா றியொஸ்ஸால் கண்களை இழந்துள்ளான்.
சிறுவனின் கண்களை தோண்டி எடுப்பதற்கு அவனது தாய்க்கு அவனது இரு மாமன்மார், தாத்தா மற்றும் பாட்டி ஆகியோர் உதவியுள்ளனர்.
இச்சடங்கானது சாத்தானை தமக்கு நெருக்கமாக்கி தம்மை பாரிய பூமியதிர்ச்சியொன்றிலிருந்து பாதுகாக்கும் என சிறுவனின் குடும்பத்தினர் நம்பியதாக கூறப்படுகின்றது.
சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அயலவர்கள், சிறுவனின் தாயையும் உறவினர்களையும் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக