வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

கான் (Khan) காந்தியான (Gandhi) கதை

ஃப்ரோஸ் காந்திக்கும் இந்திராகாந்தி திருமணம்
இத்திருமணம் 26.03.1942 இல் அலகபாத் நகரில் நடைபெற்றது
 
தற்போதைய நிலமையில் கான் (KHAN) என்ற பெயர் அடையாளம் அமெரிக்கர்களுக்கு ஒரு அலர்ஜியான வார்த்தை என்பது உலகம் அறிந்த உண்மை. அது ஒரு புறம் இருக்க இந்திய வரலாற்றில், இந்தியாவின் நேரு பரம்பரைக்கு காந்தி என்ற அடையாளம் யாரால் வலிந்து கொடுக்கப்பட்டது? எப்படி நேரு என்ற குடும்பப்பெயர் காணாமல் போய் காந்தி எனும் பெயர் இடத்தைப் பிடித்துக்கொண்டது? இதுவரையில் அதற்கு ஒரு தெளிவான விளக்கம் கிடையாது.

அதுபற்றி ஒரு சிறு குறிப்பு....

ஜவஹர்லால் நேரு (Jawaharlal Nehru ) 1889 ஆம் ஆண்டு நவம்பர் 14ந்திகதி பிறந்தார். அவரது தந்தையார் பெயர் மோதிலால் நேரு (Motilal Nehru ), தாயாரின் பெயர் ஸ்வாருப் ராணி (Swarup Rani ). நேரு குடும்பத்தினர் காஷ்மீர் பிராமண இனத்தில் உள்ள புலவர் (Pandit) களாகும். ஜவஹர்லால் நேரு இந்தியாவின் முதல் பிரதமர் ஆவார். அவர் 1947 முதல் 1964 வரை இந்தியாவில் ஆட்சி புரிந்துள்ளார்.

நேரு,கமலா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 1917 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் திகதி பெண் பிள்ளை பிறந்தது. பிறந்தவுடன் அப்பிள்ளைக்கு வைக்கப்பட்ட பெயர் இந்திரா பிரியதர்ஷினி நேரு (Indira Priyadarshini Nehru) ஆகும். இந்திரா காலப்போக்கில் வளர்ந்து காதலில் விழுந்தார். அவரது காதலன் முஸ்லீம் மதத்தைச்சார்ந்தவர். அவரது பெயர் ஃப்ரோஸ்கான் (Feroze Khan) ஆகும். காதலித்தவரையே கைப்பிடிக்க இந்திரா முடிவெடுத்தார். ஆனால் இதற்கு இந்திராவின் தந்தை நேரு, தனது மகள் ஒரு முஸ்லீமை திருமணம் செய்வதை அரசியல் காரணங்களுக்காக விரும்பவில்லை என்றும், இந்திரா ஒரு முஸ்லீம் மதத்தவரை மணந்தால் எதிர்காலத்தில் அவர் நேரு அரசவம்ச (Nehru dynasty) உரிமையை இழக்கவேண்டி வரும் என்று நேரு பயந்ததாகவும் கூறப்படுகிறது. இவ்விடயம் நேருவிற்கு பெரிய தலயிடியாக இருந்து வந்ததுள்ளது.

இந்த நேரத்தில்தான் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு கண்டவர், நாமெல்லாம் "மகாத்மா" என்று போற்றப்படும் கரம்சந்த் மோகன் தாஸ் காந்தி அவர்கள் என்று சொல்லப்படுகிறது. "மகாத்மா" காந்தி தன்னுடைய குடும்ப பெயரை ஃப்ரோஸ்கானுக்கு கொடுத்து அவரை ஃப்ரோஸ்கான் காந்தி (Feroze Gandhi) ஆக்கினார் என்றும் இப்பெயர் மாற்றத்தை லண்டனில் சத்தியக்கடதாசி (affidavit) முடித்து இப்பிரச்சினக்கு முடிவு கட்டியதாவும் கூறப்படுகிறது.

மகாத்மா காந்தி ஃப்ரோஸ்கானை தனது பிள்ளையாக தத்து எடுத்திருந்தால் இது சாத்தியமாகக்கூடிய ஒன்று. அப்படி நடந்ததாக எந்த இடத்திலும் தெரிவிக்கப்படவில்லை. மற்றும்படி அது எப்படி நினைத்தவுடன் சம்பந்தமில்லாமல் யாரவது ஒருவர் தனது குடும்ப பெயரை மற்றவர்களுக்கு கொடுக்க முடியும் என்பது அந்த மகாத்மாவுக்குத் தான் வெளிச்சம். அத்துடன் சத்தியம் தவிர வேறு எதையுமே பேசாத எழுதாத நம் மகாத்மாவின் சத்திய சோதனையில் இந்த பெயர் மாற்ற கதை மட்டும் மிஸ்ஸிங்.!!

மகாத்மாகாந்தி பானியா/காந்தி (Bania/Gandhi ) இனத்தைச்சேர்ந்த வியாபாரிகள் என்றபடியால் இப்பெயரை நேரு ஏற்றுக்கொள்வதற்கு அரசியல் ரீதியில் எந்த தடையும் இருக்கவில்லையென்றும் ஆகையால் இதனை நேரு அவர்கள் முழுமனதுடன் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
அதன்படி இந்திரா நேரு ஃப்ரோஸ் (கான்) காந்தியை 1942 ஆம் ஆண்டு திருமணம் செய்து இந்திரா காந்தி எனும் பெயரைப்பெற்றார்.

இந்திராகாந்தியின் கணவர் ஃப்ரோஸ்கான். இவர் நவாப் கானின் மகன். நவாப்கான் பார்ஸி பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இஸ்லாமிய தந்தைக்கும் பார்ஸி தாய்க்கும் பிறந்தவர் ஃப்ரோஸ்கான். ப்ரோஸ்கானின் தாய் இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாறி நவாப்கானைத் நிக்காக் செய்து கொண்டதாகவும் ஃப்ரோஸ்கானின் தாய் வழி குடும்ப பெயர் காந்தி என்றும் சொல்லப்படுகிறது.

அதேவேளை, ஃப்ரோஸ்சின் தந்தையார் ஒரு பார்ஸி என்றும் அவரின் குடும்பப்பெயர் "GHANDI" என்றும், நாம் அழைப்பதுபோல் "GANDHI" இல்லையென்றும் அழகபாத்திலிருந்து வெளிவரும் ஒரு ஆங்கிலநாளேடு தெளிவாக்கியதாகவும், அதன்பின்னர் இவ்விடயம் பற்றி மகாத்மா காந்திதான் நேருவிடம் "GHANDI" என்று அழைப்பதற்குப்பதிலாக "GANDHI" என்று அழையுங்கள் என்று அறிவுறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. எது உண்மை எது பொய் என்று தெரியவில்லை.

மொத்தத்தில் இந்திரா , ஃப்ரோஸ்கான் திருமணத்தை எதிர்த்த நேருவுக்கு மகாத்மாகாந்தி வழங்கிய இந்த அதி அற்புதமான மந்திரவிளக்கு Khan களை காந்திகளாக்கியது தான்..

Indira with her two sons Rajeev and Sanjay

இல்லாவிட்டால் இன்று எத்தனை கான்கள் உருவாகியிருப்பார்கள் என்று தெரியுமா? (இந்திராகாந்தி கான்.  ராஜீவ்கான்,  சஞ்சேய்கான், சோனியாகான்,  ராகுல்கான்.. இப்படியாக பல கான்கள்)

இந்திராவுக்கும் கானாக இருந்த காந்தியாக மாற்றப்பட்ட ஃப்ரோஸ்காந்திக்கும் இந்திய இந்து வைதீக முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது..

ஃப்ரோஸ்காந்தி இறந்த பின் இஸ்லாமிய முறைப்படி புதைக்கப்படவோ இல்லை.பார்சிகள் முறைப்படி வல்லூறுகளுக்கு இரையாக மரணக்கிணற்றில் வீசப்படவோ இல்லை. இந்து முறைப்படி சிதைக்கு எரியூட்டினார்கள். சாம்பலை எடுத்து வந்து அலகாபாத்தில் கல்லறை கட்டப்பட்டது.

ஆனால் ஃப்ரோஸ்காந்தியின் கல்லறையை காந்தி அரச பரம்பரையில் வந்த யாரும் கண்டு கொள்ளவில்லை. ஏனெனில் உண்மையில் அது காந்தியின் கல்லறை அல்ல கானின் கல்லறை என்ற மண்ணுக்குள் புதைக்கப்பட்ட உண்மைதான்.

இப்ப அமெரிக்கா செல்ல விரும்பும் இந்த கான்கள் அதாவது காந்திகள்

MY Name is khan என்று சொல்வதற்குப் பதிலாக

MY Name is Gandhi என்று சொன்னால் அமெரிக்கா இவர்களை இன்முகத்துடன் வரவேற்கும்.

(காந்தி தீவிரவாதியாக இருக்க முடியுமா?)


இதேவேளை அண்மையில் அமெரிக்கா சென்று விமான நிலையத்தில் பல இடருப்பாடுகளுக்குள் மாட்டிக்கொண்ட நடிகர் ஷாருக்கானுக்கு இதன்மூலம் ஒரு குட்டி அட்வைஸ். ரொம்பவும் மெனக்கெட வேண்டாம். My Name is Khan, I´m not a terrorist என்றெல்லாம் சொல்லிக்கொண்டு திரியாமல், மகாத்மாகாந்தியின் வழியைப் பின்பற்றி ஒரு அஃபிடவிட் (affidavit) வாங்கி உங்கள் Khan பெயரை காந்தி என்று மாற்றிக் கொள்ளுங்கள்.  ஷாருக்காந்தி ..... சொல்வதற்கும், கேட்பதற்கும் இனிமையாகத்தான் இருக்கிறது.

அமெரிக்கர்களும் உங்களை எதிர்காலத்தில் இன்முகத்துடன் வரவேற்பார்கள்.
Image Hosted by ImageShack.us

3 கருத்துகள்:

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல