'ட்ரைவர்' என்பது ஒரு வகையான சாப்ட்வேர் புரோகிராம். இது பிரிண்டர், மவுஸ் அல்லது வை பி ரெளட்டர் போன்ற சாதனங்களை, உங்கள் கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தோடு தகவல்களைப் பரிமாறிக் கொள்ள உதவுகிறது. அதே போல, இந்த புரோகிராம் மூலம், ஆப்பரேட்டிங் சிஸ்டமும், குறிப்பிட்ட சாதனத்துடன் தகவல்களைப் பகிர்ந்து கொண்டு, செயல்படுவதற்கான கட்டளைகளைத் தருகிறது.
இந்த 'ட்ரைவர்' சாப்ட்வேர் புரோகிராமினை, சாதனத்தைத் தயாரித்து வழங்கும் நிறுவனமே தயார் செய்து தருகிறது. ஆப்பரேட்டிங் சிஸ்டம் தயாரிப்பவர்கள், மைக்ரோசாப்ட் / ஆப்பிள் போன்ற நிறுவனங்கள், இந்த வகை சாதனங்கள் இயங்க, பொதுவான வரைமுறைகளை, தரத்தினை நிர்ணயம் செய்து அறிவிப்பார்கள். அவற்றின் அடிப்படையில், இந்த ட்ரைவர் சாப்ட்வேர் புரோகிராம்கள் வடிவமைக்கப்பட்டு தரப்படும். ஒரு சாதனத்தை, கம்ப்யூட்டரில் இணைத்து இன்ஸ்டால் செய்கையில், இந்த ட்ரைவர் புரோகிராம் தான் இயக்கப்பட்டு, கம்ப்யூட்டருக்கும் சாதனத்திற்குமான இணைப்பை ஏற்படுத்தித் தருகிறது.
ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் மேம்படுத்தப்படுகையில், இந்த ட்ரைவர் சாப்ட்வேர் புரோகிராம்களும் மேம்படுத்தப்பட வேண்டும். பல வேளைகளில், இவை தானாகவே மேம்படுத்தப்படும். அல்லது, மேம்படுத்தப்படும் நிலை ஏற்படுகையில், உங்களுக்கு ஒரு பாப் அப் மெனு தரப்பட்டு, இது போல குறிப்பிட்ட சாதனம் இயங்க சாப்ட்வேர் மேம்பாட்டிற்கான புரோகிராம் தயாராக உள்ளது. மேம்படுத்திவிடலாமா? என்று உங்களிடம் அனுமதி கேட்டு, நீங்கள் அனுமதி தந்த பின்னர், அது மேம்படுத்தப்படும்.
அவ்வாறு மேம்படுத்தப்படுவதே நல்லது. இதனால் தான், கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்ட ஏதேனும் ஒரு சாதனம் சரியாக இயங்கவில்லை என்றால், சாதனத்தைத் தயாரித்து வழங்கிய நிறுவனத்தின் இணைய தளம் சென்று, அதற்கான மேம்படுத்தல் தேவையா எனக் கண்டறிந்து, உடனே மேம்படுத்த வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக