புதன், 5 ஜனவரி, 2011

தலைநகரில் .அடக்கப்பட்ட ஒரு தமிழ்க்குரல்

இன்றைய காலகட்டத்தில் மாமனிதர் குமார் இந்நாட்டில் மூவின மக்களும் ஒற்ருமையாக வாழ்வதற்கு வற்புறுத்திய கொள்கையை வெளிப்படுத்துவது சாலப்பொருத்தமாகும்.

அமரர் குமார் பொன்னம்பலம் இயற்கையிலேயே ஒரு யதார்த்தவாதி என்பதோடு அமையாது அதனைச் செயலில் காட்டியவர். திரைமறைவுச் சங்கதிகளில் ஒளிமறைவுச் செயற்பாடுகளில் நம்பிக்கொண்டிராதவர். பதிலாக எந்த பிரச்சினையயும் நேருக்கு நேர் முகம் கொடுத்து பழகியவர். என் கடன் பணி செய்து கிடப்பதே என்பவராக, கனவிலும் தன்கடமையைத் தட்டிகழிக்க எண்ணாத குமார் பொன்னம்பலம் அவ்வண்ணம் நடப்பவர்களையும், மதிக்கவிரும்பாதவர் என்பதையும் எடுத்துக் காட்டி நின்றால் மிகையாகாது.

மூத்த தமிழ்க்கட்சியான அகில் இலங்கை தமிழ் காங்கிரஸின் செயலாளரராக இருந்தபோதும் தான் அரசியல் சதுரங்கம் ஆட விரும்பாதவர். மேலும் தனது தலைமையின் கீழ் கட்சியினையும் கூட அரசியல் விளையாட்டுக்களில் ஈடுபட அனுமதிக்காதவர்.

தமிழத்தேசிய இனத்தின் பிரச்சினைக்கான தீர்வு திம்புக் கோட்பாடுகளின் அடிப்படையிலேயே அமையமுடியும் என ஸ்திரமாக நம்பியவர் குமார். அதுவும்கூட சிங்களத்தேசிய இனமானது ஒருவகையான அரச அமைப்பின் வரைகையில் திம்பு கோட்பாடுகள் தமிழ்தேசிய இனத்தின் அடைப்படைக் கோரிக்கை என்பதனை அங்கீகரித்தால் தான் நடைமுறைச் சாத்தியம் என நம்பினார். ஏனென்றால் திம்புக்கோட்பாடு மாநாட்டில் ஐக்கியதேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியைத் தவிர மற்றும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள், விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள் எல்லோரும் சமூகமளித்த சமயமே திம்புக் கோட்பாடு சமரசமாக இந்தியயவின் மத்தியஸ்துடன் ஏற்படுத்தப்பட்டது.

திம்புவை மாமனிதர் குமார் வலியுறுத்தியதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

1. சிங்களத்தேசியமானது விசுவாசமாக தமிழ்த்தேசிய இனத்தின் நியாயமான அபிலாஷைகளை ஏற்றுக்கொள்ள முடியும் என்றால் மட்டுமே அப்படியான ஒரு தீர்வுத்திட்டத்தை வரையும் செயற்பாடுகளுக்கு முன் தமது விசுவாசமான நம்பிக்கையை வெளிப்படுத்த முடியும். அவ்விதமாக சின்களத் தேசிய இனமானது முழு உலகிற்கும் தாம் தமிழினத்தின் அபிலாஷைகளை கொள்கை அளவில் எடுத்துக்கொள்வதை எடுத்துக்காட்டும் போதுதான் தமிழ்த்தேசிய இனத்தின் அபிலாஷைகளை செயல்வடிவில் தமது சொற்பிறழாது அமையப் போகும் அரசியல் அமைப்பில் பிரதிபலிக்கச் செய்ய முடியும் என குமார் பொன்னம்பலம் நம்பினார்.

2. தமிழ் மக்களின் நியாயமான அபிலாஷைகளை சிங்களத்தேசிய இனமானது என்றும் அங்கீகரிக்கப் போவதில்லை என்று அறிந்திருந்தார். ஆதலினால் தான் எமது நியாயமான அபிலாஷைகளை வலியுறுத்துவதன் மூலம் சிங்களத் தேசியத்தின் பிற்போக்குத் தன்மையை உலகுக்கு வெளிக்காட்டலாம். அந்தவகையில் தீர்வுத்திட்டவரைபு என்று கூறிக்கொள்ளும் அவர்களின் பொய்மையை, பாசாங்குத்தனத்தை கோடிட்டுக் காட்டலாம் என நம்பினார்.

இன்றும் கூட அரசியல் அமைப்புத் தீர்வுத் திட்டம் எனும் போது அந்தப் பொய்மையும் பாசாங்குத் தனம் வெளிப்படையாக உள்ளது.

மேலும் பலர் வாசிக்காத சில நினைவுரைகளை நினைவுமலரிலிருந்து வெளிப்படுத்துவது சாலப்பொருத்தம் என எண்ணி பின்வருவனவற்றை வெளிப்படுத்துவது எமது நன்றிக்கடனாகும்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவரும் பிரபல சட்டத்தரணியும் அடங்காத் தமிழனுக்கு செலுத்தப்பட்ட கண்ணீர் அஞ்சலி (யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் 2000ஆம் ஆண்டு)

நீதிக்கும் ஜனநாயகத்துக்கும் சாவுமணி !

தமிழருக்குத் தலைவிதியோ?
தாய்மொழியின் நிலைக்குலைவோ?
விடுதலைக்கு நீதி சொன்ன சட்டத்திற்கிது விலங்கோ?
சுயமனிதச் சுதந்திரமாம் ஜனநாயக ஆட்சியிலே?
மா மனிதன் கொலை முறையோ இது தகுமோ?

கற்றறிந்த வல்லுனர்கள் மாநகரில் பலருந்தும் உண்மைக்கும் நீதிக்கும் உத்தமனாய் குரல் கொடுத்தாய்!
செம்மணிப் பக்கங்களை மீளப் புரட்டுவித்தாய்!
தமிழினத்தை தவிக்கவிட்டு சத்தியமே ஏன் சென்றதாய்? கிருஷாந்தி கொலை வழக்கில் அநீதிக்கு அடிகொடுத்தாய்!
வல்லுறவுக் கெதிராக சட்டத்தால் வாசல் கதவடைத்தாய் கற்புக்கு காவல் இல்லாத் தேசமதில் நீ இன்றேல் நித்தம் ஒரு கொலையோ தமிழினத்திற்கிது நிலையோ?
ஆழக்குரல் கொடுத்த நீதிக்கு இது நிலையோ?
ஆதவனின் அஸ்தமனம் தமிழினத்திற்கினி இருளோ?
வேதனைத் தீ ஆறாமல் எம் இனமே வெந்து அழ தமிழினத்தின் குரலே ஒரு நொடியில் அடங்கியதன் மர்மமென்ன?

ஒரு மானமுள்ள தமிழனின் நினைவாக (தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நோர்வோ 13.01.2000)

நண்பனே! சேதி கேட்டு அதிர்ந்து போனோம்.

பனைமரங்கள் அங்கு வளர்வதில்லை.

ஆனாலும், அதிசயமாய் நீயங்கு ஒற்றைப் பனைமரமாய் ஓங்கி வளர்ந்து நின்றாய்.

பற்றைக்குகந்த மண்ணில் பனை மரங்கள் எத்தனை நாள் உயிர் வாழுமென்று எப்போதும் பயந்திருந்தோம். ஈற்றில் நிகழ்ந்தது அது.

கொக்கட்டிச்சோலையிலே கொலையுண்டு போனவர்கள், கொழும்பிலே ஆயிரமாய் கூண்டுகளில் அழுதவர்கள், தாக்கியதால் கிருசாந்தி ஆனவர்கள் என்று எத்தனையோ ஈழவர்கள் இன்னல்களில் கைகொடுத்தாய்!

நீசர்களின் பொய் மதுவில் நீதி மயங்கிநின்ற உலகெங்கும் நீ சென்று உள்ளதை எடுத்துச்சொன்னாய்!

உண்மையை அடித்துச் சொன்னாய்! இனத்தின் விடுதலைக்காய் போராடி முரசடித்தாய்! நண்பா!

தன்மானள்ள தமிழனாய் நீ வாழ்ந்ததுக்கும் எவருக்கும் அஞ்சாத ஈழவனாய் நீ வாழ்ந்ததுக்கும் உனக்கு நன்றி சொல்ல நாங்கள் கூடுகிறோம். மறைந்தாலும் வாழ்பவனே! நீயும் வா!

தலைநகரில் .அடக்கப்பட்ட ஒரு தமிழ்க்குரல் (ஜனவ 14, 2000)

இரண்டாயிரமாவது ஆண்டு முடியும் வரை என்னை உயிருடன் விட்டுவைப்பார்களோ தெரியவில்லை. கொல்லப்படுவதற்கு சில நாட்களுக்கு முன் குமார் பொன்னம்பலம் பகிரங்கமாக வெளிப்படுத்தியிருந்தார். உள் உணர்வின் உந்துதல் காரணமாக அவர் எதிர்வுகூறிய அவரது இறப்பு அவர் எதிர்பார்த்தபடியே நடந்து விட்டது. 05.01.2000 அன்று கொழும்பு நகரில், அவரது மோட்டார் வண்டிக்குள் வைத்து, கயவன் ஒருவன் தன் கைத் துப்பாக்கியை இயக்கி ஐந்துகுண்டுகளை அனுப்பி குமார் பொன்னம்பலத்தின் உயிரைக் குடித்தான்.

பேரினவாதிகளின் தமிழ் விரோதக் கருத்துக்களுக்கு சுடச்சுட, ஆணித்தரமான பதில்களை வழங்கி எதிர்வாதம் புரிந்த தமிழீழ தேசப்பற்றாளர் ஒருவன் குரலை இனிநாம் கேட்கமுடியாது.

குமார் பொன்னம்பலம் கொலை செய்யப்பட்ட செய்தி ஈழத் தமிழர்கள் அனைவரினதும் குடும்பசோகமாக அமைந்து விட்டது. அவரது இழப்பிற்கு இரங்கல் தெரிவித்தும் அவரின் போராட்டப் பங்களிப்பை நினைவுகூர்ந்தும் தமிழர் தொடர்பூடகங்கள் அஞ்சலி செலுத்தி அவரைக் கௌரவப்படுத்தின. புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் நாடுகளிலும் அவருக்கு அஞ்சலி நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டன.

தொல்லைகளையும் அசட்டை செய்துவிட்டு ஆயிரக்கணக்கில் கொழும்பு நகரில் திரண்ட தமிழர்கள் அவரது புகழுடலுக்கு இறுதி அஞ்சலியைத் தெரிவித்தனர்.

கொலைப் பயறுத்தலுக்கு அஞ்சாது கொள்கையில் விலகாத தமிழன்

தமிழ் மக்களுக்கெதிரான அரசபயங்கரவாதச் செயல்களை அம்பலப்படுத்துவதிலும் தமிழினத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதிலும் மாமனிதர் குமார் எல்லோரையும் முந்திக் கொள்வார்.

சிங்களத்தின் அரசியல்வாதிகள் மற்றும் தொடர்பூடகவியலாளர்கள் தமிழினத்திற்கு எதிராக இனவாதம் கக்கினால் அவற்றிற் கெதிராக கர்ணகடூர மொழியில் பதிலிறுத்து சிங்களப் பேரினவாதத்தின் சித்தாந்தத்தளத்தைச் சிதைக்கும் வகையில் தனது கருத்துக்குண்டுகளை, குமார் பொன்னம்பலம் வீசி எறிவார்.

அத்துடன், இனவெறிச்சட்டங்களால் சிறைகளில் அடைக்கப்பட்ட தமிழ் மக்களை விடுவிப்பதற்காக தனது சட்டத்தொழிலின் பெரும்பகுதி நேரத்தை அர்ப்பணிப்புணர்வுடன் அவர் செலவிட்டார். தமிழ் அரசியல் கைதிகளில் 95 வீதமானோரின் வழக்குகளை குமார் பொன்னம்பலம் கையாண்டார். இதற்காக எதுவித கட்டணங்களையும் அறவிடாது இலவசமாகப் பணிசெய்தார். அதைத் தனது கடமை என்று வர்ணித்தார்.

இத்தகைய தமிழின சேவைக்காக குமார் பொன்னம்பலத்தைத் தண்டிக்க பேரினவாதிகள் பலதடவைகள் முயன்றனர்.

அவரது வீட்டுக்கு கைக்குண்டுவீசி அவரைக் கொல்ல முயன்றனர். தொலைபேசிவாயிலாக சதா கொலைப் பயறுத்தல்களை விடுத்தனர்.

தமது இனவெறிச் சட்டங்களுக்குள் அவரைச் சிக்கவைத்து சிறையில் அடைக்க முயன்றனர்.

சோதனை என்ற பெயரில் அவரை அவமானப்படுத்தியும் தொல்லைகள் கொடுத்தும் அவரைப் பழிவாங்க முயன்றனர்.

ஆனால், குமார் பொன்னம்பலம் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. மாறாக, தனது செயற்பாடுகளை அவர் தீவிரப்படுத்தி பதிலடி கொடுத்தார்.

சட்டத்திற்கு புறம்பானவகையில் தமிழர்களைத் தொல்லைப்படுத்தும் “பாஸ்' நடை முறை மற்றும் அடையாள அட்டைகளுடன் உலாவவேண்டும் என்ற படையினரின் உத்தரவுகளை தான் நேரடியாகச் சந்திக்கும்போது அவற்றிற்குப் பணிய மறுத்து சம்பந்தப்பட்ட வர்களுக்கு சட்டரீதியாகச் சவால்கள் விடுத்தார்.

புறச்சூழலின் நெருக்கடிகள் கொலைப் பயறுத்தல்களைப் பற்றிக் கவலைப்படாமல் சொல்ல வேண்டியவற்றை சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லவேண்டுமென்ற மனத் துணிவு, இந்த மனத்துணிவை செயலாக மாற்றும் வீரம் குமார் பொன்னம்பலத்திடம் இருந்தது. தமிழரின் போராட்டத்திற்கு ஆதரவாக வெளி நாடுகளில் பணிசெய்துவிட்டு கொழும்பு திரும்பும்போது விமானநிலையத்தில் வைத்து சோதனை என்ற பெயரில் அவமானப்படுத் தப்படுவதை பொறுமையுடன் அனுமதிப்பார்.

அதிகாரிகள் தேடும் ஆவணங்களை பயணப் பெட்டிக்குள் வைத்துக் கொண்டு வரும் முட்டாள் நானில்லை என்று கூறி, அந்த ஆவணங்களை சேரவேண்டிய இடத்திற்கு சேரவேண்டிய வழிமுறையில் அனுப்பி வைக்கும் விஞ்ஞான வழிமுறைகள் உண்டென்ற சாதாரண அறிவுகூட சோதனை போடுபவர்களுக்கு இல்லை என்ற துணிச்சலுடன் கேலிபேசி அவமதிப்புக்கு பதிலடியாக சொல்லடிகள் கொடுத்து அவற்றை பத்திரிகைகளுக்கு அனுப்பியும் வைப்பார்.

வடக்கு கிழக்கில் அரசாங்கப்படைகளினால் கைது செய்யப்பட்டு தமிழர்கள் சித்திரவதைகளை அனுபவித்தபோதும், கொழும்பில் காரணம் இன்றி தமிழர்கள் கைது செய்யப்பட்டபோதும், சிறைக்கூடங்களில் தமிழ் கைதிகள் மீது அடக்குறைகள் பிரயோகிக்கப்பட்டபோதும் துணிந்து சென்று வாதாடி அவர்களை மீட்டவர் குமார் பொன்னம்பலம் தான்.

ஒரு முறை சிங்களத் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்தபோது, அரசின் தமிழர் விரோதப் போக்குகளை வெளிக்கொணர்ந்ததாலும் சிங்கள இராணுவத்தின் அட்டூழியங்களை அம்பலப்படுத்தியதாலும் பேட்டியின் பின் உளவுத்துறையினரால் கடுமையான விசாரணைக்கு குமார் பொன்னம்பலம் உட்படுத்தப்பட்டார். இவ்விசாரணை நடவடிக்கைகளின்போது அரசின் சவாலை உறுதியாக எதிர்கொண்டார். தன் மீதான விசாரணையின் போது ஒரு கட்டத்தில் அவர், நான் ஸ்ரீலங்காவில் நடைறையில் இருக்கும் சட்டங்களுக்கு எதிராக நடந்து கொள்ளவில்லை.

சட்டம் தடைசெய்த எதனையும் நான் புரியவில்லை. நீதித்துறையிடம் எனது பிரச்சினையை விட்டுவிடுங்கள். அவர்கள் விசாரித்து தண்டனை வழங்கட்டும் என்றார். அதேவேளை, ஸ்ரீலங்கா அரசு தமிழர்கள் மீது பாரபட்சம் காட்டுகிறது. மற்ற சமூகத்தினரை விட தமிழ்ச் சமூகம் வேறுபடுத்தி பார்க்கப்படுகிறது. என அதே நீதித்துறையின் மீது அடிப்படை மனித உரிமைமீறல் வழக்கொன்றையும் தாக்கல் செய்தார்.

செம்மணி வழக்கு விசாரணைகளில் பங்கு பற்ற யாழ். குடாவுக்குச் செல்லமுயன்ற அவர், பாதுகாப்பு அமைச்சின் அனுமதி இல்லை என்ற காரணத்தால் பயணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இதனை எதிர்த்து குமார் பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராகவே வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், யாழ். குடாவுக்குச் செல்ல அனுமதி தேவையில்லை என்ற குமாரின் விண்ணப்பத்தை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுப்பதற்கு அனுமதி வழங்கி திகதி நிர்ணயித்தது. இப்படி ஏராளமான சம்பவங்களை கூறிக்கொண்டே போகலாம்.

குமார் பொன்னம்பலத்தை மிகச் சாதாரண மனிதர் என்றே கூறலாம். பல தடவைகள் அவரது நண்பர்கள் அவரது பாதுகாப்பில் அக்கறை செலுத்தவேண்டும் எனக் கூறிய போதும் அவர், சாதாரணமாகவே கொழும்பு வீதிகளில் நடமாடினார். அவர் தான் சந்திக்கக் கூடிய இன்னல்களையும் சிக்கல்களையும் என்றுமே எண்ணிப் பார்க்கவில்லை. எல்லோரையும் நம்பினார். அவருக்கு ஏராளமான சிங்கள நண்பர்கள். வயது வித்தியாசம் இன்றி எல்லோருடனும் பழகக்கூடியவர். அவரது தமிழ் வார்த்தைப் பிரயோகம் மிக அழகானது. பேசும் போதுகூட மிகச் சாதாரண சொற்றொடர் களையே பாவிப்பார். ஆனால், வானொலி, தொலைக்காட்சி பேட்டிகளில் மிக ஆழமான வசனங்களை அவர் கையாள்வது வழக்கம்.

அவரது இழப்பை அறிந்த சாதாரண தமிழனின் மனம், “இவரேன் தனியாக வெளிக்கிட்டுப் போனவர்? உயிருக்கு ஆபத்து என்றால் பாதுகாப்புடன் செல்வது தானே என எண்ணலாம். ஆனால், அவர் தனது பாதுகாப்புக்காக எப்பொழுதுமே பாதுகாவலர்களை வைத்துக்கொண்டதில்லை. ஒருமுறை ஓர் பத்திரிகையாளர் அவரை சந்தித்த பொழுது அவரது பாதுகாப்புப் பற்றி கவலைப்பட்டார்.

சிங்களவர்கள் முன் மிகக்கடுமையான விமர்சனங்களை வைக்கின்றீர்களே? நீங்கள் கொஞ்சம் பாதுகாப்பாக இருப்பது நல்லது தானே எனக் கூறினார். அதற்கு குமார், எனது உயிருக்கு எப்போதோ குறிவைக்கப்பட்டு விட்டது. ஆனால், அதற்கெல்லாம் பயந்து உயிர்வாழ வேண்டிய அவசியம் இல்லை.

அல்லது உயிருக்கு பயந்து வெளிநாடு சென்று வாழவேண்டிய நிலையிலும் நான் இல்லை என துணிவுடன் பதிலளித்தார்.

சாவரக்கன் தன்னை நெருங்கிவிட்டான் என்பது குமார் பொன்னம்பலத்திற்கு நன்றாகத் தெரிந்திருந்தும் தனது சாவை எதிர்வுகூறும் அளவுக்கு அது அவருக்குத் துல்லியமாகத் தெந்தது. எனினும் உயிருக்கு அஞ்சி கொள்கையில் பின்வாங்கி அடிபணிய அவர் விரும்பவில்லை.

தொகுப்பாளரின் குறிப்பு

இந்நாட்டில் இனவாதம் அதிகரித்துக் கொண்டிருக்கும் காலத்தில் மூவினமக்களும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதற்காக மாமனிதர் குமார் துணிச்சலுடன் கையாண்ட வழி வகையை பத்திரிகை ஆசியர் லசந்தா விக்கிரமதுங்க வெளிப்படுத்தியதை இன்றைய தினத்தில் மீண்டும் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

ஏறக்குறைய மூன்றரை வருடங்களாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி (அப்பொழுது ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தலைவராக இருந்த காலம்) மற்றும் இடதுசாரிக் கட்சிகள் ஸ்லீம் கட்சிகள், தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் இயக்கங்களாக இருந்து அரசியல் கட்சிகளாக மாறிய கட்சிகளுடன் சேர்ந்து தேர்தல் விஞ்ஞாபனத்தை 1989ஆம் ஆண்டு தயாரித்து ஏற்றுக் கொண்டனர். இந்திய அமைதிப்படை முக்கியமாக வன்னியை சுற்றி வளர்த்துக் கொண்டிருந்த காலம் தன்னுடன் அனுரா பண்டாரநாயக்க, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ரத்வத்த, லசந்த விக்கிரமதுங்க ஆகியோரை அழைத்து வன்னிக்குச் சென்று விடுதலைப்புலிகளைச் சந்தித்து அத்தேர்தல் விஞ்ஞாபனத்தை சமர்ப்பித்து அதை ஏற்கும்படி முயற்சி செய்தார்.

அதன்பின் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட பிரேமதாசவை எதிர்த்து சுதந்திரக்கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரித்து இலங்கை முழுவதும் தமிழ், சிங்கள, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தேர்தல் பிரசாரத்தைச் செய்தவர் குமார் பொன்னம்பலம்.

மாமனிதர் குமார் கையாண்ட வழியை இந்த நாட்டில் எந்த அரசியல் தலைவர்களாகினும் செய்யவில்லை என்பதைக் கூறிவைக்க விரும்புகின்றேன். அக்கொள்கையை தொடர்ந்தும் மாமனிதர் குமார் செயற்படுத்த முடியாத காரணம் ஏற்பட்டது. ஏன் என்றால், ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்ற காரணத்தினால் 1989ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின் ((D. PA Manu Festo)வை ஏற்றுக் கொண்டு செயற்படவில்லை.

ஆகையினால் மாமனிதர் குமார் 1989ஆம் ஆண்டுக்குப் பின் தனது அரசியல் வழியை மாற்றி தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைக்காக செயற்படத் தொடங்கினார் என்பதை இன்று ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். எது எவ்வாறாயினும் இறுதிக்காலத்தில் திம்புக் கோட்பாட்டு அடிப்படையில் இந்நாட்டின் இனப் பிரச்சினையை தீர்க்கப்படவேண்டும் என்பதை இந்நாட்டிலும் வெளிநாட்டிலும் வற்புறுத்தி பிரசாரம் செய்து வந்தவர் என்பதையும் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

தொகுப்பு கமுதர்
க.மு.தர்மராசா
பிரசித்த நொத்தாரிசும் சட்ட உதவியாளரும்
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல