வேர்ட் டாகுமெண்ட்களில் டேபிள்களை உருவாக்கி, அதில் டேட்டாவை இட்ட பின்னர், நெட்டு வரிசைகளை மாற்றி அமைக்க வேண்டிய தேவை ஏற்படுகையில், மாற்றத்தினை எப்படி எளிதாக மேற்கொள்ளலாம்?
இந்த தேவை பலருக்கு ஏற்படும். ஆவணத்தில் டேபிள் அமைத்த பின்னால், சில விளக்கங்களை எழுதுகையில் நெட்டு வரிசைகளை (Column) இடம் மாற்றி அமைக்க எண்ணுவோம். இதற்கான வழிகளை இங்கு பார்க்கலாம்.
டாகுமெண்ட்டினைத் திறந்து கொள்ளவும்.
எந்த நெட்டு வரிசையினை இடம் மாற்றி அமைக்க வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும்.
அடுத்து Ctrl+X கீகளை அழுத்தவும். அல்லது ரிப்பனில், ஹோம் டேப்பில், Cut என்பதில் கிளிக் செய்திடவும்.
டெக்ஸ்ட்டில் எதனையாவது தேர்ந்தெடுத்தால் தான், இந்த Cut காட்டப்படும்.
இதனால், குறிப்பிட்ட அந்த நெட்டு வரிசை நீக்கப்படுகிறது. அது பத்திரமாக, கிளிப் போர்டில் அமர்ந்து கொள்ளும்.
அடுத்து, எந்த நெட்டு வரிசைக்கு முன்பாக இதனை அமைக்க வேண்டுமோ, அந்த நெட்டு வரிசையின், முதல் செல்லுக்குச் சென்று, கர்சரை நிறுத்தவும். பின்னர், Ctrl +V அழுத்தவும்; அல்லது ரிப்பனில் உள்ள ஹோம் டேப்பில், Paste என்பதில் கிளிக் செய்திடவும்.
ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் டாகுமெண்ட்டில், Track Changes என்ற டூலை இயக்கி வைத்திருந்தால், மேலே சொல்லப்பட்ட செயல்பாடுகள் நடைபெறாது. எனவே, அந்த டூலின் இயக்கத்தினை நிறுத்திய பின்னர், இதனை மேற்கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக