சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் நடித்த கழுகு திரைப்படம் பற்றி யாவருக்கும் நினைவிருக்கலாம். அந்த படத்தில் காட்டப்படும் ஆசிரமக் கூத்துக்களை விட பலமடங்கு மோசமான, பயங்கரமான போதை மருந்து கும்பல் இந்த கல்கி ஆசிரமத்துக்குள் பதுங்கியிருக்கிறது.
இப்போது அங்கு நடப்பதனை சன் தொலைக்காட்சி வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது.
இதுவா பக்தி… ஆசிரமங்கள் என்ற பெயரில் நடக்கும் இந்த மனநோயாளிகளின் கூடங்களை அனுமதிப்பது யார்? இதனால் யார் லாபம் அடைகிறார்கள்? இந்திய அரசு என்னதான் செய்கின்றது?
எத்தனை இளைஞர்கள், பெண்கள் சீரழிக்கப் பட்டிருக்கிறார்கள், சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்காள். ஆசிரமம் எனும் போர்வையில் இயங்கும் இந்த கிரிமினல் கூடங்களை இழுத்து மூடத் தடையாக இருப்பது எது?
சன் வீடியோ பகுதி -1
சன் வீடியோ பகுதி -2
சன் வீடியோ பகுதி -3

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக