இது ஒரு போட்டோக்களின் இருப்பு நிலையம் என்றே கூறலாம். வியக்கத்தக்க பல போட்டோக்கள், கலைப் படங்கள் இதில் காட்டப்படுகின்றன. போட்டோக்களின் வகை (Categories) குறித்து இதில் தேடி, படங்களைப் பெறலாம். ஏதேனும் ஒரு போட்டோவில் கிளிக் செய்தால், அந்த வகைப் படங்கள் நமக்கு நிறையக் காட்டப்படும். பெரும்பாலும் இலவசமாக டவுண்லோட் செய்யக் கூடிய வகையில் தான் இவை இங்கு தரப்படுகின்றன.
கட்டணம் செலுத்திக் கிடைக்கும் படங்களும் இதில் உள்ளன. இந்த தளம் காட்டும் Categories டேப்பில் கிளிக் செய்தால், அனைத்து வகைகளும் அவற்றின் பெயருடன் பட்டியலிடப்படுகின்றன. தேவையான வகையினைத் தேடிப் பார்த்து, போட்டோக்களை டவுண்லோட் செய்து கொள்ளலாம். ஒவ்வொரு இமேஜில் கிளிக் செய்திடுகையில், அதன் வலது பக்கத்தில், அந்த படத்திற்கான உரிமம் குறித்த தகவல்கள் காட்டப் படுவதனைக் காணலாம். வெவ்வேறு வகையான உரிமங்கள் தரப்பட்டு, அவற்றை எப்படிப் பயன்படுத்தலாம் என்றும் காட்டப்பட்டுள்ளன.
நம் இணைய தளங்கள், பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் ஸ்லைடுகள் மற்றும் நாம் தயாரிக்கும் சொந்த வாழ்த்து அட்டைகளில் பயன்படுத்த இந்த தளத்தில் பலவகையான படங்களைக் காணலாம். எதற்கும் ஒரு முறை சென்று பார்த்து நல்லதெனத் தெரிந்தால், புக் மார்க் செய்து பயன்படுத்துங்கள். இந்த தளத்தின் முகவரி: http://www.openphoto.net/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக