வேர்ட் டாகுமெண்ட்களைத் தமிழில் தயாரிக்கும்போது, அனைத்து வரிகளிலும், இலக்கணப் பிழைகள் இருப்பதாக வேர்ட் நெளிவான கோடுகளை இட்டுக் காட்டுகிறது. இந்த இலக்கணப் பிழை சுட்டுவதை எப்படி நிறுத்துவது? அதற்கான ஷார்ட் கட் கீ ஏதும் உண்டா?
வேர்ட் புரோகிராம், நீங்கள் தமிழில் ஆவணங்களைத் தயாரித்தாலும், அவை ஆங்கிலச் சொற்களுக்கான எழுத்துக் கோவைகளாகவே எடுத்துக் கொண்டு, நீங்கள் குறிப்பிட்டது போல, பிழைகளைச் சுட்டிக் காட்டும் கோடுகளைச் சொற்களின் அடியில் அமைக்கிறது.
இதனை நிறுத்தவும் இயக்கவும் ஷார்ட் கட் கீ இல்லை.
ஆனால், கீழே குறிப்பிட்டது போலச் செயல்பட்டால் புரோகிராமினை வடிவமைத்துக் கொள்ளலாம்.
முதலில், Word Options டயலாக் பாக்ஸைத் திறக்கவும்.
உங்களுடைய எம்.எஸ். ஆபீஸ் புரோகிராம், ஆபீஸ் 2007 எனில், ஆபீஸ்
பட்டனில் கிளிக் செய்து, பின்னர் காட்டப்படும் பைல்கள் பெயர்கள் உள்ள கட்டத்தி கீழாக உள்ள Word Options என்பதில் கிளிக் செய்திடவும்.
அதன் பின்னர் வந்துள்ள எம்.எஸ். ஆபீஸ் புரோகிராமில், ரிப்பனில் உள்ள File டேப்பில் கிளிக் செய்து, அதன் பின்னர் Opions என்பதில் கிளிக் செய்திடவும்.
இந்த டயலாக் பாக்ஸின் இடது பக்கம் Proofing என்ற இடத்தில் கிளிக்கிடவும்.
இங்கு Mark Grammar Errors As You Type என்பதன் அருகே தரப்பட்டிருக்கும் கட்டத்தில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.
தொடர்ந்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இனி, தமிழ், ஆங்கிலம் என எந்த மொழியில் ஆவணங்களை அமைத்தாலும், பிழைகள் சுட்டிக் காட்டும் கோடுகள் இருக்காது. மீண்டும் பிழைகள் சுட்டிக் காட்டப்பட வேண்டும் என்றால், மேலே சொன்னபடி சென்று, சுட்டிக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் டிக் அடையாளம் அமைக்கவும்.
எப்போதும் இந்த ஏற்பாடு வேண்டாம், குறிப்பிட்ட டாகுமெண்ட் அமைக்கும்போது மட்டும் எனில், மேலே சுட்டிக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் டிக் அடையாளத்தை ஏற்படுத்திவிட்டு, கீழாக, Exceptions For என்று இருக்கும் இடத்தில், அப்போதைய டாகுமெண்ட் பெயர் காட்டப்படுவதனைப் பார்க்கலாம்.
அதன் கீழாக, Hide Grammar errors in this document only என்று இருக்கும் இடத்தில் உள்ள கட்டத்தில் டிக் அடையாளத்தினை ஏற்படுத்தி, பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியே வரவும்.
இந்த ஏற்பாட்டில், நீங்கள் பயன்படுத்தும் அந்த குறிப்பிட்ட டாகுமெண்ட்டில் மட்டும் இலக்கணப் பிழைகள் சுட்டிக் காட்டப்பட மாட்டாது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக