வியாழன், 18 பிப்ரவரி, 2010

Ms Word பிரிண்ட் டிப்ஸ்

வேர்ட் மட்டுமின்றி எந்த ஆபீஸ் தொகுப்பில் பிரிண்ட் எடுப்பதாக இருந்தாலும் சில வழிகளைப் பின்பற்றினால் அது பிரிண்ட் எடுக்கும் பக்கங்களை எடுப்பாகக் காட்டுவதுடன் பிரிண்டருக்கான கார்ட்ரிட்ஜின் வாழ்நாளும் அதிகமாகும். இந்த நோக்கத்துடன் நாம் எடுக்கக்கூடிய சில நடவடிக்கைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

ட்ராப்ட் பிரிண்டிங்:

ஒரு சிலருக்கு வேர்ட் டாகுமெண்டில் ஸ்பெல்லிங் செக், பார்மட்டிங்கினால் ஏற்பட்டுள்ள தோற்றம் ஆகியவற்றை நேரடியாகத் திரையில் பார்ப்பது நிறைவைத் தராது. அச்சிட்டு தாள்களில் வைத்துத்தான் திருத்தங்களை மேற்கொள்வார்கள். இப்படிப்பட்ட இறுதியாக்கப்படாத, அச்சுப் பிரதிகளை ட்ராப்ட் என்னும் வகையில் எடுக்கலாம். இந்த வகை பிரிண்ட்டினை தற்போது அனைத்து பிரிண்டர்களும் சப்போர்ட் செய்கின்றன. இதனை வேர்ட் தொகுப்பிலிருந்து செட் செய்திடலாம். Tools கிளிக் செய்து Options தேர்ந்தெடுக்கவும். நிறைய டேப்களுடன் Options டயலொக் பாக்ஸ் கிடைக்கும். அதில் Printஎன்னும் டேப்பில் கிளிக் செய்திடவும், இதில் “Draft Output” என்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும், பின் ஒகே கிளிக் செய்து டயலொக் பாக்ஸை மூடி பின் பிரிண்ட் எடுத்தால் டாகுமெண்ட் ட்ராப்ட் வகையில் குறைவான டோனருடன் அச்சாகும்.

ப்ராப்பர்ட்டீஸ் பிரிண்டிங்:

டாகுமெண்ட் அச்செடுககையில் பிரிண்ட் ப்ராப்பர்ட்டீஸ் தகவல்களை டாகுமெண்டிலேயே அச்செடுத்து வைத்துக்கொள்வது நமக்கு பைலிங் செய்வதிலும் பின்னர் அச்செடுப்பதிலும் உதவியாக இருக்கும். இதனை அனைத்து அச்செடுக்கும் படிகளிலும் இருக்குமாறு செட் செய்திடலாம். Tools கிளிக் செய்து Options தேர்ந்தெடுக்கவும். நிறைய டேப்களுடன் Options டயலொக் பாக்ஸ் கிடைக்கும். அதில் Print என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் “Include with document” என்ற பகுதியில் Document Properties என்ற வரியின் முன் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.

பின் ஓகே கிளிக் செய்து டயலொக் பாக்சை மூடினால் நீங்கள் அச்செடுக்கையில் ஒவ்வொரு டாகுமெண்ட்டிலும் அந்த டாகுமெண்ட் குறித்த தகவல்கள் தனியே கிடைக்கும். அலுவலகங்களில் இதனைக் கோப்பாக வைக்கையில் இந்த குறிப்புகள் பெரிதும் உதவியாக இருக்கும்.

முழுத்திரையில் பிரிண்ட் பிரிவியூ:

டாகுமெண்ட் அச்செடுக்கும் முன் அதன் தோற்றம் எப்படி இருக்கும் என்பதை பிரிண்ட் பிரிவியூ காட்டும். இதன் தோற்றம் ஸ்கிரீனில் தெரியும்போது டாஸ்க் பார் மற்றும் டூல் பார்களும் காட்டப்படும். இதனால் அதன் தோற்றத்தின் முழு பரிமாணம் நமக்குக் கிடைக்காது. இவற்றைத் தற்காலிகமாக மறைத்து பிரிண்ட் பிரிவியூ காட்சியைக் காட்டும்படி செட் செய்திடலாம்.

இதற்கு டாகுமெண்டைத் திறந்த பின்னர் Fileமெனுவில் Print Preview தேர்ந்தெடுக்கவும். அதன் பின் மேலாக உள்ள Close பட்டன் அருக்கேFull Screen பட்டன் கிடைக்கும். இதில் கிளிக் செய்தால் திரை முழுவதும் டாகுமெண்ட் Print Preview கிடைக்கும் தோற்றத்தை மதிப்பிட்டு என்ன மாற்றங்கள் செய்ய வேண்டுமோ அவற்றை மேற்கொண்ட பின்னர் கீழாக Close Ful lScreen பிரிவில் கிளிக் செய்திடலாம். அல்லது Esc கீ அழுத்தலாம்.

ரிவர்ஸ் பிரிண்டிங்:

பல பக்கங்கள் அடங்கிய டாகுமெண்ட்களை அச்செடுக்கையில் நமக்கு ஒரு எரிச்சலூட்டும் அனுபவம் கிடைத்திருக்கும். 40 பக்கங்கள் அடங்கிய ஒரு டாகுமெண்ட் பிரிண்ட் ஒன்றை எடுப்போம். அச்செடுத்த பக்கங்கள் அதன் ட்ரேயில் வந்து விழும்போது பார்க்க அழகாக இருக்கும். அதனைக் காற்றில் பறக்கவிடாமல் பிடித்துக்கொண்டிருப் போம். அச்சுப் பணி முடிந்து அவற்றை எடுத்த பின்னர் 40 ஆம் பக்கம் மேலாகவும் பக்கம் 1 அடியிலும் இருக்கும். இதனைச் சரியாக அடுக்க அந்த 40 தாள்களையும் ஒவ்வொன்றாக அடுக்க வேண்டியதிருக்கும். இந்த கம்ப்யூட்டர் பிரிண்டில் இது ஒரு தொல்லை என்று முணுமுணுத்தவாறே அடுக்க ஆரம்பிப்போம். ஏன் இந்த தொல்லை. வேர்ட் 2003 தொகுப்பு உங்களுக்கு இந்த தொல்லையை நீக்கும் வழியைக் கொண்டுள்ளதே.

கடைசி பக்கத்தை முதலில் பிரிண்ட் செய்து பின் அப்படியே இறுதியிலிருந்து முதல் பக்கம் வரை டாகுமெண்ட் ஒன்றை அச்செடுக்கும்படி செய்திடலாம். இதற்குக் கீழ்க்காணும் வழிகளில் செயல் படவும். Tools கிளிக் செய்து Options தேர்ந்தெடுக்கவும். நிறைய டேப்களுடன் Options டயலொக் பாக்ஸ் கிடைக்கும். அதில் Print என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும், இதில் “Printing option” என்ற பகுதியில் உள்ள “Reverse Print order” என்பதில் கிளிக் செய்திடவும், பின் ஓகே கிளிக் செய்து டயலொக் பாக்ஸை மூடீ வெளியேறவும்.


பிரிண்ட் பிரிவியூவில் பல பக்கங்கள்:

டாகுமெண்ட் ஒன்றின் பிரிண்ட் பிரிவியூ பார்க்கையில் ஒரு பக்கம் காட்டப்படுகிறது. ஆனால் அண்மையில் வாங்கிய உங்கள், எல்சிடி மானிட்டரில் பல பக்கங்களைக் காணும் வாய்ப்பு உள்ளது. ஏன், சிலர் இப்போது தங்கள் இல்லங்களில் உள்ள எல். சி. டி. டி.வியில் லேப் டாப் கம்ப்யூட்டரை இணைத்து அதன் திரையைப் பார்த்தவாறே கம்ப்யூட்டரில் வேலையை மேற்கொள்கிறார்கள். அப்படிப்பட்ட வசதியைக் கொண்டிருப்பவர்கள் நிச்சயம் ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களில் பிரிண்ட் பிரிவியூ காணவே விரும்புவார்கள். வேர்ட் இதற்கு வழி தருகிறது.

பேக் கிரவுண்ட் பிரிண்டிங்:

வேர்டில் பெரிய அளவிலான டாகுமெண்ட்கள் அல்லது சார்ட் மற்றும் டேபிள்கள் அடங்கிய டாகுமெண்ட்களை அச்செடுக்கையில் அதிகமாக மெமரி தேவைப்படும். அது கிடைக்காத போதும் பிரிண்டரில் தேவையான மெமரி இல்லாத போதும் அச்செடுப்பதில் பிரச்சினை ஏற்படும். இதற்குக் காரணம் வேர்ட் தொகுப்பு பின்புலத்தில் டாகுமெண்ட்களை அச்செடுப்பதே. அதாவது ஒரு டாகுமெண்ட்டை பிரிண்ட் செய்கையில் நீங்கள் அதே டாகுமெண்ட் அல்லது வேறு ஒரு டாகுமெண்டை எடிட் செய்திடலாம். இந்த வசதியை ஆஹா என நாம் வரவேற்கலாம். ஆனால் இதில் உள்ள சிக்கல் என்னவென்றால் நீங்கள் மல்ட்டி டாஸ்க்கிங் என்ற வகையில் பல்வேறு பணிகளை மேற்கொள்வதால் மெமரியின் பெரும்பாலான பகுதி அவற்றால் எடுத்துக்கொள்ளப்படும். எனவே பெரிய டாகுமெண்ட் ஒன்றின் அச்சுப் பிரதி அவசரமாகத் தேவைப்பட்டால் அல்லது நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் மிகவும் குறைவாக மெமரி இருந்தால் இந்த பேக்கிரவுண்ட் பிரிண்டிங் என்பதனைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம். இதற்குக் கீழ்க்காணும் வழிகளில் செயல்படவும்.

Tools கிளிக் செய்து Options தேர்ந்தெடுக்கவும். நிறைய option டயலொக் பாக்ஸ் கிடைக்கும். அதில் Print என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் “Backgrount Printing” என்ற பகுதியில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். முதலில் டாகுமெண்ட் ஒன்றைத் திறந்து அதன் பிரிண்ட் பிரிவியூ பெறவும். டாகுமெண்ட் எந்த அளவில் (53%) சுருக்கப்பட்டு காட்டப்படுகிறது என்று ஓர் இடத்தில் காட்டப்படும். அதற்கு இடது புறமாக நான்கு சிறிய பட்டன்கள் அடங்கிய ஒரு சதுரம் கிடைக்கும். இதில் கேசரைக் கொண்டு சென்றால் மல்ட்டிபிள் பேஜஸ் என்ற செய்தி கிடைக்கும். இதில் கிளிக் செய்தால்.

1x1

1x2

1x3

2x1

2x2

2x3

என்ற பல அளவுகள் கிடைக்கும். இவை ஒரு திரையில் எத்தனை பக்கங்களைக் காணலாம் என்ற தகவலைத் தருகின்றன. இதில் எத்தனை பக்கங்களைக் காணவிரும்புகிaர்களோ அதனைக் கிளிக் செய்தால் திரையில் அதற்கேற்ற வகையில் பிரிண்ட் பிரிவியூ பக்கங்கள் காட்டப்படும். தேவை இல்லை ஒரு பக்கமே போதும் என எண்ணினால் அந்த கட்டத்தின் இடது பக்கம் இன்னொரு சிறிய சதுரம் ஒரு பக்கம் இருப்பது போல் படத்தை வைத்துக்கொண்டு இருக்கும். அதில் கிளிக் செய்தால் மீண்டும் ஒரு பக்க பிரிண்ட் பிரிவியூ கிடைக்கும்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல