உடல் ஆரோக்கியத்துடன் இருப்போர்கள் தமது உடல் உறுப்புகளை தானம் வழங்குவது, 2017 ஜனவரி மாதம் முதல் பிரான்ஸ் நாட்டில் கட்டாய சட்டமாக்கப்பட்டுள்ளது.
உடல் உறுப்புகள் செயலிழந்த பலர் உறுப்பு தானம் கிடைக்காததால் உயிரிழக்கின்றனர். அதை தடுக்கவே பிரான்ஸ் இந்த சட்டத்தை கொண்டு வந்து கட்டாயமாக்கியுள்ளது.
அத்தோடு பிரான்ஸில் தானம் பெறப்படும் உடல் உறுப்புகள் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் உடல் உறுப்புகள் தேவைப்படுவோருக்கும் பொருத்தப்பட உள்ளது.
பிரான்ஸ் நாட்டில் உடல் உறுப்பு தானம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒருவர் இறந்த பின்னர் உடல் நலத்துடன் கூடிய தகுதியான உடல் உறுப்புகள் அகற்றப்பட்டு தேவைப்படுவோருக்கு பொருத்தப்படும். அதற்கு தற்போதிலிருந்தே குறித்த ஆவணத்தில் கையெழுத்திட்டு உறுதிப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அதற்கான காரணத்தை அரசிற்கு விளக்க வேண்டும். எனக் கூறப்பட்டுள்ளது.
இறக்கும் தருவாயில் இருக்கும் நபரை வைத்தியர் குழு பரிசோதித்து அவரிடமிருந்து அகற்றக் கூடிய உடல் உறுப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும். அவர் இறந்தப்பிறகு உறுப்புகள் அகற்றப்படும்.
அந்நாட்டில் இதுவரை 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் உடல் உறுப்புகள் தானம் செய்யும் ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
2014-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி ஐரோப்பிய யூனியன் நாடுகளில் உடல் உறுப்பு தானத்துக்காக காத்திருப்போர் பட்டியலில் 86 ஆயிரம் பேர் இருந்தனர். மேலும் இதற்கு முன் ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரியாவில் உடல் உறுப்பு தானம் கட்டாயமாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வீரகேசரி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக