வெள்ளி, 31 டிசம்பர், 2010

வீடியோ கொன்வேர்ட்டர்

கடந்த 10 ஆண்டுகளில் வீடியோ இயக்கும் சாதனங்களின் எண்ணிக்கையும், வகையும் அதிகரித்துள்ளன. வீடியோ கேம் சாதனங்கள், மொபைல் போன்கள், எம்பி 3 பிளேயர்கள், லெப்டொப் கொம்பியூட்டர்கள், நெட்புக் மற்றும் டெஸ்க்டாப் கொம்பியூட்டர்கள் என இந்தப்பட்டியல் தொடர்கிறது.

ஒவ்வொரு சாதனம் வீடியோ பைல்களை இயக்க தனித்தனி வரையறைகளைக் கொண்டுள்ளன. இந்த சாதனங்களுக்கேற்ற பார்மட்டுகளில் வீடியோ பைல்கள் இருக்க வேண்டியது கட்டாயமாகிறது. இவற்றுடன் திரை அளவு மற்றும் ரெசல்யூஷன் அளவுகளும் வீடியோ இயக்கத்திற்கு வரையறைகளைத் தருகின்றன. எனவே, வீடியோ பைல்களை இந்த சாதனங்களில் இயக்க முயற்சிக் கையில், அவற்றின் பார்மட் வரையறைகளை, அந்த சாதனங்களுக்கேற்ற வகையில் மாற்றி அமைக்க வேண்டியுள்ளது.

பார்மட் மாற்றம் ஓர் அவசியத் தேவையாகிவிட்ட சூழ்நிலையில், இதற்கு உதவிட பல இலவச புரோகிராம்கள், இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றில் மிக அதிகமாகப் பயன்படக்கூடிய புரோகிராம் ஹேம்ஸ்டர் பிரீ வீடியோ கன்வர்டர் (Hamster Free Video Converter) ஒன்று.

இந்த புரோகிராம் விண்டோஸ் ஓப்ப ரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கக்கூடியது. வீடியோ பார்மட் மாற்றம் மூன்று நிலைகளில் மிக வேகமாக மாற்றப்படுகிறது.

ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட வீடியோக்களை ஒரே நேரத்தில் மாற்றுகிறது. முதலில் வீடியோ பைல்களை மொத்தமாக இதன் இன்டர்பேஸுக்குள் இழுத்து அமைத்து விடலாம். ஏறத்தாழ அனைத்து வீடியோ பார்மட்டுகளுக்கு கிடையேயும் (AVI, MPG, WMV, MPEG, FLV, HD, DVD, M2TS மற்றும் பிற) இந்த புரோகிராம் மாற்றத்தினை ஏற்படுத்தித் தருகிறது.

இரண்டாவது நிலையில் மாற்றத்திற்கான வரையறைகளை தேர்ந்தெடுக்கிறோம். பைல் பார்மட் அடிப்படையில் மட்டு மின்றி சாதனங்களுக்கு ஏற்ற வகையிலும் இது பார்மட்டை மாற்றித்தருகிறது. எடுத்துக் காட்டாக, ஐபேட், ஐபோன், எக்ஸ் பாக்ஸ், பிஎஸ் 3, ஆப்பிள் டிவி, பிளாக்பெரி, ஐரிவர் என சாதனங்களின் பெயர்களைக் கொடுத்தும் வீடியோ பைல்களின் பார்மட்டினை மாற்றிக் கொள்ளலாம்.

எந்த பார்மட்டில் வெளியாக வேண்டுமோ, அதற்கான வீடியோ தன்மை, ரெசல்யூசன், கோடக் பைல் ஆகியவற்றையும் தேர்ந்தெடுக்கலாம். இவை அனைத்தையும் முடித்த பின்னர், இறுதி பட்டன் அழுத்தி மாற்றம் மேற்கொள்ள கட்டளை இடலாம். நாம் பயன் படுத்தும் கொம்பியூட்டரின் செயல் வேகத் திற்கிணங்க, வீடியோ பார்மட் மாற்றம் ஏற்படுத்தப்படும். இந்த புரோகிராமின் சிறப்பு, வீடியோ பைல் பார்மட்டுகள் குறித்து அவ்வளவாக அறியாதவர்கள் கூட இந்த புரோகிராம் மூலம் தங்கள் வீடியோ பைல்களை மாற்றி கொள்ளலாம். அந்த அளவிற்கு எளிமையான வழி நடத்துதல் தரப்பட்டுள்ளன.

இதனை இலவசமாக டவுண்லோட் செய்திட http://videoconverter.hamstersoft.com/en/ என்ற முகவயில் உள்ள இணையதளம் செல்ல வேண்டும். விண்டோஸ் இயக்கத்தில் 32 பிட் மற்றும் 64 பிட் இயக்கத்திற்கான தனித்தனி புரோகிராம்கள் தரப்பட்டுள்ளன. விண்டோஸ் 7 இயக்கத்திற்கும் இணைவாக மாற்றத்தை மேற்கொள்ளலாம்.

அத்துடன், இந்த புரோகிராம் குறித்த தகவல்கள் 40 மொழிகளில் கிடைக்கின்றன.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல