பால் வெண்ணை சாப்பிட்டால் நிறைய விட்டமின் ' ஏ 'கிடைக்கும். அதற்கு வசதி இல்லாதவர்களுக்கு கிடைத்தவரப்பிரதாசம் கரட் கிழங்கு.நிரையக்கரட்ஜ சேர்த்துக்கொண்டால் அதே அளவு விட்டமின் ' ஏ ' பெறமுடியும்.
கரட்டில் "காரடீன்" என்கின்றசிறப்புப்பொருள் இருக்கிறது இதுவே விட்டமின் உண் டாவதற்குக்காரணமாக இருக்கிறது அதனால் தொத்து நோய் வராமல் விரட்டுவது.
வயிற்றில் அமிலம் காரணமாகப் புளியேப்பம், பசி மந்தம் ஏற்படுகிறதா அப்படியானால் கரட்டைத்துருவி பச்சடி போட்டுச்சாப்பிடுங்கள் அது நிவாரணமாகும்.
கொளுப்பு காரணமாக உடல் பருமனைக்குறைக்க பட்டினி இருந்தேன் அப்பிடியும் பலன் கிடைக்கவில்லையே என்ற கவலையா, கவலையை விடுங்கள் கரட்
பச்சடி அடிக்கடி சாப்பிட்டுவாருங்கள் நீங்கள் அதிசயப்படும் விதம் இளைப்பீர்கள். கொளுப்பைக்குறைக்கும் சக்தி கரட்டின் தனித்தன்மை.
கிருமிகளை நாசம் செய்யும் சக்தி கரட்டுக்கு உண்டு.இரத்தக்குறைவு காரணமாக சோகை ஏற்பட்டால் தொடர்ந்து தினம் கரட் சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் ஊறி சோகை நோய் நீங்கும். புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும் சக்தி கரட்டுக்கு உண்டு.
சிறுநீர் சம்பந்த மான கோளாறுகளை நிவர்த்தி செய்யும் ஆற்றல் கரட்டுக்கு இருக்கிறது.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கரட் சாப்பிட்டால் நோய் கொஞ்சம் கட்டுப்படும்
தோலின் மென்மைக்கும், பாதுகாப்புக்கும் விளம்பரப்படுத்தும் சோப்புகளை விட நீங்கள் கரட்டை நம்பலாம். கரட் சருமத்தைப்பாதுகாத்து மென்மை
யாகவைத்திருக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக