வெள்ளி, 24 செப்டம்பர், 2010

தொகுப்பு 8


பலருக்கு பயனாக அமையும் என்பதால் பல தளங்கள், வலைப்பதிவுகளில் இருந்து எடுத்து அவற்றை இங்கு தொகுத்து வழங்குகின்றேன்



டாகுமெண்ட் தயாரிப்பில் ஈடுபடுகையில், அவ்வப்போது அவை தாமாகவே சேவ் செய்யப்படும் வழி

மின்சார சப்ளை இல்லாமல், கம்ப்யூட்டர் நின்று போகும் நிலையில், நாமாக இறுதியாக சேவ் செய்த நிலையில் தான், டாகுமெண்ட்கள் கிடைக்கும். கண்ட்ரோல் + எஸ் அழுத்தி சேவ் செய்திட்டால் இதிலிருந்து தப்பிக்கலாம்.

ஆனால் டாகுமெண்ட் களைத் தயாரிக்கும் சுவராஸ்யத்தில் இதனை மறந்து போகிறோம். இது போன்ற சம்பவங்களிலிருந்து டாகுமெண்ட்டைக் காப்பாற்ற வேர்ட் தானாக சேவ் செய்திடும் வழி ஒன்றினைக் கொண்டுள்ளது. இதனை செட் செய்திட Tools, Options சென்று Save டேப்பில் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவைப் பார்க்கவும். ‘ ‘Save AutoRecover info every’ என்னும் ஆப்ஷனுக்கு எதிரே உள்ள பாக்ஸில் டிக் அடையாளம் இருப்பதை உறுதி செய்திடவும். அதற்கு எதிராக ‘minutes’ என்னும் பாக்ஸ் இருப்பதைப் பார்க்கலாம். அதில் எத்தனை நிமிடங்களுக்கு ஒரு முறை நீங்கள் தயாரிக்கும் டாகுமெண்ட் சேவ் செய்யப்பட வேண்டும் என விரும்புகிறீர்களோ அதனை டைப் செய்திடவும். இதற்கு அதனுடன் தரப்பட்டிருக்கும் மேல் மற்றும் கீழ் அம்புக் குறிகளைப் பயன்படுத்தவும் செய்யலாம்.


Website

வெப்சைட்டில் ஏதேனும் ஒரு தளத்திற்கு லிங்க் கொடுக்கப்பட்டிருந்தால் அந்த இடத்தில் கர்சரைக் கொண்டு சென்று மவுஸின் வீலை அழுத்தினால் அந்த தளம் புதிய டேப்பில் திறக்கப்படும்.

ஒரு வெப்சைட் தளத்தை மூட CTRL+W அழுத்தவும். அவ்வாறு மூடிய தளத்தை மீண்டும் உடனே பெற வேண்டுமாயின் ctrl+Shft+T கீகளை அழுத்தவும். வெப்சைட்டின் பக்கம் ஒரு திரையைத் தாண்டி கீழாகச் செல்கிறதா? கீழே சென்று பார்க்க வேண்டுமா? ஜஸ்ட் Space bar தட்டவும். கீழே போன பின் மீண்டும் அப்பக்கத்தின் மேல் பகுதிக்குச் செல்ல வேண்டுமா? shft + space bar தட்டவேண்டும்.


இணைய முகவரி

இன்டர்நெட் தளப் பெயர்களில் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஒரு காலத்தில் com, .org, .gov மற்றும் mil போன்ற சில மட்டுமே இருந்தன. பின்னர் ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்தனி பெயர் ஒட்டுகள் தரப்பட்டன. மற்ற வகைகளிலும் அதிகமான எண்ணிக்கையில் பெயர்கள் அனுமதிக்கப் பட்டன. இந்தியாவிற்கென .in அனுமதிக்கப் பட்டது. இப்போது in க்குப் பதிலாக .bharat என்ற பெயர் அனுமதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து முதல் கட்டமாக, இந்தியாவின் ஏழு மாநில மொழிகளில் இது அனுமதிக்கப்பட இருக்கின்றன. அடுத்த ஆண்டு இதற்கான அனுமதி கிடைக்கலாம். தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, வங்காளி, உருது மற்றும் குஜராத்தி மொழிகளில் பெயர்களை அமைக்க இந்திய அரசு கேட்டுள்ளது. அடுத்த கட்டத்தில் அனைத்து 22 மொழிகளிலும் அமைக்கும் வகையில் அனுமதி பெறப்படும் என தகவல் தொழில் நுட்பம் மற்றும் தொலைதொடர்புத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி கோவிந்த் தெரிவித்துள்ளார்.


லொகேஷன் பாருக்கு கர்சரைக் கொண்டு சென்று வேறு சைட்டுகளின் முகவரியை அமைக்க வேண்டுமா? அல்லது வேறு தேடல்களை மேற்கொள்ள வேண்டுமா? கர்சரை அட்ரஸ் பார் அல்லது லொகேஷன் பாருக்குக் கொண்டு செல்ல CTRL + L அழுத்தவும். இதே போல சர்ச் பாக்ஸ் கொண்டு செல்ல CTRL + K அழுத்தவும். பார்த்துக் கொண்டிருக்கும் வெப்சைட்டை ரெப்ரெஷ் செய்திட CTRL + R அழுத்தவும்.


பாப் அப் பிளாக்கர்

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்தும்போது அதில் உள்ள பாப் அப் பிளாக்கர், நன்றாகச் செயல்பட்டு பாப் அப் விண்டோவினைத் தடுக்கிறது. ஆனால் சில வேளைகளில் நல்ல தகவல் களைத் தாங்கி வரும் பாப் அப் விண்டோக்களும் தடை செய்யப்படுகின்றன. இந்த பிரச்னையை எப்படித் தீர்ப்பது?

பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர்களில், நீங்கள் அனுமதிக்கும் பாப் அப் செய்திகளுக்கான ஒயிட் லிஸ்ட் போன்ற ஒன்றைத் தயாரிக்கும் வசதி தரப்பட்டுள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர், எக்ஸ்பியில் பயன்படுத்துவதாக எழுதி இருக்கிறீர்கள். குறைந்தது சர்வீஸ் பேக் 2 வைத்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். இன்டர்நெட் எக்ஸ்புளோரர்ல் Tools>>Pop Up Blocker என்று செல்லவும். இதில் Pop Up Blocker Settings என்று கிடைக்கும். இப்போது ஒரு சிறிய பாக்ஸ் கிடைக்கும். இதில் நீங்கள் "Address of Web site to allow" என்று இருக்கும் இடத்தில், எந்த இணைய தளங்களில் இருந்து வரும் பாப் அப் விண்டோக்கள் தேவையோ, அவற்றின் முகவரிகளை டைப் செய்திடவும். பின் "Add" என்ற பட்டனில் கிளிக் செய்து வெளியேறவும். இனி அந்த தளத்திற்குச் சென்றால், இந்த தளம் தரும் பாப் அப் விண்டோக்கள் தடையின்றி வருவதனைக் காணலாம்.

மொஸில்லாவின் பயர்பாக்ஸ் தொகுப்பிலும் இந்த வசதி தரப்பட்டுள்ளது. Tools/Options சென்று Content டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் "Block Popup Windows" என்ற இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்தப்பட்டிருந்தால், "Exceptions..." என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இதில் நீங்கள் விரும்பும் தளத்தின் முகவரியினை டைப் செய்து, அதன் பின் "Allow" பட்டனை அழுத்தவும். இது அந்த தளத்திற்கு பாப் அப் தடையை நீக்கிவிடும்.



ஆட்/ரிமூவ் புரோகிராம்ஸ்

கண்ட்ரோல் பேனலில் கிடைக்கும் ஆட்/ரிமூவ் புரோகிராம்ஸ் என்பதில் பார்த்துக் கொண்டிருக்கையில் ஒருபுறம் Set Program Access and Defaults எனத் தரப்பட்டிருந்தது. இதன் பொருள் என்ன? இதனால் என்ன பயன்?

உங்கள் கம்ப்யூட்டரில் மேற்கொள்ளும் சில வேலைகளுக்கான புரோகிராம்களை மாறா நிலையில் செட் செய்திட இந்த Set Program Access and Defaults வசதியினைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, இணையத்தில் பிரவுஸ் செய்திட பயர்பாக்ஸ், இமெயில் பெற தண்டர்பேர்ட், போட்டோ பார்க்க பிக்சர் மேனேஜர், பாட்டு கேட்க விண் ஆம்ப் என ஒவ்வொரு வேலைக்கும் ஒரு புரோகிராமினை நீங்கள் விரும்பலாம். பாடல் பைல் ஒன்றைக் கிளிக் செய்தால், விண் ஆம்ப் இயக்கப்பட்டு அந்த பாடல் ஒலிக்கப்பட வேண்டும் என நீங்கள் விருப்பப்படலாம். இப்படி குறிப்பிட்ட புரோகிராம்களை, குறிப்பிட்ட பணிகளுக்கு செட் செய்த பின்னர், அந்த புரோகிராம்கள் டிபால்ட், அதாவது மாறா நிலையில் உள்ள, புரோகிராம்கள் என அழைக்கப்படும். அவ்வாறு அமைத்திட இந்த வசதியினைப் பயன்படுத்தலாம். ஆனால் ஓர் எச்சரிக்கை. இதனை மேற்கொள்ள நீங்கள் அட்மினிஸ்ட்ரேட்டராகக் கம்ப்யூட்டரை அணுகி இருக்க வேண்டும்.



கிளிப்போர்ட்

விண்டோஸ் இயக்கத்தில் தரப்பட்டுள்ள கிளிப் போர்டில் அப்போது உள்ள டெக்ஸ்ட் அல்லது காப்பி செய்யப்பட்டதைப் பார்க்க விண்டோஸ் கீ அல்லது ஸ்டார்ட் அழுத்தி, கிடைக்கும் மெனுவில் ரன் பாக்ஸைத் தேர்ந்தெடுங்கள். பின் அதில் Clipbrd என டைப் செய்திடவும். உடனே கிளிப் போர்டு விண்டோ கிடைக்கும். அதில் நீங்கள் காப்பி செய்தவை காட்டப்படும்.


இணைய தளம்

படங்கள், போட்டோக்கள் விதம் விதமாய்ப் பெற மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் இமேஜ் கிராபிக்ஸ் வரைகலைஞர்களுக்கான போட்டோக்கள் மற்றும் படங்களைத் தரும் ஓர் அருமையான இணைய தளம் ஒன்றைக் காண நேர்ந்தது. இந்த தளத்தின் பெயர் Open Photo. இது ஒரு போட்டோக்களின் இருப்பு நிலையம் என்றே கூறலாம். வியக்கத்தக்க பல போட்டோக்கள், கலைப் படங்கள் இதில் காட்டப்படுகின்றன. போட்டோக்களின் வகை (Categories) குறித்து இதில் தேடி, படங்களைப் பெறலாம். ஏதேனும் ஒரு போட்டோவில் கிளிக் செய்தால், அந்த வகைப் படங்கள் நமக்கு நிறையக் காட்டப்படும். பெரும்பாலும் இலவசமாக டவுண்லோட் செய்யக் கூடிய வகையில் தான் இவை இங்கு தரப்படுகின்றன. கட்டணம் செலுத்திக் கிடைக்கும் படங்களும் இதில் உள்ளன. இந்த தளம் காட்டும் Categories டேப்பில் கிளிக் செய்தால், அனைத்து வகைகளும் அவற்றின் பெயருடன் பட்டியலிடப்படுகின்றன. தேவையான வகையினைத் தேடிப் பார்த்து, போட்டோக்களை டவுண்லோட் செய்து கொள்ளலாம். ஒவ்வொரு இமேஜில் கிளிக் செய்திடுகையில், அதன் வலது பக்கத்தில், அந்த படத்திற்கான உரிமம் குறித்த தகவல்கள் காட்டப் படுவதனைக் காணலாம். வெவ்வேறு வகையான உரிமங்கள் தரப்பட்டு, அவற்றை எப்படிப் பயன்படுத்தலாம் என்றும் காட்டப்பட்டுள்ளன.

நம் இணைய தளங்கள், பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் ஸ்லைடுகள் மற்றும் நாம் தயாரிக்கும் சொந்த வாழ்த்து அட்டைகளில் பயன்படுத்த இந்த தளத்தில் பலவகையான படங்களைக் காணலாம். எதற்கும் ஒரு முறை சென்று பார்த்து நல்லதெனத் தெரிந்தால், புக் மார்க் செய்து பயன்படுத்துங்கள். இந்த தளத்தின் முகவரி: http://www.openphoto.net

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல